புதன், 19 ஆகஸ்ட், 2020

தனக்கும்,தனது அலுவலகத்துக்கும் ஒரு அரசு விதி!பள்ளிக்கும்,பள்ளி ஆசிரியர்களுக்கும் வேறொரு அநீதி!மாற்றந்தாய்மனப்பான்மையோடு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை நடத்துவதை நாமக்கல் மாவட்ட வட்டாரக்கல்வி அலுவலர்கள் முற்றிலுமாக கைவிட வேண்டும்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் வேண்டுகோள்!

அன்பானவர்களே! வணக்கம்!

1)தங்கள்
பள்ளியில் பணியாற்றும் எல்லோரும் பள்ளிக்கு அன்றாடம் செல்ல வேண்டியதில்லை.

2)தங்கள் பள்ளி மக்கள் தொகைக் கணக்குப்படி கண்டறியப்பட்ட குழந்தைகள் தங்கள் பள்ளியிலோ/ வேறு ஏதாவது பள்ளியிலோ சேர்ந்து விட்டார்கள் எனில் , தாங்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை.

3)தாங்கள் பணியாற்றும் பள்ளியில் மாணாக்கர் சேர்க்கை உள்ளிட்ட பிற பள்ளிப்பணிகள் இருப்பின் சுழற்சிமுறையில் ஒரு நபருக்கு ஒருநாள் என்று செல்லுங்கள். பள்ளியின் நூறுசத ஆசிரியர்களும் ஒட்டுமொத்தமாக அன்றாடம் பள்ளியில் கூடுவதை தவிருங்கள்.

4)தங்கள் பள்ளியின் ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் தங்கள் பள்ளிக்கு வருகை தந்த ஆசிரியர்கள் (விரும்பினால்) கையொப்பம் இட்டு வையுங்கள்.
அனைத்தாசிரியர் கையொப்பமும் வருகைப்பதிவேட்டில் இடம்பெற்று இருப்பது 50℅ பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று சொல்வதற்கு நேர்எதிரானதாகி விடும் ஆபத்தும் உள்ளது.
இவ்வாறு கூட்டமாக பணியாற்றி நோய்த்தொற்று ஏற்பட்டால் நோய் தடுப்புச்சட்டங்களுக்கு எதிராக செயல்பட்டவராகி விடும் ஆபத்தும் உள்ளது.
மேலும், நோய் பரவுதலுக்கு துணை புரிந்து விட்டோமோ?!எனும் குற்ற உணர்வுக்கு ஆளாகிட வேண்டியதாகிவிடும்.

5)அனைத்தாசிரியர்களும் பள்ளிக்கு அன்றாடம் செல்லவேண்டும் என்றோ, பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்குச்சென்று அன்றாடம்  ஆசிரியர் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் பதிவிட வேண்டும் என்றோ எழுத்துப்பூர்வமான ஆணைகள்,
செயல்முறைகள்,
கடிதங்கள் ஏதும் இல்லை. குறைந்தபட்சமான வாட்ச்அப், அலைபேசி வழித்தகவல்கள் கூடஏதும் இதுவரையிலும் உறுதிபட தெரிவிக்கப்படவில்லை.

6)வட்டாரக்கல்வி அலுவலகம், வட்டாரவளமையம் ஐம்பது சதவீத பணியாளர்களுடன் செயல்படும் பொழுதில்,
இவ்வலுவலர்கள்  பள்ளிக்கு மட்டும் ஆசிரியர்களை முழுமையாக பள்ளிக்குச்செல்லுங்கள்!
அன்றாடம் கையெழுத்து இடுங்கள்! 
என்று வாய்மொழியாக கூறுவது பொறுப்பற்றச் செயலாகும்.
எந்த விதியின் கீழ் 
இவ்வாறு கூறுகின்றனர்!?

இவ்வாறு கூறும் அலுவலர்கள் கொரோனாக காலத்தில் 
அன்றாடம் அலுவலகம் வருகைத்தந்து  பணியாற்றித்தான் மாத ஊதியம் பெற்றனரா? என்பதை அவரது மனச்சாட்சியிடம் விசாரித்துக் கொள்வது என்பது ஆகச்சிறந்த செயலாகும்.
 
தனக்கும், தனது அலுவலகத்துக்கு 
ஒரு அரசுவிதி!பள்ளிக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கு வேறொரு அநீதி!
இவ்வளவுதான் இவர்களது நீதிபரிபாலணம்?!

மேற்கண்ட அலுவலர்களின் மனம்போன போக்கிலான செயல்கள் உள்நோக்கமுடைய ,
காழ்ப்புணர்வு நிறைந்த,
ஆசிரியர்களை அலைக்கழிக்கும் பழிவாங்கும் குணம் கொண்டதாகும்.

7)தங்கள் அனைவரிடமும் ,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான்!
கொரோனாவில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொண்டு , உங்களை சார்ந்தோரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

எத்தகு பொறுப்புணர்வும் ,
புரிந்துணர்வும் அற்ற 
 வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகங்களின் செயல்பாடுகளால்  மனதை, உடலைக் கெடுத்துக் கொள்ளாமல் பத்திரமாக  காத்துக் கொள்ளுங்கள்!

கொரானாவை விடவும் ஆபத்தானவர்கள் கொண்ட சமூக அமைப்பில் நாம் உள்ளோம் ! இதை 
மனதில் கொண்டு விழிப்புணர்வோடு அன்றாடம் பள்ளிக்கல்விப் பணியாற்றுங்கள்!.
நன்றி!
-மாவட்ட அமைப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக