சனி, 5 டிசம்பர், 2020

🖥️வருமானவரி 2020-21 ஆம் நிதியாண்டுக்கான வழிகாட்டுதல் குறிப்பு-பழைய வருமானவரி முறை-புதிய வருமானவரி முறை ஓர் ஒப்பீடு.மற்றும் 2020-21 ஆம் நிதியாண்டிற்கான பழைய வருமானவரி முறையிலான படிவம்&புதிய வருமானவரி முறையிலான படிவங்கள்.*

*🖥️வருமானவரி 2020-21 ஆம் ஆண்டுக்கான வழிகாட்டுதல் குறிப்பு-பழைய வருமானவரி முறை-புதிய வருமானவரி முறை  ஓர் ஒப்பீடு.மற்றும் 2020-21 ஆம் நிதியாண்டிற்கான பழைய வருமானவரி முறையிலான படிவம்&புதிய வருமானவரி முறையிலான படிவங்கள்.*


வருமானவரி 2020-21 ஆம் ஆண்டுக்கான SBI -இன் வழிகாட்டுதல் குறிப்புகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.


பழைய வருமானவரி முறை 
மற்றும் புதிய வருமானவரி முறை வவேறுபாடு தொடர்புடைய குறிப்புகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

*2020-21 ஆம் நிதியாண்டிற்கான பழைய வருமானவரிப் படிவத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.(4 பக்கம்)


2020-21 ஆம் நிதியாண்டிற்கான புதிய வருமானவரிப் படிவத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.(2 பக்கம்)

பல்கலைக்கழகமாக மாறும் இந்திய மொழிகள் மத்திய நிறுவனம்... இந்தியில் பெயர் மாற்றம்.

பல்கலைக்கழகமாக மாறும் இந்திய மொழிகள் மத்திய நிறுவனம்... இந்தியில் பெயர் மாற்றம்
4 December 2020 

புதுதில்லி:
மைசூருவில் உள்ள இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் மத்தியப் பல்கலைக்கழகமாக மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய மொழிகள் ஆய்வுக்காக மைசூருவில் 1969-ல் இந்தியமொழிகள் மத்திய நிறுவனம் (சிஐஐஎல்)அமைக்கப்பட்டது. மத்திய அரசின் இந்தி மற்றும்ஆங்கில மொழி வளர்ச்சிக்கான கல்வி நிறுவனங்கள் மத்திய பல்கலைக்கழகங்களாக மேம்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து மொழிகள் நிறுவனத்தை பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா (பிபிவி) என்றுஇந்தியில் பெயர் மாற்றி, மத்திய பல்கலைக்கழகமாக மாற்றவும் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளை இதன் துறைகளாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய மொழிகளும் செம்மொழி அந்தஸ்து பெற்றாலும் தமிழைப் போல அவற்றுக்கு தனி ஆய்வு நிறுவனம் அமைக்கப்படாதது இதற்கு சாதகமாக உள்ளது.தமிழுக்கு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இதற்கு நிரந்தர இயக்குநர், சில மாதங்களுக்கு முன்புதான் அமர்த்தப்பட்டார். இந்நிலையில் மற்ற மொழிகளுடன் தமிழும் இணைக்கப்பட்டால் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமும் பிபிவி உடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.செம்மொழிகளை புதிய மத்திய பல் கலைக்கழகமான பிபிவி உடன்இணைப்பதுஉள்ளிட்ட பல்வேறு கூறுகளை ஆய்வு செய்ய 11 அறிஞர்கள் கொண்ட ஒரு குழுவை மத்திய கல்வி அமைச்சகத்தின் மொழிகள் பிரிவு அமைத்துள்ளது.இக்குழுவுக்கு தமிழரான முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி தலைமை ஏற்றுள்ளார். அடுத்த 3 மாதங்களில் அறிக்கை அளிக்குமாறு இவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பாளர்கள் தட்டுப்பாடு
இதுகுறித்து என்.கோபாலசாமி கூறுகையில், தற்போது இந்திய மொழிகளை மொழிபெயர்ப்பதில் வல்லுநர்கள் தட்டுப்பாடு உள்ளது. இது கவனிக்கப்படாமலேயே உள்ளது. இதை முக்கிய குறிக்கோளாக்கி அனைத்து மொழிகளையும் வளர்க்கும் வகையில் சிஐஐஎல் நிறுவனத்தை மத்தியப் பல்கலைக்கழகமாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஏற்கெனவே செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையுடன் இணைக்கும் முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது.

