வெள்ளி, 1 நவம்பர், 2019

*🌷நவம்பர் 1,*
*வரலாற்றில் இன்று.*

-----------------------------------------------------
*எழுத்தாளர் டேல் கார்னகி நினைவு தினம் இன்று (1955).*

 *டேல் கார்னகி எழுதிய "நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?"*
*புத்தகம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அனைவராலும் படிக்கப்பட்டு பாராட்டு பெற்றது.*

*மனிதர்களாகிய நாம் ஒரு சமூக விலங்காக கருதப்படுகிறோம்.  இதன் அர்த்தம் நாம் தனியாக இந்த உலகத்தில் வாழ்க்கை நடத்த முடியாது.  நாம் பல மனிதர்களுடன் பழக வேண்டியுள்ளது.  அவ்வாறு பழகும் போது நாம் பல குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை சந்திக்க வேண்டியுள்ளது.  அவர்களை நாம் நம் நண்பர்களாக்கி கொள்வது அவசியம்.  ஆனால் ஒருவரை நாம் நண்பராக்கி கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.*

*நீங்கள் பார்க்கும் அல்லது பழகும் அனைவரையும் நண்பர்களாக்கி கொள்ளவும், மக்களிடம் செல்வாக்குடன் விளங்கவும், உங்கள் தொழில், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் சிறந்து விளங்கவும் டேல் கார்னகி ஆங்கிலத்தில் எழுதிய ‘How to Win Friends and Influence People?’ என்ற புத்தகம் ‘நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.*

*இந்த புத்தகத்தை படிப்பவர்கள் அவர்களின் மனைவி, கணவர், குழந்தைகள், முதலாளி, தொழிலாளி, நண்பர்கள் மற்றும் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை எளிதாக கையாளலாம்.  அவர்களிடம் செல்வாக்கு பெறலாம்.  வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.*

*குறிப்பு: இந்த புத்தகம் சுமார் 1 கோடிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது.*


*டேல் கார்னகி 1888 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்.  அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.  அவர் எழுதிய புத்தகங்கள் பலவும் இன்றும் மக்களால் விரும்பி படிக்கப்படுகிறது.*
*🌷நவம்பர் 1, வரலாற்றில் இன்று.*
----------------------------------------------------
*இந்தியாவின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15. ஆனால் இந்தியாவின் ஒரு* *பகுதியான பாண்டிச்சேரியில் மட்டும் நவம்பர் 1.*
*ஏன் இந்த வேறுபாடு?*

*இந்தியாவை ஆண்டது ஆங்கிலேயர்கள்.*
*ஆனால் பாண்டிச்சேரியை ஆண்டது பிரெஞ்சுக்காரர்கள்.*
*1600 ஆம் ஆண்டில் இருந்தே பிரெஞ்சு காலனியின் கட்டுப்பாட்டில் இருந்த*
*பாண்டிச்சேரி, 1702ஆம் ஆண்டுதான் முதன் முறையாக தனது சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்தது. ஆனால் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தைப் போல், அங்கே போராட்டம் அவ்வளவு தீவிரமாக நடைபெறவில்லை.*

*ஆங்கிலேயர்களின் கடுமையான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து பாண்டிச்சேரியும் விடுதலைப் போரில் பிரெஞ்சு ஆதிக்கத்தை தீவிரமாக எதிர்த்துப் போராடியது.  போராட்டத்துக்கு ஆதரவாக அப்போது இந்திய பிரதமர் நேரு அவர்களும் குரல் கொடுக்க 1954,நவம்பர் 1ஆம் தேதி பாண்டிச்சேரி மாநிலம் விடுதலை பெற்று இந்தியாவோடு இணைந்தது.*

*இந்த இணைப்பை*
 *டி - ஃபேக்டோ செட்டில் மெண்ட் என்று* *அழைத்தார்கள். இந்த இணைப்பு ஒப்பந்தத்தில்* *இந்தியப் பிரதமர் நேருவும், பிரெஞ்சு தூதுவரும்* *கையொப்பமிட்டனர்.*
*ஆனால் 1963 ஆம் ஆண்டுதான் பாண்டிச்சேரி இந்தியாவின் ஒரு பகுதி என்று பிரெஞ்சு நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அப்போது பாண்டிச்சேரியின் மேயராக இருந்த எட்வர்ட் ஜோபாட் முதல் அமைச்சராக 1963 ஜுலை 1 ஆம் தேதி பதவியேற்றார். அதன் பிறகு அரசியல் கட்சிகள் அங்கு உருவாக ஆட்சி மாற்றம் நடந்தது.*

*இப்போது உள்ள புதுச்சேரியில் அலுவல் மொழிகள் தமிழ், ஆங்கிலம் மட்டுமே. மக்கள் தொகை 7 லட்சம். படிப்பறிவு 82 சதவீதம். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் இன்னமும் அங்கே வசிக்கிறார்கள்.*
*🌷நவம்பர் 1,*
*வரலாற்றில் இன்று.*
------------------------------------------------------
*நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு தினம் அரசாணை வெளியீடு*

*நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு தினம் என்று கொண்டாட தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.*


*நவம்பர் 1ஆம் தேதி 1956ஆம் ஆண்டு, 63 வருடங்களுக்கு முன்னர் ஒன்றாக இணைந்திருந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள் பிரிந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து நவம்பர் 1ஆம் தேதி தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்டதை, பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்பாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது.*

*அதன்படி, இந்த ஆண்டு முதல் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதியினை தமிழ்நாடு நாள் என சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு நாள் கொண்டாட தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது.*
*🌷நவம்பர் 1,*
*வரலாற்றில் இன்று.*
----------------------------------------------------
 *கேரளாவிலிருந்து பிரிந்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்ட தினம் இன்று (1956).*

*1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது.*

 *கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை.*

 *மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் "குமரித் தந்தை " என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி தலைமையில் கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கக் கோரி பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.*


*இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக திருமலை என்பவர் நவம்பர் 1, 1956 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.*