ஞாயிறு, 27 செப்டம்பர், 2020
*🌟அரசாணை எண் 37 -இன் படி 10.03.2020 க்கு முன்னர் படிப்பை முடித்திருந்தால் அரசாணை பத்தி 6 -இன் படி அரசின் இசைவு பெற்று ஊக்க ஊதியம் பெறலாம்.*
*🌟அரசாணை எண் 37 -இன் படி 10.03.2020 க்கு முன்னர் படிப்பை முடித்திருந்தால் அரசாணை பத்தி 6 -இன் படி அரசின் இசைவு பெற்று ஊக்க ஊதியம் பெறலாம்.*
செப்டெம்பர் 27, வரலாற்றில் இன்று.கூகுள் தேடல் தளம் ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்று (1998).
செப்டெம்பர் 27, வரலாற்றில் இன்று.
கூகுள் தேடல் தளம் ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்று (1998).
உலகின் சிறந்த தேடுதல் தளமாக கருதப்படும் கூகுள் நிறுவனத்தின் 21ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இணையத்தில் கூகுள் இல்லையென்றால் எதையும் பார்க்க முடியாது என்ற நிலை தான் பெரும்பாலான பயனர்களுக்கு. அவர்கள், கூகுள் தேடுபொறியை பயன்படுத்தி தான், எல்லா தகவல்களையும் தேடி பெறுவர்.
லாரி பேஜ், செர்ஜி பிரின் ஆகிய இருவரால் கடந்த 1998ம் ஆண்டு கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இருவரும் கல்லூரி ப்ராஜக்ட்டாக செய்த தேடுதல்தளம் செல்வம் கொழிக்கும் அட்சய பாத்திரமாக மாறத்தொடங்கியது.
செப்டெம்பர் 27,வரலாற்றில் இன்று.விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங் (Bhagat Singh) பிறந்த தினம் இன்று.
செப்டெம்பர் 27,
வரலாற்றில் இன்று.
விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங் (Bhagat Singh) பிறந்த தினம் இன்று.
பஞ்சாப் மாநிலம் பங்கா என்ற கிராமத்தில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) 1907இல் பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலர் கொண்ட குடும்பம் அது. தந்தையும், இரு மாமாக்களும் சிறையில் இருந்து வெளிவந்த நாளில் பிறந்தார்.
தாத்தா ஆரிய சமாஜத்தில் ஈடுபாடு கொண்டவர். சில உறவினர்கள் கதர் கட்சியில் இருந்தனர். இதனால், தேசபக்தியும் சீர்திருத்த சிந்தனைகளும் அவரிடம் இயல்பாகவே இருந்தன. ‘கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையரை வேட்டையாட வேண்டும்’ என்று சிறு வயதிலேயே கனவு கண்டவர்.
ஆரிய சமாஜத்தின் டிஏவி (தயானந்த் ஆங்கிலோ வேதிக்) பள்ளியில் படித்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது அவருக்கு 12 வயது. சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அங்கு சென்றவர், அப்பாவி மக்களின் ரத்தம் தோய்ந்த மண்ணை புட்டியில் போட்டு எடுத்து வந்தார்.
லாகூர் தேசியக் கல்லூரியில் 1923இல் சேர்ந்தார். கல்லூரி நாடகக் குழுவில் இடம்பெற்றார். நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். திருமணத்தை தவிர்க்க வீட்டை விட்டு வெளியேறி கான்பூர் சென்றார்.
நவ் ஜவான் பாரத் சபாவை 1926இல் நிறுவினார். ஐரோப்பிய புரட்சி இயக்க நூல்களைப் படித்தவர், பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். பல சுதந்திரப் போராட்டப் புரட்சி இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். விரைவில் இந்துஸ்தான் குடியரசு அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார்.
பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
5 வாரங்களில் விடுதலையானார். உருது, பஞ்சாபி நாளிதழ்கள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கான இதழ்களில் புரட்சிகர கட்டுரைகளை எழுதினார்.
சைமன் குழு 1928இல் இந்தியா வருவதை எதிர்த்து பஞ்சாப் சிங்கம் லாலா லஜ்பத்ராய் அமைதிப் பேரணி நடத்தினார். அதில் ஏவிவிடப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்து லஜ்பத்ராய் மரணமடைந்தார். இதற்குப் பழிவாங்கத் துடித்த பகத்சிங் தன் குழுவினருடன் இணைந்து, இதற்கு முக்கிய காரணமான காவல் அதிகாரியைச் சுட்டுக்கொன்றார்.
தப்பிச் சென்ற இவர், தனது இயக்கத்தினருடன் இணைந்து சென்ட்ரல் அசெம்பிளியில் குண்டு வீசினார். மேலும் பல தாக்குதல் திட்டங்களை செயல்படுத்தினார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
துப்பாக்கியும் புத்தகங்களும் இவரது நெருங்கிய நண்பர்கள். ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி ஓங்குக) என்பது இவரது தாரக மந்திரம். சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்தார். ‘தி டோர் டு டெத்’, ‘ஐடியல் ஆப் சோஷலிஸம்’ போன்ற நூல்களை எழுதினார். சிறையில் இந்தியக் கைதிகளுக்கும் ஐரோப்பியக் கைதிகளுக்கும் சம உரிமை வழங்க வலியுறுத்தி 116 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
ஏராளமான இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்குபெறச் செய்த புரட்சியாளரான ‘மாவீரன்’ பகத்சிங் 24ஆவது வயதில் (1931) ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார்.
செப்டெம்பர் 27,வரலாற்றில் இன்று.உலக சுற்றுலா தினம் இன்று.
செப்டெம்பர் 27,
வரலாற்றில் இன்று.
உலக சுற்றுலா தினம் இன்று.
உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டெம்பர் 27ஆம் நாளில், 1980ஆம் ஆண்டிலிருந்து உலகெங்கும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும்,
சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இத்தினம் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)