செவ்வாய், 5 நவம்பர், 2019

5,8வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுதல்_உரிய பயிற்சிகள் வழங்கிட தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தல்



*🌷நவம்பர் 5,*
*வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------------
*தேசபந்து சித்தரஞ்சன்* *தாஸ் பிறந்த தினம் இன்று.*

*சித்தரஞ்சன் தாஸ் (நவம்பர் 5, 1870 - ஜூன் 16, 1925) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர்.* *தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் என்று எல்லோராலும்* *அன்புடன் அழைக்கப்பட்ட*
*இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்.* *1917ஆம் ஆண்டிலிருந்து 1925ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர். இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார். இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.*

*இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு.*
*அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் தாஸ் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார். சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.*

*1925ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று டார்ஜிலிங்கில் தனது 55ஆவது வயதில் காலமானார்.*
*அவரது உடல் கல்கத்தாவுக்குக் கொண்டுவரப்பட்டு மக்களின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.* *இரண்டு மைல் நீளத்திற்கு மக்கள் வெள்ளமாகத் திரண்டிருந்தனர். தாகூர்,* *சித்தரஞ்சன் தாஸைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அவரது தியாகமும் ஆக்க சக்தியும் நம்மை வழிநடத்தும் என்று கூறுகிறார். அவரது தாராள குணம் நினைத்துப்* *போற்றத்தக்கது. அவரது இல்லம் "சித்தரஞ்சன் சேவாசதன்" என்ற பெயரில் மருத்துவமனையாகச் செயல்படுகிறது.*
*மேற்கு வங்கத்தில் முக்கிய புள்ளியாக இருந்த இவர் 1919-1922 காலப் பகுதியில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து பிரித்தானியரின் ஆடைகளைப் புறக்கணிக்க முன்னின்று உழைத்தார். மோதிலால் நேருவுடன் இணைந்து சுயாட்சிக் கட்சியை ஆரம்பித்தார்.*

*ஃபோர்வார்ட் (Forward) என்ற செய்திப் பத்திரிகையை பிரித்தானிய ஆட்சியாளருக்கு எதிராக ஆரம்பித்து நடத்தினார். இப்பத்திரிகை பின்னர் விடுதலை (liberty) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இவர் பல கவிதைகளையும் இயற்றியுள்ளார். இவரது கவிதைத் தொகுப்பு சாகர் சங்கீத் என்ற பெயரில் புகழ் பெற்றவை.*
*📱நவம்பர் 5,*
*வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------------
*செல்பேசியில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் வெளியிடப்பட்ட தினம் இன்று(2007)*
*🌏நவம்பர் 5,*
*வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------------
 *உலக சுனாமி விழிப்புணர்வு தினம் இன்று.*

*2016ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 5ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட உள்ளது.*

*2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் எடுக்கப்பட்ட முடிவின் படி,  நவம்பர் 5ஆம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டது.*

*எப்போதாவது ஒரு முறை அதிசயமாக நேரக்  கூடிய ஒரு இயற்கை சீற்றம்தான் சுனாமியாகும்.*

*ஆனால் மிகவும் பயங்கரமானது.*

*கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட 58 சுனாமிகளால்  மட்டும் 2 லட்சத்து 60ஆயிரம் பேர்  மாண்டிருக்கிறார்கள்.*

*சராசரியாக ஒரு சுனாமிக்கு 4600 பேர் என்ற வீதத்தில்  பலியாகியிருக்கின்றனர்.*

*முன்கூட்டியே கணித்து துரித அறிவிப்பு செய்வதன் மூலம் நம்மால் சுனாமியினால் உண்டாகும் உயிர்பலிகளைக் குறைக்க முடியும்.*

*ஆனால் அதை செய்வதற்கு தனி நபர் மற்றும் சமுதாய விழிப்புணர்வு என்பது அவசியமான ஒன்றாகும்.*

EMIS ல் வார வாரம் TIME TABLE பதிவு செய்துவிட்டீர்களா!

Click here for video...
https://youtu.be/jGEGP46Fk2Y