வெள்ளி, 2 ஜூலை, 2021

ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்ற அறிவிப்புக்கு ஆசிரியர் மன்றம் வரவேற்பு..

 


 அன்பானவர்களே வணக்கம்.🙏.

மதிப்புமிகு.பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் மீதான‌ ஒழுங்கு நடவடிக்கைகள்  கைவிடப்படுகிறது என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்து உள்ளார்கள் என்பது வரவேற்கத்தக்கதே.

ஆயினும், பிரச்னைகள் இன்னும்

முடிந்தபாடு இல்லை. 

தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர்களின் ஒட்டு மொத்த நலனுக்காக தீரமுடன் போராடிய போராளிகளின் மீது புனையப்பட்ட காவல்துறையின் குற்றவியல் வழக்குகள்‌ தமிழக அரசால் இரத்து செய்யப்பட்டு உள்ளது .

இதை தொடர்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும்,

மாவட்டக் கல்வி அலுவலர்களும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை விலக்கிக்கொள்வதாக இறுதி ஆணை பிறப்பித்தார்கள்.

தற்போது , குற்றவியல் வழக்கின் பேரில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியப் போராளிகளின் தற்காலிக பணிநீக்கக் காலம் பணிக்காலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கதே.

இதன் காரணமாக, அனைத்து பாதிப்புகளும் களையப்பட்டு விட்டதாக கருதிக்கொள்ள  இயலாது.

1)தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலம் என்பதால், முந்தைய ஆண்டு ஊதிய உயர்வு வெட்டுகள் கைவிடப்படல்வேண்டும்.

தற்காலிக பணிநீக்கக் காலம் பணிக்காலம் ஆகியதால்,

பணிக்காலத்திற்கான ஊதியம் வழங்கப்படல் வேண்டும்.

தேர்வு நிலை/சிறப்பு நிலைக்காலங்கள் மறுநிர்ணயம் செய்யப்படல் வேண்டும்.

2) வேலை நிறுத்தப்போராட்டத்தில் கடந்த 22.01.2019 முதல் தீரமுடன் 

பங்கேற்றுள்ள இலட்சக்கணக்கான ஆசிரியர்-அரசு ஊழியர்களின் 2019சனவரி மாதத்தில் பிடித்தம்‌செய்யப்பட்டுள்ள வேலை நிறுத்தக்கால ஊதியப்பிடித்தங்கள்‌ அவரவருக்கு திரும்ப வழங்கப்பட்டு ,

பணிக்காலம் முறைப்படுத்தப்படல் வேண்டும். 

No work No pay என்‌ற பழிவாங்கும்-அச்சுறுத்தும் நடவடிக்கையால் ஊதிய இழப்பிற்கு ஆளாக்கப்பட்டோருக்கு எல்லாம் ஊதியம் வழங்கப்படல் வேண்டும்.

3)30.01.2019க்குள் பணியில் சேரவில்லை என்று பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்-அரசு ஊழியர்கள் இடமாறுதல் நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர்.

13.02.2019 வரையிலும் பழிவாங்கும் இடமாறுதலை ஏற்றுக்கொள்ளாமல் பணியில் சேராது காத்திருந்து, பழிவாங்கும் இடமாறுதலை முறியடித்து 14.02.2019 இல் அவரவரின் பழைய பணியிடத்தில் பணி ஏற்றுள்ளவர்களின் பணிக்காலம் பணிவரன்முறை செய்யப்படல் வேண்டும்.

4)இவைகள், மட்டுமல்ல... எந்தெந்த கோரிக்கைகளுக்காக 2019 சனவரி 22இல் வேலைநிறுத்தம் தொடங்கியதோ, அந்த வேலை நிறுத்தக் கோரிக்கைகள் அப்படியேத்தான் இன்றளவும் உள்ளது.

இக்கோரிக்கைகள்  நிறைவேற்றப்படல் வேண்டும்.

மேற்கண்டவைகள் உள்ளிட்ட , தேர்தல் கால- நடப்புக்காலக் கோரிக்கைகளும் தமிழக அரசின் முன் உள்ளது.

அன்பானவர்களே!

நம்பிக்கையோடு பள்ளிக்கல்விப் பணிகளில் ஈடுபடுங்கள்!

வசந்தம் வீசும்!

நன்றி!

இப்படிக்கு,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 

ஆசிரியர் மன்றம், 

 நாமக்கல் மாவட்டம் (கிளை).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக