புதன், 18 டிசம்பர், 2019

பள்ளிக்கல்வி-2020 தேர்வு பற்றிய கலந்துரையாடல்-இந்திய பிரதமருடன் கலந்து கொள்ள வாய்ப்பு-இயக்குநர் செயல்முறை நாள் 13.12.2019



Pindics online பதிவு EMIS ல் பதிவு செய்ய-பணி முடிக்க கால அவகாசம் நீட்டிப்பு


Aptitude test_நாட்டமறி மாதிரித்தேர்வு இணைய வழியில் பயிற்சி அளித்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள் 17.12.2019



தேசிய அளவில் அல்லது சர்வதேச அளவில் பதக்கம் வென்ற மாணவ/மாணவிகளுக்கு அரசு பணி ஒதுக்கீடு 2%சதவீதம்- தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்


சிந்தனை செய்க!..... தொடக்கக்கல்வி ஆசிரியர்களை விட்டால் , தேர்தல் பணி ஆற்றிட வேறு அலுவலர்கள் யாருமே இல்லையா?

சிந்தனை செய்க!
--------------------------------
தொடக்கக்கல்வி ஆசிரியர்களை விட்டால் ,
தேர்தல் பணி ஆற்றிட வேறு அலுவலர்கள் யாருமே இல்லை போலும்?!
******************
தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் முதல் சாய்சு தொடக்கக்கல்வித்துறையின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தான் போலும்.
தொடக்கக்கல்வி துறையின் ஆசிரியப்பெருமக்கள் அனைவருக்கும் ஒருவர் விடாது பணிநியமனம் அளித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொள்வார்கள் போலும்.
இதனால் தான் என்னவோ இறந்து போன ஆசிரியர்களுக்கு கூட வஞ்சனை இல்லாது பணிஆணை வழங்கி விடுகிறார்கள். பணிநிறைவு பெற்றவர்கள் மனம் கோணாதும் பார்த்துக் கொள்கிறார்கள்.  பணிநிறைவு ஆசிரியர்களுக்கும் ஆணைகளை
வாரி வழங்கி விடுகிறார்கள். மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண்ணாசிரியரின் பிஞ்சுக்குழந்தை சிணுங்கினால்  மனம் தாங்கிக் கொள்ள இயலாதென, குழந்தைபிறந்து இரண்டு மாதம்,மூன்று மாதம் ஆகிஉள்ள  இவ்வாசிரியைக்கும் ஆணை தந்து விடுகின்றனர். இதையெல்லாம் விட திசம்பர் மாதத்தில் குழந்தைப் பேறுக்கு 
நாள் குறிக்கப்பட்டுள்ள வயிற்றில் பிள்ளையைத் தாங்கிக் கொண்டுள்ள பெண் ஆசிரியைக்கும் வஞ்சகமின்றி பணியாணை வழங்கிவிடுகின்றனர்.
குழந்தைப் பராமரிப்புக்கு 18மாதம்காலம் விடுப்பு அளிக்கும் இந்திய தேசத்தில் தான் தேர்தல் என்று வந்துவிட்டால் பாலூட்டினால் என்ன?!பாயாசம் குடித்தால் என்ன?!மோர் குடித்தால் எங்களுக்கு என்ன?!தேர்தலுக்கு வந்து சேர்!என்று உத்தரவு இடுகிறார்கள்.
மாற்றுத்திறனாளிக்கு விலக்கு என்பதெல்லாம் "சுத்த கம்பக்" என்று சொல்லும் அளவிற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் ஒரு ஆணைக்கு இரண்டாணைகள்  தருகிறார்கள். இரத்து செய்து தாருங்கள் என்றால் மனிதாபிமானத்தோடு வட்டாரக்கல்வி அலுவலகம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகமென அங்குமிங்கும் வரவழைத்து  இந்த பெயருக்கெல்லாம் முடியாது; வாய்ப்பில்லை என்று பணிபார்க்க பணிப்பார்கள்.
இருதய பாதிப்பா?சிறுநீரகம் பாதிப்பா?கண்கள்பாதிப்பா?நரம்பு பாதிப்பா?எலும்பு பாதிப்பா? எந்தப் பாதிப்புக்கும் நிவாரணம் இல்லை; ஆள் இல்லை .
மரியாதையாக பணிபாரும்.
தேர்தல் பணி பார்க்கலையினா இப்ப பார்க்கிற பணியே போயிடுமென அன்பாய் சொல்லி ஆணை பிறப்பிப்பார்கள். கணவனுக்கு, மகனுக்கு,
மகளுக்கு , சிறுகுழந்தைக்கு
உடம்பு சரியில்லை என்றாலும், மகளுக்கு,
மருமகளுக்கு மகப்பேறு என்றாலும்  ,
தனக்கே உடம்பு சரி் இல்லை என்றாலும் 
அதை எல்லாம் இரக்க உணர்வு நிறைய இருந்தும், அறவே
காதுக் கொடுத்து கேளாது
பணிக்கு செல்லுங்கள்
 என்று பண்பாய் சொல்லுவார்கள்.  உயரமான மலை என்றாலும்,
அதல பாதாளம் என்றாலும் கருமைசூழ்
அடர் வனம் என்றாலும்,
கடும் பனிப்பொழிவு என்றாலும், பேருந்து வசதி இல்லை என்றாலும் ,
பெண், ஆண் என்று  பேதம் பாராது
சரிநிகர் சமமெனக்கூறி  ரிச்க்கை...ரச்க்குபோல் சுவைக்கனும்
என்றெல்லாம் ஆற்றுப்படுத்தி  ஒரு வாய் காபிக்கு வழி இல்லாதப் பகுதிக்கு அனுப்பிவைப்பார்கள்.
இதற்கு மேல் ஏதாவது சொன்னால்,
எதையாவது கேட்டால் தேர்தல்பணி ஆற்றும் நேரத்தில்  அசாம்பாவிதம் வந்து 
நடக்க கூடாதது நடந்துவிட்டால் நச்ட ஈடு வீடுபோய் சேர்ந்துவிடும்  என்பார்கள்.

இப்படியாக எல்லாம் இச்டப்படுத்தி , கச்டப்படுத்தி தேர்தல் பணி வாங்குபவர்களே! அரசுப்பள்ளிகளில் 
மாணாக்கர்
சேர்க்கை குறைகிறது. ஆசிரியர்கள் பணியிடம்
உபரி ஆகிறது ஆசிரியருக்கென கட்டாய ஓய்வுத்திட்டம் வருகிறது. அரசுப்பள்ளி இயற்கை மரணத்தை 
நோக்குகிறது. பள்ளியே இல்லை; ஆசிரியரே இல்லை எனும் நிலை வருகிறது என்று ஆரூடம் பிதற்றுகிறது (?!)
ஆமாம் ,  அப்போது எல்லாம்
,இந்த ஆசிரியர் இல்லாத பேரவலம்  சூழும்  போதெல்லாம்   எதிர் வரும் காலங்களில்  தேர்தல்  வேலையை எப்படி செய்வர்?!சிந்தனை செய் மனமே!
இந்த நிலை வரும் போது  ஆசிரியர்கள் குறைவாக பணியில் உள்ளார்கள் 
என்றோ?!
தேர்தல் பணிக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது என்றோ ?! தேர்தலையே நடத்தாது விட்டுவிடவா முடியும்.?!
மாற்று யோசனை ஏதாவது செய்து தானே ஆக வேண்டும்.!
அந்த யோசனையை இப்போதே செய்தால்   ,
கோடி புண்ணியமாவது கிட்டாதா?!என்ன?! 

-பாதிக்கப்படுவோருக்கான ஆதங்கக் குரல்...
டிசம்பர் 18,
வரலாற்றில் இன்று.


எழுத்தாளர் சி.சு.செல்லப்பா நினைவு தினம் இன்று.

சி.சு.செல்லப்பா (செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாக
வும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்
பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்த சி.சு.செல்லப்பா, தன் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார்.

மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

"சுதந்திரச் சங்கு" இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு "மணிக்கொடி" இதழ் கை கொடுத்தது. "சரசாவின் பொம்மை" என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.

1937ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

1947ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி.சு.செல்லப்பா அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

 எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த "எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார். பலவித இன்னல்களுக்கிடையே 1970 ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார். ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த "எழுத்து" காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119 இதழுடன் எழுத்து நிறுத்தப்பட்டது.

சி. சு. செல்லப்பா 29 நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

சரஸாவின் பொம்மை
மணல் வீடு
சி. சு. செல்லப்பாவின் கதைகள் 7 தொகுதிகள்

வாடி வாசல்
ஜீவனாம்சம்
சுதந்திர தாகம்
முறைப்பெண்
மாற்று இதயம்
இன்று நீ இருந்தால்

சி.சு.செல்லப்பா, 1998ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி காலமானார்.


  • இவரது சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
டிசம்பர் 18,
வரலாற்றில் இன்று.

நவீன அணு இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுகிற ஜெ.ஜெ. தாம்சன் பிறந்த தினம் இன்று.

அணுவியலின் அடிப்படையான எலக்ட்ரானைக் கண்டறிந்தவர். காந்தவியல், மின்சாரவியல், ஐசோடோப்புகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர்.

1906 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
டிசம்பர் 18, வரலாற்றில் இன்று.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் இன்று.

2000இல் யுனெஸ்கோ,
தாய் நாட்டில் வாழ இயலாத போர்/இயற்கை பேரிடர், காரணமாக புலம்பெயர்ந்த மக்கள், உரிமை, பாதுகாப்பு, வாழ்வாதார உரிமை போன்ற மனிதர் குல நற்பணிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனுசரிக்கும் தினம் இன்று.

வேலைவாய்ப்பு கருதி வெளிநாடுகளில் வாழும் மக்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தினம் இன்று.

உலகில் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் /சகோதரிகள் என்ற உணர்வை வலுப்படுத்த வேண்டிய தினம் இன்று.
டிசம்பர் 18,
 வரலாற்றில் இன்று.

ரஷ்யாவின் "இரும்பு மனிதர்" ஜோசப் ஸ்டாலின் பிறந்த தினம் இன்று.

செருப்புத் தைக்கும் தொழிலாளி தந்தைக்கும், சலவை செய்தும் வீட்டு வேலைகள் செய்வதுமான இருந்த தாய்க்கும் நான்காவது மகனாகப் பிறந்தவர் ஸ்டாலின்.

புரட்சியாளர் லெனின் மறைவுக்குப் பின் சோவியத் ஒன்றிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் (பதவியில் – ஏப்ரல் 3, 1922 – மார்ச் 5, 1953), ஒருங்கிணைந்த சோசலிச சோவியத் ரஷ்ய அமைச்சரவையின் தலைவராக விளங்கியவர் ஸ்டாலின்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப் படைகளைத் தோற்கடித்தார். சோவியத் ரஷ்யாவை ஒரு உலக வல்லரசாக உருவாக்கிய இரும்பு மனிதர் ஸ்டாலின்.