வியாழன், 31 டிசம்பர், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்ட அளவிலான ஆசிரியர் கோரிக்கை மாநாடு 09.01.2021 (சனிக்கிழமை) அன்று முற்பகல் 09.30 மணியளவில் எஸ்.பி.எஸ் திருமண மண்டபம் நாமக்கல்லில் நடைபெற உள்ளது.

வணக்கம்.

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்ட அளவிலான ஆசிரியர் கோரிக்கை மாநாடு எதிர்வரும்  
09.01.2021 (சனிக்கிழமை) அன்று  முற்பகல் 09.30 மணியளவில் எஸ்.பி.எஸ் திருமண மண்டபம் நாமக்கல்லில் நடைபெற உள்ளது.  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர். மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள்  மாநாட்டில் கலந்து கொண்டு , 
சிறைச்செம்மல்,  வேலைநிறுத்தப் போராளி,  மன்றச் செம்மல் விருதுகளை  மன்ற மறவர்கள்- மறத்தியர்களுக்கு வழங்கி மாநாட்டுச் சிறப்புரை
யாற்ற உள்ளார்கள்.

பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினரும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான திரு.கே. எஸ் .மூர்த்தி அவர்களும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் 
திரு.கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் அவர்களும் கோரிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு
மாநாட்டு உரை நிகழ்த்த உள்ளார்கள்.

ஆகவே, ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள், மன்ற  முன்னோடிகள்,  நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பெருமக்கள் அனைவரும்  கோரிக்கை மாநாட்டில் பெருந்திரளாய் பங்கேற்று,  கோரிக்கை மாநாட்டினை வெற்றி பெறச் செய்திடுமாறு மாவட்ட அமைப்பின் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 
_மாவட்டச்செயலாளர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக