வியாழன், 31 டிசம்பர், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்ட அளவிலான ஆசிரியர் கோரிக்கை மாநாடு 09.01.2021 (சனிக்கிழமை) அன்று முற்பகல் 09.30 மணியளவில் எஸ்.பி.எஸ் திருமண மண்டபம் நாமக்கல்லில் நடைபெற உள்ளது.

வணக்கம்.

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்ட அளவிலான ஆசிரியர் கோரிக்கை மாநாடு எதிர்வரும்  
09.01.2021 (சனிக்கிழமை) அன்று  முற்பகல் 09.30 மணியளவில் எஸ்.பி.எஸ் திருமண மண்டபம் நாமக்கல்லில் நடைபெற உள்ளது.  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர். மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள்  மாநாட்டில் கலந்து கொண்டு , 
சிறைச்செம்மல்,  வேலைநிறுத்தப் போராளி,  மன்றச் செம்மல் விருதுகளை  மன்ற மறவர்கள்- மறத்தியர்களுக்கு வழங்கி மாநாட்டுச் சிறப்புரை
யாற்ற உள்ளார்கள்.

பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினரும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான திரு.கே. எஸ் .மூர்த்தி அவர்களும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் 
திரு.கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் அவர்களும் கோரிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு
மாநாட்டு உரை நிகழ்த்த உள்ளார்கள்.

ஆகவே, ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள், மன்ற  முன்னோடிகள்,  நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பெருமக்கள் அனைவரும்  கோரிக்கை மாநாட்டில் பெருந்திரளாய் பங்கேற்று,  கோரிக்கை மாநாட்டினை வெற்றி பெறச் செய்திடுமாறு மாவட்ட அமைப்பின் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 
_மாவட்டச்செயலாளர்


*🚗வாகனங்களில் ஃபாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.*

*🚗வாகனங்களில் ஃபாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.*


*புது தில்லி: வாகனங்களில் ஃபாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.*

*வாகனங்களில் 'ஃபாஸ்டேக்' வில்லையைப் பொருத்துவது வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.*

*நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தும் நடைமுறையை எளிதாக்குவதற்காக வாகனங்களில் 'ஃபாஸ்டேக்' வில்லையைப் பொருத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி, வாகனங்களின் கண்ணாடியில் அந்த வில்லைகள் பொருத்தப்படும்.*

*அதில் அவ்வப்போது தொகையை வரவு வைத்துக் கொள்ளலாம். சுங்கச் சாவடிகளை அந்த வாகனங்கள் கடக்குக்கும்போது, அங்கு பொருத்தப்பட்டுள்ள கருவி, 'ஃபாஸ்டேக்' வில்லை வாயிலாகக் கட்டணத்தைக் கழித்துக் கொள்ளும். இந்த வசதியின் மூலமாக சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக, வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நேரம் வெகுவாகக் குறையும்.*

*இந்த நடைமுறை ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்டது. எனினும், சுங்கச் சாவடிகளில் நேரடியாகக் கட்டணம் செலுத்தி பயணிப்பதற்கும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.*

*மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் காணொலி வாயிலாகப் பங்கேற்றுப் பேசுகையில், ''வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் 'ஃபாஸ்டேக்' வில்லையைப் பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. 'ஃபாஸ்டேக்' நடைமுறையால் சுங்கச் சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறைவதோடு எரிபொருளும் சேமிக்கப்படும்'' என்றாா்.*

*அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்பது நடைமுறைக்கு வரவிருந்த நிலையில், பிப்ரவரி 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.*

*அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இணையவழியிலும் வங்கிகள் வாயிலாகவும் 'ஃபாஸ்டேக்' வில்லையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.*

*📘GPF இறுதித் தொகை (Final Withdrawal) - 6 மாதங்கள் / ஓராண்டிற்கும் மேலாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு தீர்வு காணுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்!*

*📘GPF இறுதித் தொகை (Final Withdrawal) - 6 மாதங்கள் / ஓராண்டிற்கும் மேலாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு தீர்வு காணுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்!*

*📘முறைகேடுகளைத் தடுக்கப் போட்டித் தேர்வுகளில் புதிய கட்டுப்பாடுகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.*

*📘முறைகேடுகளைத் தடுக்கப் போட்டித் தேர்வுகளில் புதிய கட்டுப்பாடுகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.*



*தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்விதத் தவறுகள் நேராமல் இருப்பதற்காகவும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.*


*இதுதொடர்பாகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:*


*தேர்வர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வுக் கூடத்துக்குச் செல்ல வேண்டும். இதற்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு, தேர்வு தொடங்கப்படும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது அந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.*


*விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற மை கொண்ட பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.*


*விடைத்தாளில் உரிய இரு இடங்களில் கையொப்பமிட்டு, இடது கை பெருவிரல் ரேகையைப் பதிக்க வேண்டும். அப்போது பிற இடங்களில் மை படாமலும், விடைத்தாள் சேதமடையாமல் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.*


*வினாத்தாள் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால் (E) என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும்.*


*விடைத்தாளில் (A), (B), (C), (D) மற்றும் (E) என ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்பதை எண்ணி, மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பிக் கருமையாக்க வேண்டும். தவறினால் 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இந்தச் செயலை மேற்கொள்ளத் தேர்வு முடிந்த பிறகு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.*


*தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்விதத் தவறுகளும் நேராமல் இருப்பதற்காகவும் தேர்வாணையம் மேற்குறிப்பிட்ட அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது’’.*

*இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*