புதன், 19 ஆகஸ்ட், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர் பாவலர்திரு.க.மீனாட்சிசுந்தரம் Ex.MLC.,பிறந்தநாள்!இராசீபுரம் அரசு மருத்துவமனைக்கு தடுப்புகள்,மருந்துப்பொருள்கள் ,நலத்திடப்பொருள்கள் வழங்கல்!திராவிட முன்னேற்றக்கழகத்தின் கிழக்குமாவட்டப் பொறுப்பாளர் திரு.கே.ஆர்.என்.இராசேசுகுமார் பங்கேற்பு!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர் பாவலர்திரு.க.மீனாட்சிசுந்தரம் Ex.MLC.,பிறந்தநாள்!
இராசீபுரம் அரசு மருத்துவமனைக்கு தடுப்புகள்,மருந்துப்
பொருள்கள் ,நலத்திடப்பொருள்கள் வழங்கல்!
திராவிட முன்னேற்றக்கழகத்தின்  கிழக்குமாவட்டப் பொறுப்பாளர் திரு.
கே.ஆர்.என்.இராசேசுகுமார் பங்கேற்பு!

தனக்கும்,தனது அலுவலகத்துக்கும் ஒரு அரசு விதி!பள்ளிக்கும்,பள்ளி ஆசிரியர்களுக்கும் வேறொரு அநீதி!மாற்றந்தாய்மனப்பான்மையோடு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை நடத்துவதை நாமக்கல் மாவட்ட வட்டாரக்கல்வி அலுவலர்கள் முற்றிலுமாக கைவிட வேண்டும்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் வேண்டுகோள்!

அன்பானவர்களே! வணக்கம்!

1)தங்கள்
பள்ளியில் பணியாற்றும் எல்லோரும் பள்ளிக்கு அன்றாடம் செல்ல வேண்டியதில்லை.

2)தங்கள் பள்ளி மக்கள் தொகைக் கணக்குப்படி கண்டறியப்பட்ட குழந்தைகள் தங்கள் பள்ளியிலோ/ வேறு ஏதாவது பள்ளியிலோ சேர்ந்து விட்டார்கள் எனில் , தாங்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை.

3)தாங்கள் பணியாற்றும் பள்ளியில் மாணாக்கர் சேர்க்கை உள்ளிட்ட பிற பள்ளிப்பணிகள் இருப்பின் சுழற்சிமுறையில் ஒரு நபருக்கு ஒருநாள் என்று செல்லுங்கள். பள்ளியின் நூறுசத ஆசிரியர்களும் ஒட்டுமொத்தமாக அன்றாடம் பள்ளியில் கூடுவதை தவிருங்கள்.

4)தங்கள் பள்ளியின் ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் தங்கள் பள்ளிக்கு வருகை தந்த ஆசிரியர்கள் (விரும்பினால்) கையொப்பம் இட்டு வையுங்கள்.
அனைத்தாசிரியர் கையொப்பமும் வருகைப்பதிவேட்டில் இடம்பெற்று இருப்பது 50℅ பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று சொல்வதற்கு நேர்எதிரானதாகி விடும் ஆபத்தும் உள்ளது.
இவ்வாறு கூட்டமாக பணியாற்றி நோய்த்தொற்று ஏற்பட்டால் நோய் தடுப்புச்சட்டங்களுக்கு எதிராக செயல்பட்டவராகி விடும் ஆபத்தும் உள்ளது.
மேலும், நோய் பரவுதலுக்கு துணை புரிந்து விட்டோமோ?!எனும் குற்ற உணர்வுக்கு ஆளாகிட வேண்டியதாகிவிடும்.

5)அனைத்தாசிரியர்களும் பள்ளிக்கு அன்றாடம் செல்லவேண்டும் என்றோ, பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்குச்சென்று அன்றாடம்  ஆசிரியர் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் பதிவிட வேண்டும் என்றோ எழுத்துப்பூர்வமான ஆணைகள்,
செயல்முறைகள்,
கடிதங்கள் ஏதும் இல்லை. குறைந்தபட்சமான வாட்ச்அப், அலைபேசி வழித்தகவல்கள் கூடஏதும் இதுவரையிலும் உறுதிபட தெரிவிக்கப்படவில்லை.

6)வட்டாரக்கல்வி அலுவலகம், வட்டாரவளமையம் ஐம்பது சதவீத பணியாளர்களுடன் செயல்படும் பொழுதில்,
இவ்வலுவலர்கள்  பள்ளிக்கு மட்டும் ஆசிரியர்களை முழுமையாக பள்ளிக்குச்செல்லுங்கள்!
அன்றாடம் கையெழுத்து இடுங்கள்! 
என்று வாய்மொழியாக கூறுவது பொறுப்பற்றச் செயலாகும்.
எந்த விதியின் கீழ் 
இவ்வாறு கூறுகின்றனர்!?

இவ்வாறு கூறும் அலுவலர்கள் கொரோனாக காலத்தில் 
அன்றாடம் அலுவலகம் வருகைத்தந்து  பணியாற்றித்தான் மாத ஊதியம் பெற்றனரா? என்பதை அவரது மனச்சாட்சியிடம் விசாரித்துக் கொள்வது என்பது ஆகச்சிறந்த செயலாகும்.
 
தனக்கும், தனது அலுவலகத்துக்கு 
ஒரு அரசுவிதி!பள்ளிக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கு வேறொரு அநீதி!
இவ்வளவுதான் இவர்களது நீதிபரிபாலணம்?!

மேற்கண்ட அலுவலர்களின் மனம்போன போக்கிலான செயல்கள் உள்நோக்கமுடைய ,
காழ்ப்புணர்வு நிறைந்த,
ஆசிரியர்களை அலைக்கழிக்கும் பழிவாங்கும் குணம் கொண்டதாகும்.

7)தங்கள் அனைவரிடமும் ,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான்!
கொரோனாவில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொண்டு , உங்களை சார்ந்தோரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

எத்தகு பொறுப்புணர்வும் ,
புரிந்துணர்வும் அற்ற 
 வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகங்களின் செயல்பாடுகளால்  மனதை, உடலைக் கெடுத்துக் கொள்ளாமல் பத்திரமாக  காத்துக் கொள்ளுங்கள்!

கொரானாவை விடவும் ஆபத்தானவர்கள் கொண்ட சமூக அமைப்பில் நாம் உள்ளோம் ! இதை 
மனதில் கொண்டு விழிப்புணர்வோடு அன்றாடம் பள்ளிக்கல்விப் பணியாற்றுங்கள்!.
நன்றி!
-மாவட்ட அமைப்பு.

ஹோட்டல் பில், மின்சார பில்லுக்கும் வருமான வரிக் கணக்கு தாக்கல்!வருமான வரிச்சட்டம் கடுமையாக்கிடமத்திய அரசு முடிவு!

ஹோட்டல் பில், மின்சார பில்லுக்கும் 
வருமான வரிக் கணக்கு தாக்கல்!
வருமான வரிச்சட்டம் கடுமையாக்கிட
மத்திய அரசு முடிவு!


*****************************
கடந்த 2014-ஆம் ஆண்டு, நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசுமத்தியில் ஆட்சிக்கு வந்தது முதலே வரிவிதிப்பை கடுமையாக்கி வருகிறது.

இந்நிலையில், வருமான வரிச் சட் டத்தை மேலும் கடுமையாக மோடி அரசு முடிவு செய்துள்ளதாகவும், நிறுவனங்கள் தங்களது நுகர்வோரின் அதிகபட்ச மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் குறித்து, வருமான வரித்துறைக்கு அறிக்கை அளிப்பதை கட்டமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது.

இதன்படி, ரூ. 20 ஆயிரத்திற்கான மேலான ஹோட்டல் பில் செலுத்துவோர், ரூ. 20 ஆயிரத்திற்கு மேலான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் செலுத்துவோர், ஆண்டுக்கு ரூ. 20ஆயிரத்திற்கு மேல் சொத்து வரி செலுத்துவோர், ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் ஆயுள் காப்பீட்டுப் பிரீமியம் செலுத்துவோர்; ரூ. 1 லட்சத்துக்கு மேல்நகைகள், மின்சாதன பொருட்கள், ஓவியங்கள், பளிங்குக் கற்கள் வாங்குவோர் குறித்த விவரங்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வருமான வரித் துறைக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

