சனி, 16 மார்ச், 2019

மார்ச் 2018 & ஏப்ரல் 2018 க்கு தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட 40 நாளிதழ்களையும் பழைய பேப்பர் கடையில் எடை போட்டு... இதன்மூலம் கிடைக்கும் ரூபாயை வட்டாரக்கல்வி அலுவலத்தில் கொடுக்க வேண்டும்_ இயக்குநர் செயல்முறைகள்



SAALA SIDDHI 2017-18 & 2018-19 க்கான கள ஆய்வு ...

ஷாலா சித்தி குழு பார்வை...

வரும் 18.3.19 முதல் 26.03.19 வரை  பள்ளிகளில் 
DIET Faculty, 
பிற வட்டார  BEO, Middle school HM மற்றும் BT ஆசிரியர்  SAALA SIDDHI 2017-18 & 2018-19 க்கான கள ஆய்வு நடத்த உள்ளனர்.

எனவே HMS and Trs saala siddhi யில் பதிவு செய்த 7 கலங்களில் உள்ளது போல் பள்ளியில் அனைத்து வசதிகளையும் செய்துக்கொள்ளுங்கள்.

Click here...

வருமானவரி நோட்டீஸ் வந்தால் எப்படி பதில் அளிப்பது?

*🌷வருமானவரி நோட்டீஸ் வந்தால் எப்படி பதில் அளிப்பது?*

*வருமானவரி தாக்கலில் உள்ள பெயர், பான் எண் மற்றும் குறிப்பிட்டுள்ள நிதி ஆண்டு ஆகியவற்றை உறுதி செய்துகொள்ளவும் நோட்டீஸ் அனுப்பப்படலாம்.*

*அவற்றை ஆன்லைனிலேயே முடிக்கும் வசதி உள்ளது. வருமானவரி தாக்கல் செய்த பின் வருமானவரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தால் அதற்கு எப்படி முறையாக பதில் அளிப்பது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். வருமானவரித்துறை வரி தாக்கல் செய்தவர்கள் அளித்துள்ள ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சரியில்லை என சந்தேகம் எழுந்தாலோ சரிபார்க்க விரும்பினாலோ, சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.இதை பொதுவாக scrutiny notice என்று குறிப்பிடுவார்கள். இந்த நோட்டீஸ் வந்துவிட்டால் பதறவோ பயப்படவோ வேண்டாம். சுமூகமாக இந்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கலாம். முதலில் இந்த நோட்டீஸ் இரண்டு வகையானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட விவரங்களைமட்டும் கோருவது limited வகை நோட்டீஸ்.*

*முழுமையான ஆவணங்கள் மற்றும் விவரங்களைக் கோருவது complete வகை நோட்டீஸ். இதில் எந்த வகையான நோட்டீஸ் வந்திருக்கிறது என்பதைப் பொறுத்து பதில் அளிக்க வேண்டும். வருமானவரி தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து ஆறு மாதங்களுக்குள் வருமானவரி நோட்டீஸ் அனுப்பப்படும். உதராணமாக, 2017-18ஆம் நிதி ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் ஜூலை 31, 2018 அன்று செய்யப்பட்டால் செப்டம்பர் 30, 2019க்குள் நோட்டீஸ் வரவேண்டும். இந்த அவகாசத்திற்குள் நோட்டீஸ் வந்திருக்கிறதா என்பதை நோட்டீஸில் உள்ள தேதியைப் பார்த்து உறுதிசெய்துகொள்ள வேண்டும். அந்த அவகாசத்தில் இல்லை என்றால் அதை வருமானவரி அதிகாரியிடம் தெரிவிக்கலாம்.*

*பொதுவாக வருமானவரி நோட்டீஸ் வந்தால் சம்பந்தப்பட்ட நபரோ அல்லது அவரின் பிரதிநிதியாக அவருடைய வழக்கறிஞரோ கணக்குத் தணிக்கையாளரோ நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த நடைமுறையை எளிமையாக்க, ‘e-proceeding’ என்ற வசதிஅறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விவரங்கள் மட்டும் கோரும் நோட்டீஸ்களுக்கு இந்த வருமானவரித்தறை இணையதளத்தின் மூலம் பதில் அளிக்கலாம். வருமானவரி தாக்கலில் உள்ள பெயர், பான் எண் மற்றும் குறிப்பிட்டுள்ள நிதி ஆண்டு ஆகியவற்றை உறுதி செய்துகொள்ளவும் நோட்டீஸ் அனுப்பப்படலாம். அவற்றை ஆன்லைனிலேயே முடிக்கும் வசதி உள்ளது.*
*எந்த வகையான நோட்டீஸ் அளிக்கப்படுகிறதோ அதற்கு ஏற்ப ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு கடைசி தேதியும் அறிவுறுத்தப்படும். குறிப்பிட்ட தேதிக்குள் ஆவணங்களைத் தயார் செய்ய முடியாவிட்டால் அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்கலாம். இவ்வாறு விண்ணப்பிக்கும்போது தவறாமல் பான் எண் மற்றும் எந்த நிதி ஆண்டுக்கானது என்பதை குறிப்பிட வேண்டும். நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் இருந்தால் குறித்த தேதிக்குள் நேரில் ஆஜராகிவிட வேண்டும். இல்லையென்றால் வீண் அபாரதம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். ஆவணங்களை பரிசோதிக்கும்வருமானவரி அதிகாரி சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களைஏற்கவும் மறுக்கவும் சாத்தியம் உண்டு என்பதால் எப்போதும் சரியான ஆவணங்களை தயாராக வைத்திருப்பது நல்லது.*

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கவில்லையா?முடங்குவதை தடுக்க ஒரே வழி!


ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கவில்லையா?? முடங்குவதை தடுக்க ஒரே வழி!!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு  இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது என பல வகைகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க மார்ச் 31, 2019 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 31ஆம் தேதிக்குப் பின் ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார்டு முடக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement

aathaar pan க்கான பட முடிவு
கடந்த 2018 மார்ச் நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 33 கோடி பான் கார்டுகளில் 16.64 கோடி கார்டுகளில் மட்டுமே ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கhttps://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்துக்குச் சென்று இணைத்துக்கொள்ளலாம்.
ஆதார் எண் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற முகவரிக்குச் சென்று பார்த்துக்கொள்ளலாம். 

16/03/2019 பள்ளி வேலை நாள்~மாவட்டக் கல்வி அலுவலர்,திருச்செங்கோடு…

நாடாளுமன்ற தேர்தல் - 2019 ~மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ~தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்…