திங்கள், 12 அக்டோபர், 2020

பொதுக்கல்வியில் கேரளம் மற்றுமொரு சாதனை.... முதல் ‘முழு டிஜிட்டல் மாநிலம்’ இன்று அறிவிப்புதிருவனந்தபுரம்:உலக பொதுக் கல்வி வரலாற்றில் இடம்பிடித்துள்ள கேரளம் மீண்டும் முதலிடத்தில்உள்ளது.

பொதுக்கல்வியில் 

கேரளம் மற்றுமொரு சாதனை.... 

முதல் ‘முழு டிஜிட்டல் மாநிலம்’ 

இன்று அறிவிப்பு

திருவனந்தபுரம்:
உலக பொதுக் கல்வி வரலாற்றில் இடம்பிடித்துள்ள கேரளம் மீண்டும் முதலிடத்தில்உள்ளது. 

ஒன்று முதல் 12 வகுப்புகளுக்கு முழுபள்ளியையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் கேரளா நாட்டின் முதல் முழுமையான டிஜிட்டல் பொதுக் கல்வி மாநிலமாக மாறியுள்ளது. 

உயர் தொழில்நுட்ப வகுப்பறை திட்டம், உயர் தொழில்நுட்ப ஆய்வக திட்டம்தொடக்கப்பள்ளிகளில் நிறைவு செய்யப்படுவதை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு முதல்வர் பினராயி விஜயன் அறிவிக்க உள்ளார்.

இதன் மூலம் மாநிலத்தில் உள்ள பொதுப்பள்ளிகள் முழுமையாக டிஜிட்டலுக்கு மாறும்என்று முதல்வர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

ஹைடெக் வகுப்பறை திட்டத்தின் கீழ், 4752 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 45,000 வகுப்பறைகளை 8 முதல் 12 வரை ஹைடெக் ஆக மாற்றியுள்ளன. 

இதற்காக, ப்ரொஜெக்டர்கள், மடிக்கணினிகள், ஒலிபெருக்கிகள், தொலைக்காட்சிகள், டிஎஸ்எல்ஆர் கேமராக்கள், முழு எச்டி வெப்கேம்கள், அனைத்து வகுப்புகளிலும் அதிவேக பிராட்பேண்ட் இணைப்புகளும்வழங்கப்பட்டன. 

1,83,440 ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளிக்கப்பட்டது. 

ஆரம்பப் பள்ளிகளை (எல்பி, யு.பி.) டிஜிட்டல் மயமாக்க பள்ளி அளவில் முழுவசதிகளுடன் கூடிய ஹைடெக் ஆய்வகங்கள்அமைக்கப்பட்டுள்ளன. 

ஒன்று முதல் ஏழுவகுப்புகளுக்கு 11,275 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இரண்டு லட்சம் கணினிகளில் இலவச மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பொதுக் கல்வித் துறையில் 41.01 லட்சம் குழந்தைகளுக்கு டிஜிட்டல் கற்றல் வசதிகளை உறுதி செய்வதற்காக 3,74,274 சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 12,678 பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. 

கைட்டின் (KITE) தொழில்நுட்ப உதவியுடன் பொதுக்கல்வித்துறை இந்த  திட்டத்தை நிறைவேற்றி உள்ளது. 

இந்த திட்டத்திற்கான உள்கட்டமைப்பிற்காக மட்டும் ரூ.730 கோடி செலவிடப்பட்டது. இதில் ரூ.595 கோடி கிப்பி மூலம் கிடைத்தது என முதல்வர் குறிப்பிட்டார்.

அக்டோபர் 12, வரலாற்றில் இன்று.ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற ஆங்கில வார இதழை வெளியிட்ட தினம் இன்று (1785).

அக்டோபர் 12,
 வரலாற்றில் இன்று.

ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்
பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற ஆங்கில வார இதழை வெளியிட்ட தினம் இன்று (1785).

அக்டோபர் 12, வரலாற்றில் இன்று.பெருந்தலைவர் காமராஜரின் பள்ளிக்கல்விச் சீர்திருத்தமுன்னோடி அய்யா நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 12,
 வரலாற்றில் இன்று.

பெருந்தலைவர் காமராஜரின் பள்ளிக்கல்விச் சீர்திருத்த
முன்னோடி அய்யா நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் பிறந்த தினம் இன்று.

பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு, ( அக்டோபர் 12, 1912 - ஏப்ரல் 12, 1993) தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின், துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார்.
இவரது பெற்றோர் துரைசாமி,
சாரதாம்பாள் தம்பதியினர்.

1951 ஆம் ஆண்டு, சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசருடன் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இவற்றுள் முன்னுரிமை வகிப்பது இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் ஆகியவை ஆகும்.

இவர் காலத்தில் இலவச மதிய உணவுத்திட்டம் அறிமுகப்
படுத்தப்பட்டது. பள்ளிக் குழந்தைகள் புத்தக மூட்டைகளோடு மதிய உணவுக் கட்டுச்சோற்று மூட்டைகளையும் சுமந்து சென்று கொண்டு இருந்த நிலைமை மாறியது. இலவச மதிய உணவுத் திட்டம் மூலம் மாணவர்கள் சாப்பிட்டது மட்டுமில்லாமல், இலவசக் கல்வியும் கற்றனர்.

எல்லா ஊர்களிலும் தொடக்கப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. பின்தங்கிய பல குடும்பங்களிலிருந்து மாணவர்கள் கல்வி கற்றார்கள். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி பெருகியது. ஆயிரக்கணக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை எப்படிப் பணியமர்த்துவது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு அந்நாள் முதலமைச்சரும் பொதுக்கல்வி இயக்குனரும் எடுத்த முடிவு, தமிழ்நாட்டிலே படித்துவிட்டு வேலை கிடைக்காமல் துயருற்ற பலருக்கும் வேலை கிடைக்கச் செய்தது எனலாம். ஆயிரக்கணக்கானோர் ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.

சுந்தரவடிவேலு, 1951 ஆம் ஆண்டு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவியேற்றபோது, முதல் பொது நூலக இயக்குநராகவும் பதவி ஏற்றார். அப்போது நாட்டில் மாவட்ட மைய நூலகங்கள் மட்டும் செயல்பட்டு வந்தன. நூலகத்தின் தேவையை உணர்ந்த இவர் தமிழ்நாடு முழுவதும் 400-க்கும் மேலான கிளை நூலகங்களை ஏற்படுத்தினார். பல மாவட்டங்களில் மைய நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கிடைத்ததும் இவர் காலத்தில்தான். தமிழ் நாட்டில் சொத்து வரியுடன் சேர்த்து பெறப்படுகிற நூலக வரி திட்டம் இவர் பொது நூலக இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில்தான் நடைமுறைப்
படுத்தப்பட்டது.

சுந்தரவடிவேலு பள்ளிக் கல்வியில் திறம்படப் பணிபுரிந்ததைப் போலவே சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயல்பட்டார். பள்ளிப்படிப்புடன் நிறுத்திவிட்டுக் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் வேலைக்குச் செல்வோர் உயர்கல்வி பெறுவதற்காகக் கல்லூரிகளில் மாலை நேரக் கல்லூரிகளை அறிமுகப்படுத்தினார். கல்லூரி ஆசிரியர்களுக்கு மறுபயிற்சி எனப்படும் படிப்பைக் கொண்டு வந்தார்.

சுந்தரவடிவேலு பெரியவர்களுக்காக 30 நூல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக 13 நூல்களை வள்ளுவர் வரிசை என்னும் தலைப்பில் எழுதி உள்ளார். பெரியார் பற்றிய அரிய நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார்.

அக்டோபர் 12, வரலாற்றில் இன்று.இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினம் இன்று.

அக்டோபர் 12, வரலாற்றில் இன்று.

இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினம் இன்று. 

🇮🇳இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். அக்டோபர் 12, 1993 இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 , (டி பி எச் ஆர் ஏ) இன் கீழ் இவ்வாணையம் நிலைநாட்டப்பெற்றது. பாரிசில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மனித உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பெற்ற தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாணையம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது,

இங்கு பெற அல்லது வரப்படும் ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப் படுகின்றது. அவற்றை ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.
புகார்ரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல் ஆணையத்தின் முன் வைக்கவேண்டும். அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள்
தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

டி பி எச் ஆர் ஏ பிரிவு 3 மற்றும் 4 ன் கீழ் வரையறுத்துள்ளதின்படி இவ்வாணையத்தின் நியமனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.