வெள்ளி, 1 நவம்பர், 2019

*🌷நவம்பர் 1, வரலாற்றில் இன்று.*
----------------------------------------------------
*இந்தியாவின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15. ஆனால் இந்தியாவின் ஒரு* *பகுதியான பாண்டிச்சேரியில் மட்டும் நவம்பர் 1.*
*ஏன் இந்த வேறுபாடு?*

*இந்தியாவை ஆண்டது ஆங்கிலேயர்கள்.*
*ஆனால் பாண்டிச்சேரியை ஆண்டது பிரெஞ்சுக்காரர்கள்.*
*1600 ஆம் ஆண்டில் இருந்தே பிரெஞ்சு காலனியின் கட்டுப்பாட்டில் இருந்த*
*பாண்டிச்சேரி, 1702ஆம் ஆண்டுதான் முதன் முறையாக தனது சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்தது. ஆனால் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தைப் போல், அங்கே போராட்டம் அவ்வளவு தீவிரமாக நடைபெறவில்லை.*

*ஆங்கிலேயர்களின் கடுமையான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து பாண்டிச்சேரியும் விடுதலைப் போரில் பிரெஞ்சு ஆதிக்கத்தை தீவிரமாக எதிர்த்துப் போராடியது.  போராட்டத்துக்கு ஆதரவாக அப்போது இந்திய பிரதமர் நேரு அவர்களும் குரல் கொடுக்க 1954,நவம்பர் 1ஆம் தேதி பாண்டிச்சேரி மாநிலம் விடுதலை பெற்று இந்தியாவோடு இணைந்தது.*

*இந்த இணைப்பை*
 *டி - ஃபேக்டோ செட்டில் மெண்ட் என்று* *அழைத்தார்கள். இந்த இணைப்பு ஒப்பந்தத்தில்* *இந்தியப் பிரதமர் நேருவும், பிரெஞ்சு தூதுவரும்* *கையொப்பமிட்டனர்.*
*ஆனால் 1963 ஆம் ஆண்டுதான் பாண்டிச்சேரி இந்தியாவின் ஒரு பகுதி என்று பிரெஞ்சு நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அப்போது பாண்டிச்சேரியின் மேயராக இருந்த எட்வர்ட் ஜோபாட் முதல் அமைச்சராக 1963 ஜுலை 1 ஆம் தேதி பதவியேற்றார். அதன் பிறகு அரசியல் கட்சிகள் அங்கு உருவாக ஆட்சி மாற்றம் நடந்தது.*

*இப்போது உள்ள புதுச்சேரியில் அலுவல் மொழிகள் தமிழ், ஆங்கிலம் மட்டுமே. மக்கள் தொகை 7 லட்சம். படிப்பறிவு 82 சதவீதம். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் இன்னமும் அங்கே வசிக்கிறார்கள்.*