ஞாயிறு, 25 ஜூலை, 2021

அன்பானவர்களே! வணக்கம். எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தில் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள்-கையாடல்கள் குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு அளித்திட்ட புகாரின்‌ மீது நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போதுமான அளவிற்கு திருப்திகரமாக இல்லை. கண்துடைப்பு மிகுந்ததாக, உறுப்பினர்களின் நிதி கையாடல் பிரச்னைகளை மூடிமறைப்பதாக உள்ளது.ஒரு பக்கச் சார்பு கொண்டதாகவே இதுவரையிலும் கூட்டுறவுத்துறை அலுவலர்களின் நடவடிக்கைகள் காணப்படுகிறது. கடந்த காலத்தில் ஆட்சி ஆண்ட அரசியல் கட்சியின் கட்டளைகளின் படி தவறிழைத்துள்ள இந்த சங்கத்தின் தலைவரை மற்றும் செயலாளரை காப்பாற்றி விட்டு ,சுயஆதாயம் தேடிக்கொள்ளும் மனநிலையிலேயே இன்று வரை நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் இருந்து வருகின்றனர். மேற்கண்ட சங்கத்தின் தலைவராக இருப்பவர் ஒரு ஆசிரியராக இருந்தாலும், நாணயச் சங்கத்தை நாணயமாக நடத்திடவில்லை. ஒரு அரசியல்கட்சியின் பரிபூரணமான கடாட்சம் பெற்றுள்ளதால் மிகுந்த துணிச்சலோடு எல்லாவிதமான முறைகேடுகளில்‌- கையாடல்களில் முழுமையாக துணை புரிந்துஉள்ளார் என்றே நடைமுறைச்செயல்பாடுகளில் இருந்து அறிய‌முடிகிறது. இது வரையிலும் தன்னை சங்கத்தலைவர் திருத்திக்கொண்டதாக நிர்வாக நடைமுறைகளில் தெரியவில்லை. எல்லாவிதமான முறைகேடுகளுக்கும்-கையாடல்களுக்கும் உடந்தையாகவே இருந்து வருகிறார் சிக்கன நாணயச் சங்கத்தலைவர் என்றே அறியமுடிகிறது. தான்‌ தலைவராக நீடித்தால் போதும்,எது எக்கோலம் போனால் தனக்கென்ன ?!எனும் மனநிலையிலையே உள்ளார்.இத்தகு மனநிலை கொண்டவரின் நிர்வாகத்தில் சிக்கன நாணயச்சங்கம் எப்படி?எவ்வாறு?சிறப்பாக செயல்படும்?என்று கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் கருதுகின்றனர் என்பது தான் வியப்பளிக்கிறது. இவரின் மனநிலைக்கு ஏற்ப ஒரு சாதகமான குழுவினை நிர்வாகக்குழுவில் ஏற்படுத்திக்கொண்டு பிரச்னைகளை மூடிமறைத்து வருகிறார். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை!அலங்கோலம் அலங்கோலமாகவே பாதுகாக்கப்படுகிறது! இத்தகு அவலமான நிலையானது தமிழ்நாடு அரசுக்கு பெருமை சேர்க்காது!புகழ் சேர்க்காது!அறமாகாது! என்பதை நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் !மனதில் நிலைநிறுத்தி செயல்பட வேண்டும்!என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மீண்டும்,மீண்டும் வலியுறுத்துகிறது! இதே அவலமான நிலை நீடிக்குமேயானால் , நாமக்கல் சரக கூட்டுறவுத்துணைப் பதிவாளர் கேட்டுக்கொண்டதன் பேரில் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஏழு கட்டத் தொடர்நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மேற்கொள்ளும் சூழல் உருவாகும்! இத்தகு தொடர் போராட்டங்களினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கூட்டுறவுத்துறையே பொறுப்பேற்க வேண்டிவரும்! என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தெரிவித்துக்கொள்கிறது! நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறையே! கடந்த ஆட்சிக்காலத்தில் மூடிமறைத்த முறைகேடுகளை- கையாடல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருக! தவறிழைத்தவர்களின் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழும்-தமிழ்நாடு கூட்டுறவுச்சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்க! தமிழ்நாடு அரசின் மாண்பினை பாதுகாத்திடுக! கூட்டுறவுத்துறையின்‌ மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்திடுக! இவண், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை).


 

சனி, 17 ஜூலை, 2021

தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டம் - ஓய்வூதியதாரர்களின் பங்களிப்பை ரூ.80 லிருந்து ரூ.150 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு. G.O. No. 164:Date: 7.7.2021 Finance (Pension) Department.



 

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை -- தமிழக அரசு அறிவிப்பு



 

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி அனைத்து அரசாணைகளையும் தொகுத்து அரசாணை வெளியிட இறுதியாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை 37 ன் படி அவசியம் நேராததால் இது சார்ந்த விவரங்களை நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர் மூலம் தெரியப்படுத்திட தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!_





 

புதன், 7 ஜூலை, 2021

இந்திய அரசு பணியில் சேர விருப்பமா? நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள். The National Recruitment Agency (NRA) will be conducting Common Eligibility Test (CET) from 2022 for the central government jobs.

