இந்தியாவின் அவசர உதவி எண் 112 சேவையில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்பட மொத்தம் 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. இது, நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட சேவையாக செயல்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 112 என்ற அவசர உதவி எண்ணை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இதில், தனிநபர் ஒருவருக்கு அவசர சேவை தேவைப்படும்போது 112 என்ற எண்ணை அழைக்கலாம்.
இதன் மூலம், போலீசுக்கு 100, தீயணைப்புக்கு 101 மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு 1090 ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் இந்த சேவை செயல்படுத்தப்படுகிறது.
அதேபோல் சேவைக்காக தொடங்கப்பட்ட இந்த எண்ணை வேடிக்கைக்காக யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.