சனி, 3 அக்டோபர், 2020

அக்டோபர் 3,வரலாற்றில் இன்று.சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவு தினம் இன்று.

அக்டோபர் 3,
வரலாற்றில் இன்று.


சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவு தினம் இன்று.


ம..பொ. சிவஞானம் (ஜுன் 26, 1906- அக்டோபர் 3, 1995) இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார்.

 மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம. பொ. சி. என்று ஆயிற்று. சென்னை விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26/6/1906 அன்று பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார்.

 
பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். இத்தொழிலை அவர் அதிக நாள் செய்து வந்தார். 31ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஒரு மகன், இரு மகள்கள். பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். ம.பொ.சி. தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரத்தைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தினார். ஆயினும் சிறைவாசம் அவருக்களித்த பரிசு தீராத வயிற்றுவலி. வாழ்நாளின் இறுதிவரை அவரை அந்த வயிற்று வலி வதைத்தது.

1946ஆம் ஆண்டில் தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். ஆகஸ்ட் 8, 1954ஆம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் பேராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார்.

திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர்மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர்மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.

1950இல் சென்னை ராயபேட்டை காங்கிரஸ் திடலில் ம.பொ.சியின் முயற்சியால் தமிழ் வரலாற்றில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைப்பெற்றது. ரா.பி.சேதுப்பிள்ளை தொடங்கி வைக்க, டாக்டர் மு.வரதராசனார் தலைமை வகித்தார். பெருந்தைலவர் காமராஜர் உட்பட அனைத்து கட்சி தமிழ் அறிஞர்களும் இதில் கலந்து கொண்டனர். ம.பொ.சி எதிர்பார்த்ததை போல சிலப்பதிகார விழா மாபெரும் சர்வ கட்சி தமிழ் கலாச்சார விழாவாக மாறியது. அடுத்த ஆண்டு முதல், ம.பொ.சி தன் தமிழரசு கழகம் மூலம் சிலப்பதிகார விழாவை ஆண்டுதோறும் கொண்டாடினர். ம.பொ.சிக்குப் பின், அவர் மகள் ம.பொ.சி.மாதவி பாஸ்கர் தன் தந்தையின் பெயரில் தொடங்கிய அறக்கட்டளை சார்பாக சிலப்பதிகார விழாவை 2013ஆம் ஆண்டு முதல் கொண்டாடத் தொடங்கினார்.

வ. உ. சிதம்பரனார் செய்த தியாகங்களை உலகறிய செய்தவர் ம.பொ.சி. 

வ.உ.சியின் வரலாற்றை பற்றி, ம.பொ.சி எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது. இதன் காரணமாக பின்னாளில் வ.உ.சி, 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். 

பி.ஆர். பந்துலு ம.பொ.சியின் நூலை தழுவி கப்பலோட்டிய தமிழன் என்னும் திரைப்படத்தை இயக்கினார்.

 

ம.பொ.சி எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் வரலாற்று நூல், கட்டபொம்மனின் புகழை எங்கும் பரவ செய்தது. இந்நூலை தழுவி பி. ஆர். பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். 

ம.பொ.சி 1995ஆம் ஆண்டு இதே நாளில் காலமானார்.

அக்டோபர் 3, வரலாற்றில் இன்று.சர்வதேச போராட்ட தினம் இன்று.

அக்டோபர் 3,
 வரலாற்றில் இன்று.

சர்வதேச போராட்ட தினம் இன்று.

உலக தொழிற்சங்க சம்மேளனம் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 3 ஆம் நாளை சர்வதேச போராட்ட தினமாக அனுசரிக்குமாறு உலகில் உள்ள உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் அறை கூவல் விடுத்திருக்கிறது

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் (CPS) உள்ள ஆசிரியர்கள்,பெயர்- பிறந்த தேதி மற்றும் பல்வேறு திருத்தங்கள் செய்வதற்கான வழிமுறைகளை data centre வெளியிட்டுள்ளது...