வெள்ளி, 2 அக்டோபர், 2020

*🖥️நிதியாண்டு 2019-2020 ஆம் ஆண்டிற்கு வருமானவரி E-Filing செய்வது எப்படி என்பது குறித்த விளக்கம்.*

*🖥️Income Tax of India*

*வருமானவரி E-Filing செய்வதற்கு இறுதி தேதி 30.11.2020.*

*🖥️நிதியாண்டு 2019-2020 ஆம் ஆண்டிற்கு வருமானவரி E-Filing செய்வது எப்படி என்பது குறித்த விளக்கம்.*

*வருமானவரி E-Filing செய்யும்போது கவனிக்க வேண்டியவை மற்றும் தேவையான விவரங்கள்.*

*1)E-Filing User id மற்றும்  Password.*

*2)படிவம் 16 அல்லது 2020 பிப்ரவரி மாதத்தில் சமர்பித்த வருமானவரி படிவம்.*

*3)லிங்க் ஆதார் மற்றும் பான் எண்.(ஆதார் எண் விண்ணப்பிக்கும்போது கொடுத்த அலைபேசி எண் E-Filing new register செய்யும்போது பதிவு செய்த அலைபேசி எண் இரண்டும் ஒரே எண்ணாக இருக்க வேண்டும்.*

*E-Filing செய்து நிறைவாக Submit கொடுத்தால் ஆதார் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணிற்கு OTP வரும்.OTP எண்ணை பதிவிட்டால் உடனே உங்கள் மெயிலுக்கு Acknowledgement DO not send Bengaluru address என்று வந்தால் E-Filing நிறைவுற்றது.*

*ஆதார் லிங்கை பல்வேறு காரணங்களால் தேர்வு செய்ய இயலாதவர்கள்(Online submit செய்ய இயலாதவர்கள்)*
*Centrelized processing centre,Income tax department,Bengaluru ஐ தேர்வு செய்து Submit செய்தால் Acknowledgement வராது.அதற்குப் பதில் Income tax E-verification form generate ஆகும்.அதில் கையொப்பமிட்டு Centrelized processing centre,Income tax department,Bengaluru 560500 முகவரிக்கு  சாதாரண தபாலில் அல்லது விரைவஞ்சலில் E-Filing செய்த 120 நாட்களுக்குள் பெங்களூரு சென்று சேரும் வகையில்  அனுப்பி வைத்தால் return verification முடிந்து அதன் பிறகே Acknowledgement Generate ஆகும்.*

*4)E-Filing செய்யும்போது  TDS தொகை மற்றும்  E-Filing Tax தொகை இரண்டு தொகையும் ஒன்றாக இருக்க வேண்டும்.ஒரு ரூபாய் மாறி இருந்தாலும் உங்கள் மெயிலுக்கு Mismatch என்று உங்களுக்கு மெயில் மற்றும் தபால் வரும்.*

*எனவே அலுவலகத்தில் TDS செய்தபிறகே E-Filing செய்ய வேண்டும்..அப்பொழுதுதான் Mismatch வரும் வாய்ப்பு ஏற்படாது.*

*5)Nil Tax உள்ளவர்களும் கட்டாயமாக E-Filing செய்யவேண்டும்.*

*Nil Tax உள்ளவர்கள் அலுவலகத்தில் TDS செய்யும்வரை E-Filing செய்ய காத்திருக்க வேண்டியதில்லை.உடனடியாக E-Filing செய்யலாம்.*

*E-Filing பக்கத்தை தமிழ்மொழியில் மொழிமாற்றம் செய்து கொள்ளலாம்.*

*மேலும் விபரங்களுக்கு  கீழே கிளிக் செய்க.*


*🌟ஆசிரியர்களின் வருமானவரி TDS செய்யப்பட்டுள்ளதா? என தெரிந்து கொள்வது எப்படி?*

*🌟ஆசிரியர்களின் வருமானவரி TDS செய்யப்பட்டுள்ளதா? என தெரிந்து கொள்வது எப்படி?*
   
 
INCOME TAX OF INDIA

How to check our TDS details in income tax website

உங்களது வருமானவரி TDS செய்யப்பட்டுள்ளதா? என தெரிந்து கொள்வது எப்படி?

 1.login e-Filing page

 2.my account—–view form 26 AS—–Conform—-agree + proceed

 3.view tax credit—–select assessment year—-view as select HTML —-view / download—–export as PDF

 மேலும் விவரங்களுக்கு

Click below and watch this video  CLICK BELOW LINK.
வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்க.
 

அக்டோபர் 2,வரலாற்றில் இன்று.பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் இன்று.

அக்டோபர் 2,
வரலாற்றில் இன்று.

பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் இன்று.

இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்... என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்!

 'இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்', 'அப்படி ஏன் சொல்றேன்னேன்', 'ரொம்ப தப்புன்னேன்', 'அப்பிடித்தானேங்கிறேன்', 'அப்ப பாப்போம்', 'ஆகட்டும் பார்க்கலாம்' போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!

நிறைய பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக்கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!

தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டா உன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருதுநகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்!

தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்
கொண்டார்!

தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு ஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத்துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!

விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2ஆம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!

அக்டோபர் 2,வரலாற்றில் இன்று.முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் இன்று (1904).

