திங்கள், 12 அக்டோபர், 2020

பொதுக்கல்வியில் கேரளம் மற்றுமொரு சாதனை.... முதல் ‘முழு டிஜிட்டல் மாநிலம்’ இன்று அறிவிப்புதிருவனந்தபுரம்:உலக பொதுக் கல்வி வரலாற்றில் இடம்பிடித்துள்ள கேரளம் மீண்டும் முதலிடத்தில்உள்ளது.

பொதுக்கல்வியில் 

கேரளம் மற்றுமொரு சாதனை.... 

முதல் ‘முழு டிஜிட்டல் மாநிலம்’ 

இன்று அறிவிப்பு

திருவனந்தபுரம்:
உலக பொதுக் கல்வி வரலாற்றில் இடம்பிடித்துள்ள கேரளம் மீண்டும் முதலிடத்தில்உள்ளது. 

ஒன்று முதல் 12 வகுப்புகளுக்கு முழுபள்ளியையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் கேரளா நாட்டின் முதல் முழுமையான டிஜிட்டல் பொதுக் கல்வி மாநிலமாக மாறியுள்ளது. 

உயர் தொழில்நுட்ப வகுப்பறை திட்டம், உயர் தொழில்நுட்ப ஆய்வக திட்டம்தொடக்கப்பள்ளிகளில் நிறைவு செய்யப்படுவதை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு முதல்வர் பினராயி விஜயன் அறிவிக்க உள்ளார்.

இதன் மூலம் மாநிலத்தில் உள்ள பொதுப்பள்ளிகள் முழுமையாக டிஜிட்டலுக்கு மாறும்என்று முதல்வர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

ஹைடெக் வகுப்பறை திட்டத்தின் கீழ், 4752 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 45,000 வகுப்பறைகளை 8 முதல் 12 வரை ஹைடெக் ஆக மாற்றியுள்ளன. 

இதற்காக, ப்ரொஜெக்டர்கள், மடிக்கணினிகள், ஒலிபெருக்கிகள், தொலைக்காட்சிகள், டிஎஸ்எல்ஆர் கேமராக்கள், முழு எச்டி வெப்கேம்கள், அனைத்து வகுப்புகளிலும் அதிவேக பிராட்பேண்ட் இணைப்புகளும்வழங்கப்பட்டன. 

1,83,440 ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளிக்கப்பட்டது. 

ஆரம்பப் பள்ளிகளை (எல்பி, யு.பி.) டிஜிட்டல் மயமாக்க பள்ளி அளவில் முழுவசதிகளுடன் கூடிய ஹைடெக் ஆய்வகங்கள்அமைக்கப்பட்டுள்ளன. 

ஒன்று முதல் ஏழுவகுப்புகளுக்கு 11,275 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இரண்டு லட்சம் கணினிகளில் இலவச மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பொதுக் கல்வித் துறையில் 41.01 லட்சம் குழந்தைகளுக்கு டிஜிட்டல் கற்றல் வசதிகளை உறுதி செய்வதற்காக 3,74,274 சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 12,678 பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. 

கைட்டின் (KITE) தொழில்நுட்ப உதவியுடன் பொதுக்கல்வித்துறை இந்த  திட்டத்தை நிறைவேற்றி உள்ளது. 

இந்த திட்டத்திற்கான உள்கட்டமைப்பிற்காக மட்டும் ரூ.730 கோடி செலவிடப்பட்டது. இதில் ரூ.595 கோடி கிப்பி மூலம் கிடைத்தது என முதல்வர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக