புதன், 3 ஜூன், 2020
*☀நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றியம் 12 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர் ஊதியம் மற்றும் பராமரிப்பு மானியம் உடனடியாக வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை..*

*🌷ஜூன் 3,வரலாற்றில் இன்று:எழுத்தாளர் பிரான்ஸ் காப்கா நினைவு தினம்.(1924)*
ஜூன் 3, வரலாற்றில் இன்று.
எழுத்தாளர் பிரான்ஸ் காப்கா நினைவு தினம் இன்று(1924).
இன்றைய இலக்கிய எழுத்தாளர்கள் பலரின் வாயில் புகுந்து புறப்படும் பெயர், காப்கா;
காந்தாரி ஓரு ஆஸ்திரிய எழுத்தாளர். அவரது தந்தை, மனைவியையும், மகனையும் ஓயாமல் போட்டு அடிப்பார். அந்த மன பாதிப்பு, காப்காவின் எழுத்தில் துாக்கலாக தெரியும்.
26ஆம் வயதில் இவர் எழுதிய, 'ஒரு கிராமிய திருமணத்திற்கான ஏற்பாடுகள்' என்ற நாவல் தான், இவரது முதல் நூல்.
காதல், மது இரண்டிலும் பிரியம் கொண்ட காப்காவிற்கு, திருமண ஏற்பாடு நிச்சயத்தோடு நின்றது. காசநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த, 1910 முதல் 1923 வரை காப்கா எழுதிய, 'தி டிரையல், தி கேசில், தி ஜட்ஜ்மென்ட், மெட்டமார்பசிஸ், கன்ட்ரி டாக்டர்' என்ற அவரின் ஒவ்வொரு படைப்புமே, அவரது வாழ்க்கை அனுபவ வெளிப்பாடுகளே! காப்கா, தாம் எழுதிய கையெழுத்துப் பிரதிகளை, ஒரு இலக்கிய நண்பரிடம் கொடுத்து, தன் மரணத்திற்கு பின், அவற்றை தீ வைத்து எரித்து விடுமாறு கூறினார். நண்பரோ, அந்த உன்னத படைப்புகளை அழிக்க மனமின்றி, ஒவ்வொன்றாக பிரசுரித்து வெளியிட்டார்.
காப்கா, தன் நாற்பதாவது வயதில், இதே நாளில் காலமானார்!

*🌷ஜூன் 3,வரலாற்றில் இன்று:உடற்கூற்றுயியல்,இரத்த ஓட்டம் பற்றி கண்டுபிடித்தவருமான வில்லியம் ஹார்வி நினைவு தினம்.*
ஜூன் 3, வரலாற்றில் இன்று.
உடற்கூற்றுயியல், இரத்த ஓட்டம் பற்றி கண்டுபிடித்தவருமான வில்லியம் ஹார்வி நினைவு தினம் இன்று.
ஹார்வி ஏப்ரல்-01, 1578இல்
இங்கிலாந்து Folkestone ஊரில் பிறந்தார்.
15 வயதில் கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டியில் பயின்றார்.
1597இல் இத்தாலி padua யூனிவர்சிட்டியில் மருத்துவம் செய்தார்.
1616இல் இரத்த ஓட்டம் பற்றிய உண்மைகளை கண்டறிந்து விளக்கினார்.
இரத்தம் இதயத்திலிருந்து மனித மூளை, பிற உடல் உறுப்புகளுக்கு சென்று, மறுபடியும் அங்கிருந்து இதயத்துக்கு வருகிறது.
இரத்த ஓட்டம், இதயத்தின் தமனி, சிரை செயல்பாடு விவரித்தார்.
இரத்தம் பின்னோக்கி செல்லாத காரணம் வால்வுகள்.
இரத்த ஓட்டம் இதய துடிப்பு மூலம் அறிதல்.
ஒவ்வொரு முறை இதய துடிப்பின் போது இரண்டு அவுன்ஸ் இரத்தம் வெளியேற்றம்,
ஒரு நிமிடத்திற்கு 72 முறை இதயம் துடிப்பு.
அன்றைய காலத்தில் பல்வேறு எதிர்ப்புகளை சமாளித்து உடற்கூறு ஆராய்ச்சி செய்த இவர் முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்டு ஜூன்-3, 1657 இல் தனது 79வது வயதில் காலமானார்.

*🌸ஜூன் 3,வரலாற்றில் இன்று:இந்திய ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்த தினம்.(1984).*
ஜூன் 3,
வரலாற்றில் இன்று.
இந்திய ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்த தினம் இன்று(1984).
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகளானாலும் வடுக்கள் இன்னும் மறையவில்லை
சீக்கியர்களுக்காக ‘காலிஸ்தான்' என்ற தனிநாடு கோரி, ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் அமிர்தசரஸ் பொற்கோயிலில் புகுந்துகொண்டனர். பொற்கோயிலிலிருந்து அவர்களை அகற்ற ராணுவம் எடுத்த நடவடிக்கையின் சங்கேதப் பெயர் 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்'.
அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயில் பரந்து விரிந்த ஒரு வழிபாட்டுத் தலம். அந்தக் கோயில் வளாகத்துக்குப் பெயர் ஹர்மந்தர் சாஹிப். சீக்கியர்களின் புனித நூல்தான் குருநாதராகப் பாவிக்கப்பட்டு அன்றாடம் ஓதப்படுகிறது. அந்த இடத்துக்கு வரும் பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாடியும் புனித நூலில் உள்ள வசனங்களை ஓதியும் வழிபடுவார்கள். அன்றாடம் ஒரு லட்சம் பக்தர்களுக்கு உணவு அளிக்கப்படும் இடம் இது.
இந்தப் பொற்கோயிலுக்குள் தான் பிந்தரன்வாலே தலைமையிலான காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்கள் வெளியேற வேண்டும் என்று கெடு விதித்து பஞ்சாப் அரசும் மத்திய அரசும் விடுத்த வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன. இதையடுத்து, பஞ்சாப் மாநிலம் முழுக்கப் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அமிர்தசரஸ் உள்ளிட்ட நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அரசிடம் ஒப்புதல் பெறாமல் எந்தத் தகவலையும் செய்தியையும் வெளியிடக் கூடாது என்று பத்திரிகைகளுக்குச் செய்தித் தணிக்கை செய்யப்பட்டது. அமிர்தசரஸ் நகரிலிருந்து பத்திரிகை நிருபர்கள் அகற்றப்பட்டனர். எல்லைகளில் வாகனங்கள் கடுமையாகச் சோதிக்கப்பட்டன. மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. சில பகுதிகளில் குடிநீர் விநியோகம்கூட நின்றது.
பஞ்சாப் மாநில போலீஸார், மத்திய போலீஸ் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படை, கமாண்டோ படையினர், ராணுவம் என்று அனைத்துத் தரப்பினரும் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் பங்கேற்றனர். தரைப்படையின் காலாட்படை, கவச வாகனப்படை இரண்டும் களத்தில் இறக்கப்பட்டன. ராணுவ டேங்குகளும், ஹெலிகாப்டர்களும்கூட பயன்படுத்தப்பட்டன. ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் ‘ஆபரேஷன் மெட்டல்', ‘ஆபரேஷன் ஷாப்' என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டது.
‘ஆபரேஷன் மெட்டல்' என்பது பொற்கோயில் அமைந்துள்ள ஹர்மந்தர் சாஹிபுக்கானது. ‘ஆபரேஷன் ஷாப்' என்பது பஞ்சாபின் பிற பகுதிகளில் மறைந்திருந்த பயங்கரவாதிகளையும் தீவிரவாதிகளையும் கண்டுபிடித்துக் கைதுசெய்வது அல்லது அழிப்பதற்கானது. இதற்குப் பிறகு ‘ஆபரேஷன் உட் ரோஸ்' (வன ரோஜா) என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அது மாநிலம் முழுக்க அங்குலம் அங்குலமாகச் சோதனை நடத்தி, பயங்கரவாதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் எவரும் இல்லை என்பதை உறுதிசெய்வது.
பொற்கோயிலில் ராணுவம் நுழைந்து பயங்கரவாதிகளை வெளியேற்ற வேண்டும், அதற்கொரு திட்டம் தீட்டுங்கள் என்று பிரதமர் இந்திரா காந்தி லெப். ஜெனரல் இந்தியத் தரைப்படையின் துணைத் தளபதி லெப். ஜெனரல் எஸ்.கே. சின்ஹாவைத்தான் முதலில் கேட்டார். சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயில் மீது ராணுவத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தினால், அதை சீக்கியர்கள் காலம் முழுக்க மறக்க மாட்டார்கள், வேறு வழியில் இதை முயற்சி செய்துபார்க்கலாம் என்றார். இந்திரா அவருடைய யோசனையை நிராகரித்தார்.
