வியாழன், 16 ஜூலை, 2020

* கலை,அறிவியல் படிப்புகளில் சேரவும்,தொழில்நுட்ப கல்லூரிகளில் சேரவும் விண்ணப்பிக்கும் இணையதள முகவரிகள்.

* கலை,அறிவியல் படிப்புகளில் சேர https://t.co/bPaKTWyGAN மற்றும் https://t.co/kObhJ23GgO என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம்

* தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு https://t.co/DYLYd8MTG5,https://t.co/ZW58IfUkOZ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்

*✍🏻12 ஆம் வகுப்பு தேர்வு - விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை.*

*✍🏻12 ஆம் வகுப்பு தேர்வு - விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை.*

ஜூலை 16, வரலாற்றில் இன்று.

உலகின் முதல் அணுகுண்டு சோதனை நடந்த தினம் இன்று  (1945)

இந்த அணுகுண்டு சோதனை
 ஐக்கிய அமெரிக்க இராணுவத்தால் ஜூலை 16ம் தேதி 1945ம் ஆண்டு நியூ மெக்சிக்கொவின் சொகோறோவிலிருந்து தென் மேற்காக 56 கி.மீ தூரத்திலுள்ள ஜோர்நாடா டெல்மியோட்டொ பாலைவனத்தில் மேற்கொள்ளப்பட்டது.

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் மூன்று அம்சக்கோரிக்கைகளில் மூன்றாவது கோரிக்கையின் மீது செயல்முறைகள் வெளியிட்ட நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதாகும்! தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு மூன்று மாத ஊதியமும் விரைந்து வழங்கப்படல் வேண்டும்!*



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் மூன்று அம்சக்கோரிக்கைகளில் மூன்றாவது கோரிக்கையின் மீது செயல்முறைகள் வெளியிட்ட நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதாகும்! தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு மூன்று மாத ஊதியமும் விரைந்து வழங்கப்படல் வேண்டும்!

*12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்*

*தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.*

+2 results:
முதலில்  நீங்கள் கீழ்கண்ட  லின்ங் ஏதாவது ஒன்றினை கிளிக் செய்யுங்க


http://tnresults.nic.in/


http://dge2.tn.nic.in/

http://tnresults.nic.in/

http://www.dge.tn.gov.in/index.html

அதில் தமிழ்நாடு HSE (+2) மார்ச் 2020 தேர்வு முடிவுகள் இணைப்பைக் கிளிக் செய்க

அடுத்து அதில் உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதி,மாதம், வருடம் ஆகிய விவரங்களை உள்ளிடவும்

அடுத்து அதில் சமர்ப்பி பட்டனைக் கிளிக் செய்யவும்

இப்போது நீங்கள் உங்கள் 12 ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்பார்க்கலாம்

மேலும் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2020 தற்காலிகமானது என்பதால் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலிருந்து அசல் மதிப்பெண் தாளை சேகரிக்க வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் மாணவர்களின் Mobile எண்ணுக்கு SMS மூலமும் வெளியிடப்பட உள்ளது.

*_12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 92.3 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது._


*மாணவிகள்: 94.80% தேர்ச்சி; மாணவர்கள்: 89.41% தேர்ச்சி*

*🌐ஜூலை 16,* *வரலாற்றில் இன்று:கும்பகோணம் பள்ளி தீ விபத்தில்* *94 குழந்தைகள் கருகிய தினம் இன்று (2004).*

ஜூலை 16, வரலாற்றில் இன்று.

மறக்க முடியாத சோக தினம் இன்று.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில்
94 குழந்தைகள் கருகிய தினம் இன்று (2004).

கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் காயமடைந்தனர்.

 ஆண்டுதோறும் ஜூலை 16ஆம் தேதி இந்தக் குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 15ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 16) அனுசரிக்கப்படுகிறது.

பள்ளியின் முன்பாக 94 குழந்தைகளின் படங்களை அலங்கரித்து வைத்து, பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், அனைத்துப் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவியும், மெழுகுவத்தி ஏற்றியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்துவார்கள்.

அதன் பிறகு 94 குழந்தைகளின் பெற்றோர்களும் பழைய பாலக்கரையில் உள்ள இறந்த குழந்தைகளின் நினைவிடத்துக்கு ஊர்வலமாகச் சென்று மவுன அஞ்சலி செலுத்துவார்கள். இதனைத்தொடர்ந்து, மாலை 6 மணியளவில் மவுன ஊர்வலமாக மகாமகம் குளத்துக்குச் சென்று, தீவிபத்தில் இறந்த குழந்தைகள் 94 பேரின் நினைவாக மோட்ச தீபம் ஏற்றுகின்றனர்

*🌐ஜூலை 16, வரலாற்றில் இன்று:சர்வதேச பாம்புகள் தினம்.*

ஜூலை 16, வரலாற்றில் இன்று.

சர்வதேச பாம்புகள் தினம் இன்று.

உலகில் கிட்டத்தட்ட 3000 வகையான பாம்பு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன கண்டறியப்படாதது இன்னும் எத்தனையோ.

ஆனாலும் அவற்றில் உலகம் முழுவதிலும்  வெறும் 600 வகைப்பாம்புகளே நஞ்சுள்ளவையாக கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றிலும் வெறும் 200 வகைப்பாம்புகளே மனிதனைக் கொல்லும் அளவு விஷம் உடையவை.

