ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற வட்டார செயலாளர்கள் கூட்டம் ( 16-2-19 )~ நிகழ்வுகள்....
16-2-19 பிற்பகல் நாமக்கல் கோட்டை துவக்கப்பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற வட்டார செயலாளர்கள் கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் திரு.
வெ.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது...
நாமக்கல் வட்டாரச் செயலாளர்
திரு.அ.ஜெயக்குமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த,மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்
திரு.வெ.பாலமுரளி மற்றும் மாநில தலைமை நிலையச் செயலாளர் திரு.பெ.பழனிசாமி ஆகியோர் இயக்க உரையாற்ற...
மாவட்டச் செயலாளர்
திரு.முருக.செல்வராசன் அவர்கள் விளக்க உரை நிகழ்த்த மாவட்டத் துணைச் செயலாளர் திரு.வெ.வடிவேல் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)