 National Recruitment Agency, NRA will be conducting the Common Eligibility Test, CET in the country from early 2022. In a recent announcement on NRA CET, Union Minister Jitendra Singh said that this exam will be held for recruitment to Central governmnet jobs.

இந்திய ரயில்வே, வங்கிப்பணி, மத்திய அரசு பணிக்கென தனித்தனி தேர்வை இனி நீங்கள் எழுதத் தேவையில்லை. இந்த தேர்வுகளை ஒருங்கிணைத்து ஒரே தேர்வாக நடத்துகிறது என்ஆர்ஏ. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிஇடி என்ற பெயரில் இந்த முகமை தேர்வை நடத்தவிருக்கிறது. 

2022ஆம் ஆண்டு முதல் மத்திய பணிகளில் சேருவதற்காக பொது தகுதிகாண் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் இந்திய பணியாளர், மக்கள் குறைதீர், அணுசக்தித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.


டெல்லியில் 2021ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரிகளின் கையேட்டை வெளியிட்ட அவர், ஏற்கெனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தபடி இதுவரை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே தேர்வாணையம் (ஆர்ஆர்பி), வங்கிப்பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) ஆகியவை நடத்தி வந்த தேர்வுகளை பொது தகுதிகாண் தேர்வு (சிஇடி)என்ற பெயரில் மத்திய அரசின் தேசிய ஆள்சேர்ப்பு முகமை (என்ஆர்ஏ) நடத்தும் என்று கூறினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மத்திய அரசு பணியில் தொழில்நுட்ப பதவிகள் அல்லாத குரூப் பி, குரூப் சி ஆகிய பிரிவுகளில் சேர விண்ணப்பிப்போருக்கு என்ஆர்ஏ என்ற பல்நோக்கு ஒருங்கிணைப்பு முகமையே பொது தகுதி தேர்வை நடத்தும். 

இந்த தேர்வு, இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மையத்திலாவது நடத்தப்படும். இதன் மூலம் தொலைதூரத்தில் உள்ளவர்களும் அவர்கள் சார்ந்த மாவட்ட மையத்திலேயே தேர்வை எழுதலாம்.

பெண்கள், மாற்றுத்திறனாளி, தொலைதூர விண்ணப்பதாரர்கள், இனி அவர்களின் சமூக பொருளாதார பின்புலத்தை கடந்து இந்த தேர்வுகளை எழுத முடியும். ரயில்வே, வங்கி, மத்திய பணியில் சேர பொதுவான தேர்வை எழுதுவதன் மூலம் தனித்தனியாக இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நேரமும் அதற்கான மையங்களுக்கு தனித்தனியாக பயணிக்க வேண்டிய நேரமும் சேமிக்கப்படும்.

இந்த தேர்வு கணிப்பொறி பயன்படுத்தி எழுதக்கூடியதாக இருக்கும். 

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களுடைய சான்றிதழ்களில் அத்தாட்சி கையொப்பம் பெற அரசு அதிகாரிகளிடம் கையொப்பம் பெறுவதற்கு பதிலாக விண்ணப்பதாரரே சுயமாக தமது சான்றிதழ் நகலில் அத்தாட்சி கையெழுத்திடலாம். 

பணியில் சேர தேர்வானவுடன் தொடங்கும் முதல் மூன்று மாதங்களை ஐஏஎஸ் அதிகாரிகளின் உதவி செயலாளர்களாக பணிபுரிய தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

பொது தகுதிகாண் தேர்வு இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் நாடு முழுவதும் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்துவதற்கு இந்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.



தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ .லியோனி நியமனம்



 

ஜெர்மனி கொலோன் பல்கலை தமிழ்த்துறை தொய்வின்றி இயங்க 1 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதியுதவி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


 

தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு



 

செவ்வாய், 6 ஜூலை, 2021

தமிழ்நாடு அரசின் கொரோனா பரவல் தடுப்புப் போரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பங்கேற்கிறது! இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதல்வரின் நிவாரண நிதிக்கு இரண்டு கோடி ரூபாய் ஆசிரியர் மன்றம் உறுப்பினர்களிடம் திரட்டி‌ அளிக்கிறது ! ஜாக்டோ -ஜியோ போராட்டக்காலத்தில் முந்தைய‌ அதிமுக அரசால் ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அனைத்து வகையான பாதிப்புகளை- இழப்புகளை தமிழக அரசு களைந்திடல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் வேண்டுகோள்!

 தமிழ்நாடு அரசின் கொரோனா பரவல் தடுப்புப் போரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பங்கேற்கிறது!