அதன் பிறகு, ஜெனரல் அருண் ஸ்ரீதர் வைத்யா தரைப்படைத் தலைமை தளபதியாக்கப்பட்டார். அவர் லெப். ஜெனரல் கே. சுந்தர்ஜி உதவியுடன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையை வகுத்தார்.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 1984 ஜூன் 1 முதல் 10 வரை மேற்கொள்ளப்பட்டது. 5 தரைப் படைப் பிரிவுகள், 2 கமாண்டோ படைப் பிரிவுகள், 6 டேங்குகள், 2 துணைநிலை ராணுவப் படைப் பிரிவுகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
இந்திய ராணுவப் படைக்கு மேஜர் ஜெனரல் குல்தீப் சிங் பிரார் தலைமையேற்றார். பிஹார் ரெஜிமெண்ட், மெட்ராஸ் ரெஜிமெண்ட், 10-கார்ட்ஸ் ரெஜிமெண்ட் ஆகியவை பங்கேற்றன.
ஜூன் முதல் நாள், ‘குரு ராம்தாஸ் லங்கர்' என்றழைக்கப்படும் யாத்ரிகர்களுக்கான உணவுக் கூடத்தைப் பாதுகாப்புப் படையினர் தாக்கினர். அதில் 8 முதல் 10 பேர் வரை இறந்தனர்.
ஜூன் 2-ம் நாள் காஷ்மீர் முதல் ராஜஸ்தானின் கங்கா நகர் வரையிலான சர்வதேச நில எல்லைகள் மூடப்பட்டன. பஞ்சாப் கிராமங்களுக்கு ராணுவத்தின் 7 டிவிஷன் படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டன. பத்திரிகைகளுக்குத் தணிக்கை விதிக்கப்பட்டது. ரயில், பேருந்து, விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. வெளிநாட்டவர்களும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் பஞ்சாப் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டனர்.
பஞ்சாப் ஆளுநரின் ஆலோசகராக ஜெனரல் கௌரி சங்கர் நியமிக்கப்பட்டார்.
ஜூன் 3-ம் நாள் பஞ்சாப் முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. ராணுவமும் துணைநிலை ராணுவமும் ரோந்து சுற்றியது. பொற்கோயிலுக்குள் யாரும் நுழைய முடியாமலும் வெளியேற முடியாமலும் காவல், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.
ஜூன் 4-ம் நாள், ராம்கடியா பங்காஸ், தண்ணீர்த் தொட்டி போன்றவை குண்டுகளால் தகர்க்கப்பட்டன. பீரங்கி மூலம், பயங்கரவாதிகளின் வெளிப்புறத் தடுப்பரண்கள் துவம்சம் செய்யப்பட்டன. சுமார் 100 பேர் இறந்தனர். சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் முன்னாள் தலைவர் குருசரண் சிங் தோராவை, பயங்கரவாதிகளுடன் பேசச் சொல்லி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளைக் கைவிட்டு சரண் அடைய மறுத்துவிட்டனர். பேச்சு தோல்வியில் முடிந்தது.
ஜூன் 5-ம் நாள், ஆலய வளாகத்தின் தென்மேற்கு மூலையில் இருந்த ஹோட்டல் டெம்பிள் வியூ என்ற கட்டடமும் பிரம்மபூத அகடாவும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படையின் தாக்குதலுக்கு உள்ளாயின. ராணுவத்தின் 9-வது படைப் பிரிவு, அகால்தக்த் என்ற பகுதிமீது தாக்குதல் நடத்தியது. ஆனால், அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ராணுவத் தரப்பில் மிகக் கடுமையான ஆள்சேதம் ஏற்பட்டது. வெறும் துப்பாக்கிகளும் இயந்திரத் துப்பாக்கிகளும் பயன்தராது என்ற நிலைக்குப் பிறகே டேங்குகள் மூலம் பெரும் தாக்குதல் நடத்தி சேதம் விளைவிக்கப்பட்டது.
ஜூன் 6-ம் நாள் விஜயந்தா டேங்குகள் அகால்தக்தை நிர்மூலம் செய்தன. அங்கிருந்து தப்பி ஓட முயன்ற சிறு கும்பல், ராணுவத்தின் இயந்திரத் துப்பாக்கிகளுக்குப் பலியானது. அப்படியும் அகால்தக்தின் பக்கத்துக் கட்டடங்களிலிருந்து பயங்கரவாதிகள் தாக்கினர். ராணுவத்தின் தாக்குதலில் பிந்தரன்வாலே உயிரிழந்தார்.
ஜூன் 7-ம் நாள் ஹர்மந்தர் சாஹிப், ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.
ஜூன் 8 முதல் 10 வரையில் ஒரு கோபுரத்தின் அடித்தளத்தில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டனர். அந்த இடத்தை நோக்கி விரைந்த கமாண்டோ படை கர்னல் ஒருவரைப் பயங்கரவாதிகள் சரமாரியாகச் சுட்டு அவரது உடலைச் சல்லடைக் கண்களைப் போலத் துளைத்தனர். ஜூன் 10-ந் தேதி பிற்பகல்தான் ஆலயம் முழுக்கப் பாதுகாப்புப் படையினர் வசம் வந்தது.
பலி எத்தனை?
ராணுவத் தரப்பில் 136 பேர் உயிரிழந்தனர், 220 பேர் காயமடைந்தனர். சிவிலியன்கள் தரப்பில் 492 பேர் இறந்தனர். இவர்களில் பயங்கரவாதிகளும் யாத்ரிகர்களும் குருத்வாரா ஊழியர்களும் இருந்தனர். ராணுவ நடவடிக்கையில் 5,000 பேர் இறந்தனர் என்றும் பஞ்சாப் முழுக்க 20,000 பேர் இறந்தனர் என்றும் எந்தவித ஆதாரங்களுமின்றிப் பல தகவல்கள் உலவுகின்றன. பொற்கோயில் நடவடிக்கையில் ராணுவம் 700-க்கும் மேற்பட்டோரை இழந்ததாகப் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த ராஜீவ் காந்தி கூறியிருக்கிறார்.
பொற்கோயிலில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பிறகு, சீக்கியர்கள் மனதில் அடக்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது. ராணுவத்திலேயே சில படைப் பிரிவுகளில் சீக்கிய வீரர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். ராணுவத்திலும் போலீஸ் படையிலும் பணிபுரிந்த பலர் பதவிகளை விட்டு விலகினர். இந்திய அரசு அளித்திருந்த பதக்கங்களையும் பட்டங்களையும் துறந்தனர்.
பொற்கோயிலுக்குள் ராணுவத்தை ஏவிய நடவடிக்கைக்காக இந்திரா காந்தியை மன்னிக்க சீக்கியர்களில் பலர் தயாராக இல்லை. அவர்களில் சிலர் இந்திரா காந்தியின் மெய்க்காவலர்களாக இருந்த சத்வந்த் சிங், பேயந்த் சிங் என்ற இருவரை அணுகி இதற்குப் பழிவாங்க இந்திராவைக் கொல்ல வேண்டும் என்று அவர்களைத் தூண்டினார்கள். இதையடுத்து, இந்திரா காந்தியை அவர்கள் அவருடைய அரசு இல்லத்திலேயே அவர் நடந்துசெல்லும்போது, 1984 அக்டோபர் 31-ம் தேதி சுட்டுக்கொன்றனர். இந்திரா காந்தியின் உடலை 33 குண்டுகள் துளைத்தன.
இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு அதற்குப் பழிவாங்கும் வகையில், டெல்லியிலும் வேறு சில ஊர்களிலும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரங்கள் வெடித்தன. 3,000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் இதில் இறந்தனர். ஆனால், இந்த எண்ணிக்கையும் இறுதியானதோ சரியானதோ அல்ல என்றே பலர் கூறுகின்றனர். இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்டோர் அரசியல் தலைவர்கள் மீது இன்னமும் வழக்கு நடந்துவருகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சீக்கியர் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்து அந்தச் சமூகத்தினரிடம் மத்திய அரசின் சார்பில் மன்னிப்பு கோரியது நினைவுகூரத் தக்கது.
ஆண்டுகள் 36 ஆனாலும், நீறுபூத்த நெருப்பாக வடுக்களில் ஊற்றெடுக்கும் ரத்தமாகவே இருக்கிறது நீல நட்சத்திர நடவடிக்கை.

*☀ஜூன் 3,வரலாற்றில் இன்று:தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த தினம்.(1924)*
ஜூன் 3, வரலாற்றில் இன்று.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்
கலைஞர் கருணாநிதி பிறந்த தினம் இன்று(1924).
ஐந்து முறை தமிழகத்தின் முதல்வர் .. 50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்.. 60 ஆண்களுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினர்... என கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு சரித்திரம் படைத்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான் கருணாநிதி.
இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான முத்துவேல் கருணாநிதி, தற்போதைய நாகை மாவட்டத்தின் திருக்குவளையில் ஓர் எளிய குடும்பத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி இதே நாளில் பிறந்தார்.
சிறு வயதிலிருந்தே கலைகளிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டிருந்த கருணாநிதி, நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் உரைகளால் கவரப்பட்டு, 14 வயதிலேயே அரசியலில் கவனத்தைத் திருப்பினார்.
கட்டாய இந்திக் கல்வியை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்த நிலையில், 'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்' என்று முழக்கமிட்டபடி ஊர்வலத்தை நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் கருணாநிதி.
17ஆவது வயதிலேயே தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற பெயரில் அமைப்பு, கையெழுத்துப் பத்திரிகை என தீவிரமாக பணியாற்றிய கருணாநிதி, பிற்காலத்தில் தலைவராகவும் தமிழகத்தின் புகழ்பெற்ற முதலமைச்சர்களில் ஒருவராகவும் உருவெடுத்த சி.என். அண்ணாதுரையை 1940களின் துவக்கத்தில் சந்தித்தார்.
1949இல் பெரியாருடன் முரண்பட்டு அவரது பிறந்த நாளன்றே புதிதாக ஒரு கட்சியை அண்ணா துவங்கியபோது, அவருக்கு மிக நெருக்கமான துணையாகயிருந்தார் கருணாநிதி. 25 வயதே நிரம்பியிருந்த கருணாநிதி, கட்சியின் பிரசாரக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
அதே காலகட்டத்தில், ராஜகுமாரி படத்தில் துவங்கி சினிமா வசனகர்த்தாவாகவும் கோலோச்சிய கருணாநிதி வசனம் எழுதிய திரைப்படங்கள் சமூக மாற்றத்திற்கான கருத்துகளை தமிழகத்தில் வெற்றிகரமாக விதைக்க ஆரம்பித்தன. 1952இல் அவரது வசனத்தில் வெளிவந்த பராசக்தி திரைப்படம், தமிழ்த் திரையுலகிற்கு ஒரு திருப்பு முனையாகவே அமைந்தது.
1953இல் அவரது முக்கிய முதல் போராட்டமாக, கல்லக்குடிக்கு டால்மியாபுரம் என்று பெயர் மாற்றம் செய்ததைக் கண்டித்து, மீண்டும் கல்லக்குடி என்ற பெயரை மீட்டெடுக்க, தண்டவாளத்தில் தலை வைத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கருணாநிதி 6 மாதம் சிறை சென்றபோது, கட்சிக்குள் ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுக்க ஆரம்பித்தார்.
மலைக்கள்ளன், மனோகரா படங்களின் மூலம் திரையுலகிலும் கருணாநிதி உச்சத்திற்கு சென்றார்.
1957இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக முதல் முறையாகப் போட்டியிட்டபோது, குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாநிதி, 2016இல் திருவாரூர் தொகுதியில் வென்றதுவரை, தான் போட்டியிட்ட எந்த சட்டமன்றத் தேர்தலிலும் தோற்றதில்லை.
1963இல் துவங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற கருணாநிதி, 1967இல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்தபோது, அண்ணா, நெடுஞ்செழியன் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில், பொதுப் பணித்துறை - போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
இந்தக் காலகட்டத்தில், தமிழகத்தில் பேருந்துகளை தேசியமயமாக்கி, மூலை முடுக்கெல்லாம் பேருந்து வசதியை ஏற்படுத்தியது மிக முக்கியமான சாதனையாக அவருக்கு அமைந்தது.
ஆட்சியைப் பிடித்த இரண்டே ஆண்டுகளில் 1969இல் அண்ணா மறைந்த பின், புதிய முதல்வராகப் பதவியேற்ற கருணாநிதி, தமிழகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கினார்.