மற்றவையெல்லாம் மனிதனைக் கண்டு அஞ்சி ஒதுங்கியே உள்ளன. மனிதனின் இடையூறு இல்லாமல் எந்தப் பாம்பு வகைகளும் மனிதனைச் சீண்டுவதே இல்லை.

பாம்புகள் சுமார் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே அவற்றின் மூதாதையர் இனத்திலிருந்து பரிணமித்து உருவானவை. ஆனால் மனிதன் வெறும் இரண்டுலட்சம் ஆண்டுகளுக்கு முன்தான் ஆடையின்றித் தோன்றியவன்.

பாம்புகள் பற்றிய பழமொழியால் அவற்றின் மீது தீரா வெறுப்பிலுள்ள நமக்கு அவற்றின் படைப்பின் காரணத்தை உணர்ந்தால் பாம்பின்மீது மரியாதையே வரும்.

"பாம்பு என்றால் படையும் நடுங்கும்"

"காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது"

"பாம்பைக் குட்டியிலேயே கொன்றுவிடு"

 இதுவெல்லாம் பாம்பினைப் பற்றிய தமிழ் பழமொழிகள்.

அப்படி என்னதான் பயம் எனத் தெரியவில்லை. ஆனால் அதன்மீதான பயம் மனிதனுக்கு இன்றுவரை நீங்கவில்லை.

பயத்தின் இன்னொரு வடிவம் சரணாகதி அதன்விளைவுதான் பாம்பு வழிபாடு.

 பாம்பை வழிபடுகிறோம.் அதுவே நேரில் வந்தால் கல்லையும் கம்பையும் தூக்குகிறோம்.

ஒருபோதும் பாம்புகள் மனிதனைத் தேடித்தேடி, துரத்தித்துரத்தி எல்லாம் இதுவரை கடித்ததாகத் தெரியவில்லை. அதற்கு மனிதனைக் கடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் விஷப்பாம்புகளின்
இரை பட்டியலில் மனிதன் ஒருபோதும் இல்லை.

மனிதனைக் கடிப்பதென்றால் அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே கடிக்க முயலும். அதுவும் நாம் அதை எந்தவித்த்திலாவது தாக்க முயன்றால் தான். முதலில் எச்சரிக்கை செய்யும் அதையும் தாண்டிய பின்பே கடிக்க முயல்கிறது.

கடிக்கிற எல்லாப் பாம்புகளுக்கும் விஷம் கிடையாது. உலகம் முழுவதும் 2,968 வகையான பாம்புகள் இருக்கிறது.இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி மட்டும் வாழும் தன்மை கொண்டவை.

அவைகள்
நாகபாம்பு(நல்லபாம்பு)
கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை விரியன்.

இவைகளில் நாகப்பாம்பானது,
பொதுவாக பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நாகபாம்பு தமது தலையை உயர்த்தி படம் எடுக்கும்.ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வளரும். நாகப்பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணத்தை ஏற்படுத்தும். இவை  எலியின் வளை மற்றும் கரையான் புற்றுகளையும் வசிப்பிடமாக்கிவிடும்.

விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பது மிகத்தவறான கருத்தாகும். பெரும்பாலும் உயிர்போய்விடும் என்கிற பயமே மனிதனுக்கு சாவைக்கொண்டு வந்துவிடுகிறது.

பாம்புகள் பற்றிய மக்களின் தவறான கருத்துகள் உலவுகிறது அவை.

 நாகப்பாம்பு மகுடியின் இசைக்கு தக்கபடி படம் எடுத்து ஆடும்.

நாகப்பாம்பும் சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பாம்புகள்.

நாகப்பாம்பு நீண்டநாள் யாரையும்  தீண்டாமல் இருந்தால் தலையில் நாகமாணிக்கம் உருவாகும்,அதன் ஒளியில் இரவில் இரைதேடும்.

நாகப்பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அதன் இணை  கொன்றவரை பழி வாங்கும் வரை காத்திருக்கும்(இந்த அறிவை மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவிற்கு நன்றி)

பாம்புகள் பாலை விரும்பி குடிக்கும்.

மண்ணுளிப் பாம்புகளுக்கு இரண்டு தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் வெண்குஷ்டம் வரும்.

பச்சைப் பாம்பு கண்களை குறிபார்த்து கொத்தும்.

கொம்பேறி மூக்கன் மனிதனை கடித்து கொன்று விட்டு, மரத்தில் ஏறி அந்த மனிதன் உடல் எரிப்பதை பார்க்கும்.

இவ்வாறு நம்பப்படுகிற எதுவுமே உண்மையல்ல..

அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டியது.

வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிராம் நல்லபாம்பு விஷம் சுமார் முப்பதாயிரம் ரூபாய்; கட்டுவிரியன் விஷம் சுமார் முப்பத்தைந்தாயிரம் ரூபாய்; கண்ணாடி விரியன் விஷம் சுமார் நாற்பதாயிரத்திற்கு மேல் சுருட்டை விரியன் விஷம் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றன.

 எலிக்கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகித்து உணவுச்சங்கிலியில் முக்கிய இடத்தில் உள்ளதால் பாம்புகளைப் பாதுகாப்போம்.

நாமக்கல் மாவட்ட அரசு அலுவலர்களின் அலைபேசி மற்றும் தொலைபேசி எண்கள், அலுவலக மின்னஞ்சல் முகவரிகள்..

நாமக்கல் மாவட்ட அரசு அலுவலர்களின் அலைபேசி மற்றும் தொலைபேசி எண்கள், அலுவலக மின்னஞ்சல் முகவரிகள்..