புதன், 4 ஏப்ரல், 2018
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன வழி?
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...
* வெயில் காலத்தில், அதிக வியர்வை வெளியேறுவதால், உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால், அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு,தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்றவை ஏற்படலாம்.
* பச்சிளம் குழந்தைகள், சிறுவயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவர்கள் காலை, 10:00 மணிமுதல், 3:00 மணி வரை, வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
* தாகம் இல்லை என்றாலும் தினமும் 2.5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
* அதிகளவில் மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசி கஞ்சி, இளநீர், பனைநுங்கு, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு மற்றும் உப்பு சர்க்கரை கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும். நீர்ச்சத்து அதிக உள்ள வெள்ளரிக்காய்,தர்பூசணி போன்ற பழச்சாறும் சாப்பிடலாம்.
* வெளியே செல்லும் போது, குடிநீர் மற்றும் குடை எடுத்து செல்ல வேண்டும். வியர்வை எளிதாக வெளியேற, மிருதுவான தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். திறந்த வெளியில் வேலை செய்யும் போது, தலையில் பருத்தி துணி, துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும்.
* ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகள் அணிவதால், படர்தாமரை போன்ற சரும நோய்கள் ஏற்படும். அப்போது, ஸ்டீராய்டு கலந்த களிம்புகளை தடவக்கூடாது; சுய வைத்தியமும் செய்யக்கூடாது. தோல்டாக்டர்கரை அணுகி, தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.
* சூரிய ஒளி நேரடியாக படும், ஜன்னல் மற்றும் கதவு போன்றவற்றை திரைச்சீலைகளால் மூடி வைக்கவும். இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வரும் வகையில், ஜன்னல்களை திறந்து வைக்கலாம். காலை, மாலை இருவேளையும்குளிர்ந்த நீரால் குளிப்பது நல்லது.
* வெயிலால் களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், வெப்பம் அதிகமுள்ள இடத்திலிருந்து, வெப்பம் குறைவான இடத்திற்கு செல்ல வேண்டும். தண்ணீர், எலுமிச்சை பழச்சாறு, உப்பு சர்க்கரை கரைசல் பருக வேண்டும்.
* மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால் மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால், அருகில் உள்ள நபரை உதவிக்கு அழைக்கவும்.
* மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால், உடனடியாகடாக்டரை அணுக வேண்டும்.
தேசிய தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு 10ஆம் இடம்...
பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கான, அகில இந்திய தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, 10வது இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது.
மத்திய அரசு சார்பில், 2016 முதல், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில், தேசிய அளவில் முதலிடத்தை, பெங்களூரில் உள்ள, இந்திய தேசிய அறிவியல் கல்வி நிறுவனம் பிடித்துள்ளது.
சென்னை, ஐ.ஐ.டி., இரண்டாம் இடத்தையும்,
மும்பை, ஐ.ஐ.டி., மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான, அரசு பல்கலையான, அண்ணா பல்கலை, தேசிய அளவில், 10ம் இடம் பெற்று, சாதித்துள்ளது.
கோவை அம்ரிதா பல்கலை, 15; பாரதியார் பல்கலை, 20; வி.ஐ.டி., - 24; சென்னை பல்கலை, 29 மற்றும் திருச்சி, என்.ஐ.டி., நிறுவனம், 31ம் இடத்தையும் பிடித்துள்ளன.பாரத் கல்வி நிறுவனம், 35; தமிழ்நாடு வேளாண் பல்கலை, 40; காரைக்குடி அழகப்பா பல்கலை, 43; சாஸ்த்ரா கல்வி நிறுவனம், 54; ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி, 62ம் இடங்களை பெற்றுள்ளன. எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம், 63; கோவை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, 64; சத்யபாமா கல்வி நிறுவனம், 68; சவிதா கல்வி நிறுவனம், 70ம் இடங்களை பெற்றுள்ளன.
சென்னை, எஸ்.எஸ்.என்., இன்ஜினியரிங் கல்லுாரி, 73; கோவை,பி.எஸ்.ஜி., மருத்துவ கல்வி நிறுவனம், 75; மதுரை காமராஜர் பல்கலை, 81; தமிழ்நாடு கால்நடை பல்கலை, 92ம் இடங்களை பெற்றுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலை, 94; மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லுாரி, 95 மற்றும் புதுச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, 97ம் இடத்தை பெற்று, முதல், 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய தரவரிசை பட்டியல் வெளியானது. இதில், இன்ஜி., கல்லுாரிகள் பிரிவில், சென்னை ஐ.ஐ.டி., மூன்றாவது ஆண்டாக, தொடர்ந்து முதல் இடம் பெற்று சாதித்துள்ளது. அண்ணா பல்கலை, 8; திருச்சி, என்.ஐ.டி., 11; வி.ஐ.டி., 16; பிட்ஸ் பிலானி பல்கலை, 17ம் இடங்களை பெற்றுள்ளன.கல்லுாரிகள் பிரிவில், திருச்சி பிஷப் ஹீபர், 3; சென்னை மாநில கல்லுாரி, 5; லயோலா கல்லுாரி, 6; சென்னை, எம்.சி.சி. கல்லுாரி, 10; கோவை, பி.எஸ்.ஜி., 11; சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லுாரி, 22ம் இடங்களை பெற்றன
* மேலாண்மை, எம்.பி.ஏ., கல்லுாரிகள் பட்டியலில், திருச்சி, என்.ஐ.டி., 15; சென்னை கிரேட் லேக்ஸ் மேலாண் கல்வி நிறுவனம், 16; அண்ணா பல்கலை, 28; வி.ஐ.டி., 29; லயோலா கல்லுாரி, 32ம் இடங்களை பிடித்துள்ளன
* மருந்தியல் பிரிவில், நீலகிரி, ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி, 15; அண்ணாமலை பல்கலை, 20, ராமச்சந்திரா கல்வி நிறுவனம், 21ம் இடங்களை பெற்றுள்ளன
* மருத்துவ கல்வி பிரிவில், வேலுார் கிறிஸ்தவ கல்லுாரி, தேசிய அளவில், 3ம் இடம் பெற்றுள்ளது. புதுச்சேரி, ஜிப்மர், 6ம் இடம்; சென்னை ராமச்சந்திரா கல்லுாரி, 10; கோவை, பி.எஸ்.ஜி., 21; எஸ்.ஆர்.எம்., 22ம் இடத்தை பெற்றுள்ளன.
* கட்டடவியல் கல்லுாரிகள் பிரிவில், அண்ணா பல்கலை, 6ம்இடம் பெற்றுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)