திங்கள், 5 மார்ச், 2018
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~இராசிபுரம் ஒன்றியத்தேர்தல் முடிவுகள்…
இராசிபுரம் ஒன்றியத்தேர்தலில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் ,தேர்வு செய்து சங்க சனநாயகம் காத்துள்ள இராசிபுரம் ஒன்றிய ஆசிரியப்பெருமக்களுக்கும் அன்பான வாழ்த்தும்,பாராட்டும் மாவட்ட அமைப்பு தெரிவித்துக்கொள்கிறது.
~முருகசெல்வராசன்.
Whatsapp Update:-ஒருவருக்கு அனுப்பிய செய்தியை ஒரு மணி நேரத்துக்குள் நீக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகம்...
வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியதில் இருந்து பல்வேறு மாறுதல் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தகவல் பரிமாற்றம் செய்யும் செயலிகளில் முதன்மையான ஒன்றாக வாட்ஸ்அப் திகழ்ந்து வருகிறது. அதில் அவ்வப்போது பயனர்கள் ஈர்ப்பதற்காகப் புதுமையான அப்டேட்களை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான புதிய வசதி பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன்படி பயனர்கள் தகவல்களை ஒருவருக்கு அனுப்பிய பின்னரும் அவரிடமிருந்து அந்தச் செய்தியை ஏழு நிமிடங்களுக்குள் நீக்கம் செய்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருந்தது.
இந்த வசதியானது சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில் அதை அப்டேட் செய்து ஒரு மணி நேரத்துக்குள் அனுப்பிய தகவலை அனுப்பியவர், பெற்றவரிடம் இருந்து நீக்கம் செய்து கொள்ளும் புதிய அம்சத்தை வழங்கி உள்ளது. இந்த வசதியின் மூலம் தவறுதலாகப் பயனருக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் நீக்கம் செய்து கொள்ள முடியும்.
இந்த வசதியுடன் மேலும் ஒரு வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை மேற்கொண்டு வந்துள்ளது. ஆனால், அதை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.
அந்த புதிய வசதியில் ஃபார்வர்டு மெசேஜ்ஜின் மேல் அவை எத்தனை முறை ஃபார்வர்டு செய்யப்பட்டுள்ள என்ற தகவலைச் சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதனால் போலியான தகவல்கள் நீக்கம் செய்யப்படலாம் என்றும் அவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர்.
ஆனால், அந்த வசதியை இந்த அப்டேட்டில் வெளியிடவில்லை. அதன் சோதனை ஓட்டம் முழுவதும் முடிவடைந்த பின்னர் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் மாதங்களில் தமிழகத்தில் வெயில் கொளுத்தும்~வானிலை மையம் எச்சரிக்கை…
நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சராசரியாக வெப்பத்தின் அளவு 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கோடை மழை தொடங்குவதற்கான காலம் ஏப்ரல் இறுதிவரை ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் தென் மாநிலங்களை விட அதிக அளவு வெப்பம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் பலவற்றிலும் வெப்பம் இப்போதே அதிகரிக்க தொடங்கியுள்ளது. வழக்கமாக சென்னை, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் தவிர கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்கள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வெப்பத்தின் தாக்கத்தை உணர தொடங்கினர்.
குமரியில் கடந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் வரலாற்று பதிவாக வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியிருந்தது. இப்போது இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சாதாரணமாக அனுபவிக்க தொடங்கியுள்ளனர். வழக்கமாக மே மாதமே இந்த அளவு வெப்பம் இருக்கின்ற நிலை மாறி மார்ச் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்துள்ளதும், இரவு நேரங்களிலும் வெப்பம் தகிப்பதும் மக்களை கடுமையாக வாட்டத்தொடங்கியுள்ளது.
கடல் வெப்பநிலை அதிகரித்து வருவதும் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் தொடக்கத்திலேயே அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இன்று சி.பி.எஸ்.இ., பொது தேர்வு : 27 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு...
சென்னை: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இன்று பொதுத் தேர்வு துவங்குகிறது. இதில், 27 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2வுக்கு, இன்று பொதுத் தேர்வு துவங்குகிறது. பத்தாம் வகுப்புக்கு, ஏப்., 4 வரையிலும்; பிளஸ் 2வுக்கு, ஏப்., 13 வரையிலும் தேர்வுகள் நடக்கின்றன.
இத்தேர்வுகளில், நாடு முழுவதும், 11 ஆயிரத்து, 574 பள்ளிகளைச் சேர்ந்த, 27 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.
10ம் வகுப்புக்கு, 1,564; பிளஸ் 2வுக்கு, 1,252 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பத்தாம் வகுப்பில், 6.71 லட்சம் மாணவியர் உட்பட, 16.38 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில், ஐந்து மாநிலங்கள் அடங்கிய, சென்னை மண்டலத்தில், 1.94 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில், 4.95 லட்சம் மாணவியர் உட்பட, 11.86 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். சென்னை மண்டலத்தில், 71 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். வளைகுடா நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், 15 ஆயிரத்து, 700 பேர், சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)