ஓராண்டில், ரூ. 1 லட்சத்திற்கான கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடைகள், ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான மின்சார பில், பிஸினஸ் கிளாஸில் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு விமான பயணம் அல்லது வெளிநாட்டுப் பயணம்,ரூ.50 லட்சத்துக்கு மேல் வங்கியின் நடப்பு கணக்கில் வைப்பு அல்லது வரவுவைப்பது, நடப்புக் கணக்கு அல்லாதபிற வங்கிக் கணக்கில், 25 லட்சத் துக்கு வைப்பு அல்லது வரவு வைப்பதுஆகியவை தொடர்பாகவும் விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்

.இதன்மூலம், வரி செலுத்துவோர் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கையில் (ஐடிஆர்) காட்டியுள்ள வருமானத்திற்கு ஏற்ப அவர்களின் செலவு இருக்கிறதா? என்பதை சோதிக்க முடியும் என்று அரசு கணக்கு போட்டுள்ளது.

CPS ACCOUNT SLIP ~ FY: 2019-2020 PUBLISHED...

click here...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் -பொதுச்செயலாளர் திரு.க. மீனாட்சிசுந்தரம் Ex.MLC, அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கபிலர்மலை ஒன்றிய அமைப்பின் சார்பில் பொத்தனூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (15.08.2020) முற்பகல் 10 மணியளவில் நடைபெற்ற நிகழ்வு.

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,* 
*கபிலர்மலை ஒன்றியம் (கிளை)* 
*நாமக்கல் மாவட்டம்*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் -
பொதுச்செயலாளர் 
திரு.க. மீனாட்சிசுந்தரம் Ex.MLC,  அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கபிலர்மலை ஒன்றிய அமைப்பின் சார்பில் பொத்தனூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (15.08.2020) முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது.
கொரானா  தொற்று பேரிடர் காலத்தில் முன் களப்பணியாளர்களான   
தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக,  பொத்தனூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 75 பேருக்கு மளிகை பொருட்கள் மற்றும் முககவசம் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது இந்நிகழ்வில் ஒன்றிய தலைவர்  ந.மணிவண்ணன், மாவட்டச்செயலாளர் மெ.சங்கர், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் த.தண்டபாணி,
 ஒன்றிய துணைச் செயலாளர் இர.மணிகண்டன், ஒன்றிய கொள்கை விளக்க செயலாளர் த.செந்தாமரை, செயற்குழு உறுப்பினர் ரா.சாந்தி  ஆகியோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.. 

/மெ.சங்கர்/

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர் பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் Ex.MLC அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (15/08/2020) முற்பகல் கபிலர்மலை ஒன்றிய அலுவலகத்தில், பாவலர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி புகழ் வணக்கம் செலுத்தப்பட்ட நிகழ்வு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர் பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் Ex.MLC  அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (15/08/2020) முற்பகல் கபிலர்மலை ஒன்றிய அலுவலகத்தில், பாவலர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு  மலரஞ்சலி செலுத்தி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் -பொதுச்செயலாளர்,பாவலர்திரு.க.மீனாட்சிசுந்தரம் Ex.MLC, அவர்களின் 90 ஆவது பிறந்தநாள்-பரமத்தி ஒன்றியக்கிளையின் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளின் சுகாதாரப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு.*

*🌷மன்றக்கலைஞர்.
திரு.க.மீ., அவர்களை வணங்குகிறேன் !
*********************
திராவிட முன்னேற்றக்கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டச்செயலாளர்,
பரமத்தி-வேலூர்  சட்டமன்றத் தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கே.எஸ்.மூர்த்தி , பரமத்தி  நகர தி.மு.க.,செயலாளர் மதிப்புமிகு.இரமேஷ்,
ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் மதிப்புமிகு.மெ.சங்கர் ,
ஆசிரியர் மன்றத்தின் மாநில,மாவட்ட, ஒன்றியப்பொறுப்பாளர்கள்,பரமத்தி ஒன்றியப்பொறுப்பாளர்கள்,
 மன்ற முன்னோடிகள், 
மன்ற மறவர்-மறத்தியர்,
பயனாளிகள்  ஆகியோர் என நடைபெற்ற  பெருந்திரள் நலத்திட்ட பரமத்தி நிகழ்வில்  
பங்கேற்று மன்றக்கலைஞர் திரு.க.மீ.,அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தினேன்.
இயக்க உரை ஆற்றினேன்.
-முருகசெல்வராசன்.
சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு மாநிலச் செயலாளர் மரியாதை செய்தல்.