சனி, 28 ஏப்ரல், 2018

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு முழுத்தகுதி பெற்ற அரசு நகராட்சி/ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் (Seniority List) தயார் செய்து அனுப்பக் கோருதல் சார்பு...

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடஉயர்வு மாறுதல் சார்ந்த படிவங்கள்...

மாணவர்கள் பாதுகாப்பு சார்பான முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகள்...

தகவல் தொழில்நுட்ப பயிலரங்கு (28-04-18~ நாமக்கல்) அழைப்பிதழ்...


ஆசிரியர் மன்றத்தினருக்கு வணக்கம்.

தகவல் தொழில் நுட்ப பயிலரங்குக்கு நாமக்கல் வருகை தரும்  அனைவரையும் மாவட்ட இணையக்குழுவின் சார்பில்  அன்புடன் வரவேற்கிறேன்.

தங்களுக்கு சில தகவல்கள் தெரிவிக்கிறேன்.

1)நாமக்கல் நகரப்பேருந்து நிலையத்தில் இருந்து  வளையப்பட்டி,
காட்டுப்புத்தூர்,செவிந்திப்பட்டி மற்றும்
தொட்டியம் செல்லும் நகரப்பேருந்துகளில் ஏறி திருச்சிசாலை -ஆண்டவர்பெட்ரோல்பங்கு என கேட்டு இறங்கிக்கொள்ளலாம்.பெட்ரோல்பங்குக்கு வடக்கு பக்கத்தில் பொன்விழா நகர் நுழைவு வாயில் அமைந்துள்ளது.
நுழைவு வாயிலிலேயே பள்ளியின் பெயர்ப்பலகை இருக்கிறது.
நுழைவு வாயில் வழியில் பயணித்து இரண்டாவது வடக்குபக்கச் சந்தில் திரும்பினால் பள்ளி வரவேற்கும்.எனவே எளிதாக பயிலரங்கிற்கு வரலாம்.

2)நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து(நாம் அடிக்கடி போராடும் இடத்தில் இருந்து) திருச்சிசாலை  ஷேர் ஆட்டோவில் பயணித்து பொன்விழாநகர்
நுழைவுவாயில் இறங்கிக்கொள்ளலாம்.

3)ஒன்றியத்தில் இருந்து குழுவாக பேருந்தில் பயணித்து  வருபவர் பேருந்து நிலையம் அடைவதற்கு முன்பாக ஈஷாகால்டாக்ஸிக்கு    அலைபேசி எண்7548884999 போன்செய்து பேருந்து நிறுத்தம் டூ மாருதிநகர் நடுநிலைப்பள்ளி என கூறி புக்செய்துக்கொள்ளலாம்.கார் டிரைவர் அழைப்பார். அவர் நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு வெளியே நிற்கச்சொல்லும் இடத்தில் நின்றால் பிக்கப் செய்து மாருதிநகர் பள்ளியிலேயே டிராப் செய்து அதாவது இறக்கி விட்டுவிடுவார்.கட்டணம்ரூ50/மட்டுமேயாகும்.

4)நாமக்கல் பேருந்து நிலையம் - மாருதிநகர் பள்ளி வரையிலான பயண உதவிகளுக்கு தேவையெனில்  எங்களைத்தொடர்பு கொள்ளுங்கள்.

திரு.மெ.சங்கர்
( 9443217553 ) ,

திரு.அ.ஜெயக்குமார்
( 9843180162 ) ,

திரு.த.தண்டபாணி  
( 94434 81828 ),

திருமதி.கு.பாரதி 
( 9843180162 ),

திருமதி.
பொன்.திலகம்
( 9486574127 ),

திருமதி.
ந.தங்கம்மாள் 
( 9486263631 )

ஆகியோரை தேவையெனில்  தொடர்புக்கொள்ளுங்கள்.

தங்களை பயிலரங்கிற்கு  எதிர்நோக்குகிறேன்.

-மெ.சங்கர்,
அமைப்பாளர்-மாவட்ட இணையக்குழு.