வெள்ளி, 14 ஜனவரி, 2022

கேரளாவில் நாளை பொங்கல் விடுமுறை அறிவிப்பு


 

தொமுசபேரவை பொதுச்செயலாளர்- நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு.மு.சண்முகம் அவர்களுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌மாநில முதன்மைப் பொறுப்பாளர்கள் சந்திப்பு!

 தொமுசபேரவை பொதுச்செயலாளர்- நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு.மு.சண்முகம் அவர்களுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌மாநில முதன்மைப் பொறுப்பாளர்கள் சந்திப்பு! +++++++++++++±++++++ தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் திரு.பெ.இரா.இரவி , மாநிலப்பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன்‌,மாநிலப்பொருளார்‌ திருமுருக செல்வராசன் ஆகியோர் தொழிலாளர் முன்னேற்றச்சங்க பேரவையின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான‌ மதிப்புமிகு . மு.சண்முகம் அவர்களை இன்று (13.01.2022-வியாழன்)பிற்பகல் 05.00மணியளவில் ஐயா அவர்களின் இல்லத்தில் சந்தித்தனர். இச்சந்திப்பில் மாநிலச்சொத்துப்பாதுகாப்புக்குழு உறுப்பினர்‌ திரு.ந.இரவிச்சந்திரன் உடன் இருந்தார். இச்சந்திப்பின்‌பொழுது மாண்புமிகு தமிழ்நாடு ‌முதலமைச்சர்‌ தலைவர் தளபதி அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அரசு இந்தியா முழுதும் பாராட்டும்‌பெறும் வகையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் ஐயா அவர்கள் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களை வரவேற்றுப்பாராட்டுவோம்.அதே நேரத்தில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றித்தரச் சொல்லி உரிமையோடு வலியுறுத்துவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஐயா அவர்கள் நம்பிக்கையோடு குறிப்பிட்டார்கள். தமிழ்நாட்டின் ஆசிரியர்‌-அரசு அலுவலர் சமுதாயத்திற்கும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌மறவர்- மறத்தியருக்கும் தொமுச பேரவை சார்பிலான புத்தாண்டு மற்றும்‌ பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொண்டார்கள். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில முதன்மைப் பொறுப்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு .மு.சண்முகம் ஐயா அவர்களுக்கு புத்தாடை அணிவித்து ,பாவலர் புகழ் வணக்க நாள்காட்டி வழங்கி புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள். -அன்புடன்... முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.