சமஸ்கிருதத்தைச் சீராட்டும் மத்திய அரசு, செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தை, மைசூருவில் உள்ள பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்துச் சுருக்குவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த முடிவை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

சமஸ்கிருதத்தைச் சீராட்டும் மத்திய அரசு, செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தை, மைசூருவில் உள்ள பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்துச் சுருக்குவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த முடிவை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்!

முதலமைச்சர் திரு. பழனிசாமி அனைத்துப் பிரச்சினைகளிலும் அமைதி காப்பது போல், பாஜக அரசின்  இந்த முடிவையும் ஆமோதிக்காமல், அதனைக் கைவிட வலியுறுத்தி உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மத்திய கல்வி அமைச்சகத்தில் காலிப்பணியிடங்கள் !தகவல் உரிமைச்சட்டப்பதில்கள்!பணியாளர் இல்லாமல் முடங்கி கிடக்கும் மத்திய கல்வி அமைச்சகம் !

மத்திய கல்வி அமைச்சகத்தில் காலிப்பணியிடங்கள் !
தகவல் உரிமைச்சட்டப்பதில்கள்!


பணியாளர் இல்லாமல் முடங்கி கிடக்கும் மத்திய கல்வி அமைச்சகம் ! 

  தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக சில தகவல்களை பெற மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மனு அனுப்பியிருந்தேன்.

 அதில் கிடைத்த பதில்களை இதனுடன் இணைத்துள்ளேன் ! 

 மத்தியகல்வி அமைச்சர் அலுவலகத்தில் கூட காலிப்பணியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு மெத்தனமாக இருப்பது கல்வி வளர்ச்சியில் மத்திய அரசின் உண்மையான அக்கறை தெரியவருகிறது ! 

  தற்போது பணியாற்றிவருபவர்களின் எண்ணிக்கை 754 

 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 326 

 

 நாடு முழுவதும் உள்ள IIT,IIM,IISE,மத்தியபல்கலைகழகங்கள் என அனைத்து நிறுவனங்களின் நிலையும் இது தான் ! 

 கல்வி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்காமல் கொள்கையை அறிவிப்பதும்,மேடையில் முழங்குவதும் மக்களை ஏமாற்றும் செயல் ! 

 மத்திய அரசிற்கு உண்மையான அக்கறை இருக்குமானால் மத்திய அரசின் கல்வித்துறை,கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் அனைத்து பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்களையும் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் !

 இதை செய்யாமல் புதியகல்வி கொள்கையை அமுல்படுத்தி கல்வியில் மாற்றம் செய்வோம் என கூச்சலிடுவது எந்த பலனையும் தராது ! 

 ஏற்கனவே உள்ள கல்வி நிறுவனங்களை நிர்வாகம் செய்யும் அமைச்சக அதிகாரிகள் பற்றாகுறை உள்ள நிலையில் அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் சொற்பொழிவில் எதையும் முறையாக கவனிக்க இயலாமல் நிர்வாக சீர்குழைவு தான் ஏற்படும் ! 

 தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் ! 

 ஆத்த மாட்டாதவன் கையில் ( .. )58 அறிவாளாம் ! 

 மத்தியகல்வி அமைச்சகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பணியாளர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருப்பது வியப்பளிக்கிறது ! 

 மத்திய கல்விதுறை பதிலை இதனுடன் இணைத்துள்ளேன்.

வே.ஈசுவரன், மதிமுக.