நில உச்சவரம்பு 15 ஏக்கராகக் குறைக்கப்பட்டது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது, அனைவரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டு வந்தது, நீராடும் கடலுடுத்த பாடலை மாநில வாழ்த்துப்பாடலாக அறிவித்தது, பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சம உரிமை, அரசுப் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு, மெட்ரோ ரயில் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரம், உழவர் சந்தை, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடு, கை ரிக்சாவைத் தடைசெய்தது என தன்னுடைய 19 வருட ஆட்சியில், தமிழகத்தை சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மாற்றியமைத்தார் கருணாநிதி.
கருணாநிதி தலைமையின் கீழ் கட்சி இரண்டு முறை மிகப் பெரிய பிளவைச் சந்தித்திருக்கிறது. 1972இல் தி.மு.கவின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் கட்சியை உடைத்து, தனிக்கட்சி துவங்கி, அடுத்த தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தார். இதற்குப் பிறகு 1993இல் வைகோ தலைமையில் கட்சி மீண்டும் ஒரு பிளவைச் சந்தித்தது. அப்போது பெரும் எண்ணிக்கையில் மாவட்டச் செயலாளர்கள் தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்றனர். இருந்தபோதும், இந்த பிளவுகளில் இருந்து கட்சியை மீட்டெடுத்து, அடுத்த தேர்தல்களில் ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி.
1989-ல் தேசிய முன்னணி அரசில் பங்கேற்றதன் மூலம் தேசிய அரசியலில் தனது கணக்கைத் துவங்கிய கருணாநிதி, 1998லிருந்து 2014ஆம் ஆண்டுவரை மத்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் கட்சியாக திமுகவை வைத்திருந்தார். குறிப்பாக, 2004-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 12 அமைச்சர்கள் தமிழகத்தின் சார்பில் இடம்பெற்றனர்.
ஆனால், இந்த காலக்கட்டத்தில் கருணாநிதி கடும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கட்சியிலும் ஆட்சியிலும் தன் குடும்பத்தினருக்கு அவர் அளித்த முக்கியத்துவம் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அதேபோல, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த சமயத்தில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி,தமிழ் மக்களைக் காப்பாற்ற போதுமான அளவு எதிர்வினை ஆற்றவில்லையென்ற குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
1996-2001ஆம் ஆண்டு வரையிலான கருணாநிதியின் ஆட்சிக்காலம், தி.மு.க. ஆட்சியின் சிறப்பான தருணங்களில் ஒன்றாக எப்படிப் பார்க்கப்படுகிறதோ, அதேபோல 2006-2011 ஆட்சிக் காலம் கருணாநிதி கடும் விமர்சனங்களுக்குள்ளான காலமாகவும் அமைந்தது. 2016-ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராமல் போனதற்கு, இந்த காலகட்டத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே முக்கிய காரணமாக அமைந்தன.
அரசியலில் மட்டுமல்லாமல், கலைத் துறையிலும் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. 1947-ல் வெளியான ராஜகுமாரியில் துவங்கி 2011-ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை 64 வருடங்கள் சினிமாத் துறையில் செயல்பட்டிருக்கிறார் கருணாநிதி. இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்யாத சாதனை இது. சினிமா தவிர, தொலைக்காட்சித் தொடர்களிலும் தொடர்ந்து இயங்கிவந்த கருணாநிதி, தன் உடல்நலம் குன்றும்வரை கலைஞர் டிவியில் வெளியான ராமானுஜம் தொடருக்கு வசனங்களை எழுதிவந்தார்.
எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் அவருடைய சாதனைகள், யார் ஒருவரையும் பொறாமையடையச் செய்யும். சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கும் கருணாநிதி, தனது தொண்டர்களுக்கு எழுதிவந்த 'உடன்பிறப்பே' கடிதத் தொடர், உலகின் மிக நீளமான தொடர்களில் ஒன்று.
இந்திய விடுதலைக்கு முன்பாக அரசியல் வாழ்வைத் துவங்கிய தலைவர்களில் நீண்ட காலம் உயிரோடு இருந்த வர்கள் வெகு சிலரே. அந்த வகையில் 95 வயது வரை வாழ்ந்து, மறைந்த கருணாநிதியின் மரணம், ஒரு யுகத்தின் முடிவைக் குறிக்கிறது. இன்று அவருடைய 97ஆவது பிறந்த நாள். கலைஞர் உயிரோடு இல்லாமல் கொண்டாடப்படும் ் பிறந்த நாளை அவரின் நீங்கா நினைவுகளுடன் உடன்பிறப்புகள் ஒரு வித அமைதி கலந்த உற்சாகத்துடன் இன்று கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)