இதன் ஒரு பகுதியாக,

தமிழ்நாடு முதல்வரின்  நிவாரண நிதிக்கு இரண்டு கோடி ரூபாய்  ஆசிரியர் மன்றம் உறுப்பினர்களிடம் திரட்டி‌ அளிக்கிறது !

ஜாக்டோ -ஜியோ போராட்டக்காலத்தில் முந்தைய‌ அதிமுக அரசால்  ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அனைத்து வகையான பாதிப்புகளை-

இழப்புகளை 

தமிழக அரசு களைந்திடல் வேண்டும்!


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் வேண்டுகோள்!

வெள்ளி, 2 ஜூலை, 2021

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது விதிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.. பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.. நாள் : 30.06.2021



 

ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்ற அறிவிப்புக்கு ஆசிரியர் மன்றம் வரவேற்பு..

 


 அன்பானவர்களே வணக்கம்.🙏.

மதிப்புமிகு.பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் மீதான‌ ஒழுங்கு நடவடிக்கைகள்  கைவிடப்படுகிறது என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்து உள்ளார்கள் என்பது வரவேற்கத்தக்கதே.

ஆயினும், பிரச்னைகள் இன்னும்

முடிந்தபாடு இல்லை. 

தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர்களின் ஒட்டு மொத்த நலனுக்காக தீரமுடன் போராடிய போராளிகளின் மீது புனையப்பட்ட காவல்துறையின் குற்றவியல் வழக்குகள்‌ தமிழக அரசால் இரத்து செய்யப்பட்டு உள்ளது .

இதை தொடர்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும்,

மாவட்டக் கல்வி அலுவலர்களும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை விலக்கிக்கொள்வதாக இறுதி ஆணை பிறப்பித்தார்கள்.

தற்போது , குற்றவியல் வழக்கின் பேரில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியப் போராளிகளின் தற்காலிக பணிநீக்கக் காலம் பணிக்காலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கதே.

இதன் காரணமாக, அனைத்து பாதிப்புகளும் களையப்பட்டு விட்டதாக கருதிக்கொள்ள  இயலாது.

1)தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலம் என்பதால், முந்தைய ஆண்டு ஊதிய உயர்வு வெட்டுகள் கைவிடப்படல்வேண்டும்.

தற்காலிக பணிநீக்கக் காலம் பணிக்காலம் ஆகியதால்,

பணிக்காலத்திற்கான ஊதியம் வழங்கப்படல் வேண்டும்.

தேர்வு நிலை/சிறப்பு நிலைக்காலங்கள் மறுநிர்ணயம் செய்யப்படல் வேண்டும்.

2) வேலை நிறுத்தப்போராட்டத்தில் கடந்த 22.01.2019 முதல் தீரமுடன் 

பங்கேற்றுள்ள இலட்சக்கணக்கான ஆசிரியர்-அரசு ஊழியர்களின் 2019சனவரி மாதத்தில் பிடித்தம்‌செய்யப்பட்டுள்ள வேலை நிறுத்தக்கால ஊதியப்பிடித்தங்கள்‌ அவரவருக்கு திரும்ப வழங்கப்பட்டு ,

பணிக்காலம் முறைப்படுத்தப்படல் வேண்டும். 

No work No pay என்‌ற பழிவாங்கும்-அச்சுறுத்தும் நடவடிக்கையால் ஊதிய இழப்பிற்கு ஆளாக்கப்பட்டோருக்கு எல்லாம் ஊதியம் வழங்கப்படல் வேண்டும்.

3)30.01.2019க்குள் பணியில் சேரவில்லை என்று பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்-அரசு ஊழியர்கள் இடமாறுதல் நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர்.

13.02.2019 வரையிலும் பழிவாங்கும் இடமாறுதலை ஏற்றுக்கொள்ளாமல் பணியில் சேராது காத்திருந்து, பழிவாங்கும் இடமாறுதலை முறியடித்து 14.02.2019 இல் அவரவரின் பழைய பணியிடத்தில் பணி ஏற்றுள்ளவர்களின் பணிக்காலம் பணிவரன்முறை செய்யப்படல் வேண்டும்.

4)இவைகள், மட்டுமல்ல... எந்தெந்த கோரிக்கைகளுக்காக 2019 சனவரி 22இல் வேலைநிறுத்தம் தொடங்கியதோ, அந்த வேலை நிறுத்தக் கோரிக்கைகள் அப்படியேத்தான் இன்றளவும் உள்ளது.

இக்கோரிக்கைகள்  நிறைவேற்றப்படல் வேண்டும்.

மேற்கண்டவைகள் உள்ளிட்ட , தேர்தல் கால- நடப்புக்காலக் கோரிக்கைகளும் தமிழக அரசின் முன் உள்ளது.

அன்பானவர்களே!

நம்பிக்கையோடு பள்ளிக்கல்விப் பணிகளில் ஈடுபடுங்கள்!

வசந்தம் வீசும்!

நன்றி!

இப்படிக்கு,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 

ஆசிரியர் மன்றம், 

 நாமக்கல் மாவட்டம் (கிளை).