வெள்ளி, 30 நவம்பர், 2018

நீர்வளநிலவள திட்ட பணிகளுக்காக 2,200 ஏரிகளை தேடும் அதிகாரிகள்: உலக வங்கி கடன் வட்டியாக குட்டிபோடும் சூழல்

பல்வேறு நிதியுதவின் கீழ் ஆயிரக்கணக்கான ஏரிகள் புனரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், நீர்வளநிலவள திட்ட மூன்றாம் கட்ட பணிகளுக்காக 2,200 ஏரிகளை அதிகாரிகள் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பாசன உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் நீர்வள,நிலவள திட்டம் இரண்டாம் பாகம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தன் மூலம் இந்த திட்டத்தின் மூலம், ரூ.2131 கோடி செலவில் 4778 ஏரிகள் மற்றும் 477 அணைகட்டுகள் புனரமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. நான்கு கட்டங்களாக இப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கைக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. முதல்கட்டமாக, ரூ.780 கோடி செலவில் 1,200 ஏரிகள் புனரமைப்பு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக 2,200 ஏரிகள் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத ஏரிகள் இருந்தால், அந்த ஏரிகளை கண்டறிந்து உடனடியாக திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்வளநிலவள திட்டத்தின் முதல்பாகத்தில் 5 ஆயிரம் ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியின் கீழ் ஆயிரக்கணக்கான ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.1,513 ஏரிகளும் புனரமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது கட்டமாக 1511 ஏரிகளுக்கு புனரமைப்பு பணி நடந்து வருகிறது. மூன்றாவது கட்ட பணிகளுக்கான வேலைகளை தொடங்கவும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் விருப்ப திட்டம் என்பதால் இப்பணிகளுக்கு பொறியாளர்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நீர்வளநிலவள திட்டத்தில் 2,200 ஏரிகளை தேட வேண்டிய நிலையில் பொறியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் புனரமைப்பு பணிகள் முடிந்து 2 முதல் 3 ஆண்டுகள் ஆன ஏரிகளில் மீண்டும் புனரமைப்பு பணி மேற்கொள்ளலாமா என்று நீர்வளநிலவள திட்ட இயக்குனரகத்திடம் கேட்டுள்ளது. இந்த நிலையில், நீர்வளநிலவள திட்டத்தின் முதற்பாகத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படாத ஏரிகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக அனுப்பி வைக்குமாறு நீர்வள நிலவள திட்ட இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதனால், அந்த ஏரிகளில் புனரமைப்பு பணிக்கான திட்ட அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு திட்ட பணிகளுக்கு நிதி ேதவைப்படும் நிலையில், உல வங்கி கடனை வீணாக செலவு செய்து வருகிறது. இதற்கு வட்டிமேல் வட்டி செலுத்தியாக வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.