அக்டோபர் 2,
வரலாற்றில் இன்று.


முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் இன்று (1904).

மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது கங்கைக் கரையில் தொலைந்து போனார். இடையர்களால் மீட்கப்பட்டு அவர்களால் சிலகாலம் வளர்க்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டார். ஒன்றரை வயதில் தந்தை இறந்துவிட, மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தார்.

ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றபோது மைனராக இருந்தும் சிறை புகுந்தார். பின்னர் உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டார். ஒன்பது வருடங்களை சிறையில் கழித்தார்.

உடல் நலமில்லாத மகளைப் பார்க்க பரோலில் வந்தார்; மகள் இறந்துவிடவே,  மீண்டும் சிறை புகுந்தார். பிரதமராக இருந்தபோது தனது மகன், கல்லூரியில் சேர பரிந்துரை தர மறுத்துவிட்டார்.

சாதி அடையாளம் அற்றவர். பெயருக்கு பின்னால் இருந்த சாதிப் பெயரைத் துறந்து ஹரிஜன சேவையில் தீவிரமாக ஈடுபட்டார். ‘சாஸ்திரி’ என்கிற பட்டம் அவர் காசி, வித்யா பீடத்தில் படித்துப் பெற்றது.

சிறந்த நிர்வாகி. ஜி.பி.பந்த் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பெண் நடத்துநர்களை கொண்டு வந்தார். உள்துறை அமைச்சராக இருந்தபோது லோக்பாலை அமல்படுத்த அப்போதே அவர் ஆசைப்பட்டார்.

காமராஜர் திட்டத்தால் பதவி விலகிய பின்னர் பருப்பு, காய்கறிகளை உணவில் குறைக்கச் சொன்னார். சேமிக்கிற அளவுக்கு சம்பளம் வருவது தெரிந்ததும் சம்பளத்தை குறைத்துக்கொண்டார். ஒருமுறை காஷ்மீர் பயணத்தின்போது சொந்தமாக ஸ்வெட்டர்கூட இல்லாமல் இருந்தார். அவர் இறந்தபோது காருக்கு கட்ட வேண்டிய கடன் பாக்கி இருந்தது.

போர்க்காலத்தில் ‘ஜெய் ஜவான் ஜெய் கிஸான்’ (வீரர்களுக்கு வெற்றி! வேளாண்மைக்கு வெற்றி!) என்கிற கோஷத்தை தந்தார். தேசிய பால்பண்ணை வளர்ச்சித்துறையை உண்டாக்கி வெண்மைப் புரட்சிக்கான அடித்தளமிட்டார்.

நேருவின் மறைவுக்குப் பின்னர் இந்தியாவின் பிரதமர் ஆனார். இந்தித் திணிப்பு, மலையகத் தமிழர்களை அகதிகளாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஆகியவை இவர் மீதான விமர்சனங்கள்.

கட்ச் பகுதியில் பாகிஸ்தானுடன் நிலத்தகராறில் அமைதி யாக ஒப்பந்தம் செய்துகொண்டார். சீனப்போரில் இந்தியா தோற்றிருந்தது வேறு பாகிஸ்தானுக்கு உத்வேகம் தந்திருந்தது. காஷ்மீரில் கலவரங்கள் சூடு பிடித்தன. சாஸ்திரி தீரத்தோடு வழிகாட்டினார். சர்வதேச எல்லைக் கோட்டை கடந்து லாகூர்வரை இந்திய ராணுவம் பாய்ந்த போது சாஸ்திரியை உலகம் அண்ணாந்து பார்த்தது.

தாஷ்கண்ட்டில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் மர்மமான முறையில் இறந்து போனார். 20 மாதங்களே இந்தியாவை ஆண்டாலும் எளியவர்களின் தலைவராக திகழ்ந்த அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது!

அக்டோபர் 2,வரலாற்றில் இன்று.நம் தேசப்பிதா காந்திஜி பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 2,
வரலாற்றில் இன்று.

நம் தேசப்பிதா காந்திஜி பிறந்த தினம் இன்று.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கிய அவர், தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார். 

பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி, பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 


1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

 அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், ஆங்கிலேயர்களிடமிருந்து நமது நாட்டை மீட்க அஹிம்சை வழியில் போராடினார்.

ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதன் நோக்கமாக, 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ‘ரவ்லத் சட்டம்’ மற்றும் ‘ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு’ குரல்‌ கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ‘ஒத்துழையாமையை இயக்கத்தினை’ 1922  ஆம் ஆண்டில் தொடங்கினார். இளைய தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது. இவ்வியக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922இல் உத்திரபிரதேசத்தில் ‘சௌரி சௌரா’ என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அந்நியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டார். இதனால், காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினைத் தொடங்கிய அவரின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில், காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது.

போட்டி நடைபெறும் மொழி ஆங்கிலம் மற்றும் இந்தி!இருமொழிக்கொள்கை என்பது இதுதானா?!தாய்மொழிவழிக் கல்வியின் பாசம் இவ்வளவுதானா?!

மத்திய பட்ஜெட்டில் அறிவித்த புதிய வருமான வரியை பின்பற்ற விருப்பமா? ~ வரிகள் ஆணையம் வேண்டுகோள்…