சனி, 16 ஜனவரி, 2021

*💉கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்???... யார் போடக்கூடாது???- மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!!*

*💉கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்???... யார் போடக்கூடாது???- மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!!*

*கொரோனா தடுப்பூசியை யாரெல்லாம் போட்டுக் கொள்ளலாம், யார் போடக் கூடாது என மத்திய சுகாதாரத் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.*


*18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.*

*ஒரு டோஸ் தடுப்பு மருந்து கொடுத்தால் அதன் பிறகு 14 நாட்கள் கழித்தே அடுத்த டோஸ் கொடுக்க வேண்டும்.*


*முதல் டோசில் எந்த வகை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதோ, அதே தடுப்பு மருந்துதான் இரண்டாவது டோசிலும் கொடுக்கப்பட வேண்டும். தடுப்பு மருந்துகளை மாற்றி கொடுக்கக் கூடாது.*


*குறிப்பிட்ட மருந்துகள், உணவுப் பொருட்கள், தடுப்பு மருந்துகள் அல்லது ஊசி மருந்துகளால் ஒவ்வாமை ஏற்படக் கூடியவர்கள், கொரோனா தடுப்பு மருந்து முதல் டோசின் போது ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடக் கூடாது.*


*காய்ச்சல் இருப்பவர்கள், மாதவிடாய் சரியான இடைவெளியில் இல்லாதவர்கள், நோய் எதிர்ப்பு குறைபாடு உடையவர்கள் தடுப்பூசி போடக்கூடாது.*


*பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போடக் கூடாது.*


*கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள், நோயால் உடல்நலம் குன்றி மருத்துவமனைகளில் இருப்பவர்கள் தடுப்பூசி போடக் கூடாது.*

உலகப் பொதுமறை!.திருப்பூர் கிருஷ்ணன்.திருக்குறள் 133 அதிகாரங்களைத் தாங்கியது. ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒரு தலைப்பு. அப்படியானால் 133 தலைப்புகள் இருக்க வேண்டும். ஆனால் 132 தலைப்புகள் தான் உள்ளன!

*உலகப் பொதுமறை!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
............................................
  திருக்குறள் 133 அதிகாரங்களைத் தாங்கியது. ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒரு தலைப்பு. அப்படியானால் 133 தலைப்புகள் இருக்க வேண்டும். ஆனால் 132 தலைப்புகள் தான் உள்ளன! 
............................................
  *மிகப் பழங்காலத்திலேயே திருவள்ளுவர் கள் அருந்துவதையும் புலால் உண்பதையும் ஆண்கள் பரத்தையரிடம் செல்வதையும் எதிர்த்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். 

  சங்க காலத்தில் இந்தப் பழக்கங்களெல்லாம் நடைமுறையில் இருந்ததைச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

  திருக்குறள் எழுதப்பட்ட காலத்தின் தொன்மை குறித்துக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது சங்கம் மருவிய கால நூல் என்றே பலராலும் கொள்ளப்படுகிறது. 

  தம் காலத்தில் நிலவிய தீய வழக்கங்களைத் துணிச்சலாக அவர் சாடியுள்ளார். புரட்சியாளராக இருந்த அவருக்குத் தாம் வாழ்ந்த காலத்தில் எத்தனை எதிர்ப்பு இருந்திருக்கும் என்பதை நாம் ஊகிக்க முடியும். 

  திருக்குறளின் கருத்து மட்டுமல்ல, கருத்து சொல்லப்படும் விதமும் தனி அழகுடையது. தமிழின் முதல் எழுத்தான அகரத்தில், `அகர முதல` என்று தொடங்கும் திருக்குறள், தமிழின் கடைசி எழுத்தான `ன்` இல், `கூடி முயங்கப் பெறின்` என முடிகிறது. 

  அரசியல் சார்ந்த அதிகாரங்கள் சில ஆண்டுகள்தான் செல்லுபடியாகும். வள்ளுவரின் 133 அதிகாரங்களும் எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகக் கூடியவை! 

  மூன்றடியால் உலகளந்தவர் திருமால் என வைணவம் பேசுகிறது. இரண்டே அடியால் அறநெறிகள் அனைத்தையும் அளந்து கூறிவிட்டார் வள்ளுவர்.   

  *திருக்குறளைப் பற்றிப் பல சுவாரஸ்யமான செய்திகள் உண்டு. திருக்குறள் 133 அதிகாரங்களைத் தாங்கியது. 

  ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒரு தலைப்பு. அப்படியானால் 133 தலைப்புகள் இருக்க வேண்டும். ஆனால் 132 தலைப்புகள் தான் உள்ளன! 

  திருக்குறளில் ஒரே தலைப்பைத் தாங்கி இரண்டு அதிகாரங்கள் உள்ளன! `குறிப்பறிதல்` என்ற தலைப்பில் பொருட்பாலில் 71 ஆம் அதிகாரம் உள்ளது. இதே தலைப்பிலேயே காமத்துப் பாலில் 110 ஆவது அதிகாரமும் அமைந்துள்ளது.

  முதலடியில் நான்கு சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீருமாக மொத்தம் ஏழே வார்த்தைகள் தான். ஏழே வார்த்தைகளில் 1330 குறள்களை எழுதி 1330 கருத்துகளைச் சொல்ல வேண்டுமானால் அதற்கு எத்தகைய மொழி வளம் இருக்க வேண்டும்? பயனற்ற ஒரே ஒரு வார்த்தை கூடத் திருக்குறளில் கிடையாது. 

   *திருக்குறளின் 133 அதிகாரங்களில் `அகர முதல எழுத்தெல்லாம்` என்ற குறளோடு தொடங்கும் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து என்கிற அதிகாரம். 

  தெய்வ நம்பிக்கை என்பது நம் தமிழின் மிகப் பழைய இலக்கியப் புதையலான சங்கப் பாடல்களிலேயே தென்படுகிறது. நம் பழைய இலக்கியங்களில் நாத்திகக் கருத்துக்கு இடமில்லை. 

  சங்கப் பாடல்களில் தெய்வத்திற்கு இன்ன வடிவம், இன்ன நிலம் என்றெல்லாம் தெளிவான அடையாளம் கொடுக்கப்பட்டாலும் வள்ளுவரின் கடவுள் பற்றிய சிந்தனைகள் எந்த அடையாளமும் இல்லாமல் அமைந்து வியப்பைத் தருகின்றன. 

  வள்ளுவர் கடவுளின் பெயரையோ கடவுள் ஆணா பெண்ணா என்பதையோ நெற்றிக் குறியையோ கை ஆயுதத்தையோ வாகனத்தையோ எங்குமே குறிப்பிடவில்லை. 

  அந்த தெய்வீக சக்தியின் பெருமைகளை மட்டுமே குறிப்பிடுகிறார். சங்கக் கடவுளுக்கும் வள்ளுவக் கடவுளுக்கும் தான் எத்தனை வேறுபாடு!

  வள்ளுவர் கடவுளை எட்டுக் குணங்கள் உடையவராகக் காண்கிறார். 

`கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை.`

   கடவுளின் அந்த எட்டுக் குணங்கள் எவை? `தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களில் நீங்குதல், பொருளுடைமை, முடிவில்லாத ஆற்றலுடைமை, வரம்பிலாத இன்பமுடைமை` என அந்தக் குணங்கள் சைவ ஆகமத்தில் கூறப்பட்டுள்ளன. 

   வள்ளுவர் எட்டுக் குணங்கள் உடையவன் எனக் கடவுளைப் பற்றிச் சொல்லும் இந்தக் குறள் திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாம் குறளாக உள்ளது. எனவே இதற்கு முந்தைய எட்டுக் குறள்களிலும் வள்ளுவர் சொல்லும் குணங்களே கடவுளின் எண்குணங்கள் என்கிறார்கள் சிலர். 

  `ஆதி பகவனாயிருத்தல், வாலறிவனாயிருத்தல், மலர்மிசை ஏகியவனாய் இருத்தல், வேண்டுதல் வேண்டாமை இலாதவனாய் இருத்தல், இருள்சேர் இருவினை சேராதவனாய் இருத்தல், பொறிவாயில் ஐந்தவித்தவனாயிருத்தல், தனக்குவமை இல்லாதவனாய் இருத்தல், அறவாழி அந்தணனாய் இருத்தல்` என்பதாக அக்குணங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. 

  *மத நல்லிணக்கத்தைப் பற்றி உரத்துக் குரல் எழுப்பப்படும் இக்காலத்தில் நாம் பின்பற்றத் தகக சமயம் வள்ளுவர் கூறும் சமயமே. ஜாதிச் சச்சரவுகள் தலைவிரித்து ஆடுகிற இன்றைய தருணத்தில் வள்ளுவரே நமக்குச் சரியாக வழிகாட்டக் கூடியவர். 

  நாம் எந்தச் சமயத்தைப் பின்பற்றினாலும் வள்ளுவர் கூறும் லட்சிய சமயத்தை நோக்கிச் செல்லும் பாதையாக நம் சமயத்தைக் கொள்வது நல்லது. 

  இன்று திருக்குறளின் பெருமை அகில இந்தியாவிலும் பேசப்படத் தொடங்கியுள்ளது. திருக்குறள் தமிழகத்திற்கோ இந்தியாவுக்கோ மட்டும் உரியதல்ல. அது உலகப் பொதுமறை

 . வள்ளுவர் நம் தமிழ் மொழியில் முழு உலகத்திற்குமான ஒரு நூலை எழுதினார் என்பதே உண்மை. 
............................................
நன்றி:
எழுத்தாளர் மதிப்புமிகு.திருப்பூர் கிருஷ்ணன்.

*📱வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் பாதுகாக்கப்படுமா?- நிர்வாகம் விளக்கம்*

*📱வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் பாதுகாக்கப்படுமா?- நிர்வாகம் விளக்கம்*

*டில்லி*

*வாட்ஸ்அப் நிர்வாகம் தாங்கள் அறிவித்துள்ள புதிய கொள்கையால் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து விளக்கம் வெளியிட்டுள்ளது.*

*வாட்ஸ்அப் நிர்வாகம் சமீபத்தில் ஒரு புதிய கொள்கையை அறிவித்தது. அதன்படி வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், படங்கள், செய்திகள் உள்ளிட்டவை யாவும் முகநூலில் சேமிக்கப்படும் எனவும் அவற்றை மற்றவர்களுக்கு விளம்பரங்களுக்காக அளிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. இதையொட்டி தங்கள் அந்தரங்க விவரங்கள் வெளியாகலாம் எனக் கருதிப் பல பயனாளிகள் வாட்ஸ்அப் செயலியில் இருந்து விலகத் தொடங்கினர்.*

*இந்நிலையில் வாட்ஸ்அப் நிர்வாகம் ஒரு விளக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.*

*அந்த அறிக்கையில் வாட்ஸ்அப்,*

*'நாங்கள் எங்களது புதிய அறிவிப்பால் பலருக்கும் எத்தனை குழப்பங்கள் நேரிட்டுள்ளன என்பதை நாங்கள் அறிந்துக் கொண்டோம். இதில் நிறைய தவறான தகவல்கள் பரவி உள்ளதால் நாங்கள் எங்களது கொள்கை மற்றும் அதன் உண்மை நிலை பற்றி அனைவருக்கும் உதவ எண்ணுகிறோம்.*

*வாட்ஸ்அப் செயலி என்பது நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினருடன் தகவல்கள் பரிமாற உருவாக்கப்பட்டதாகும். உங்களுடைய உரையாடலை நாங்கள் எப்போதும் இரு முனைகளில் இருந்தும் பாதுகாப்போம் என்பதே பொருள் ஆகும். எனவே வாட்ஸ்அப் அல்லது முகநூல் தனிப்பட்ட தகவல்களை பார்வையிடப்போவதிலில்லை. இதனால் தான் நாங்கள் உங்களுடைய அழைப்பு அல்லது தகவல்களைச் சேமிப்பது இல்லை. அத்துடன் நீங்கள் பகிரும் இருப்பிடங்கள் மற்றும் உங்கள் தொடர்பு  எண்களை முகநூலுடன் பகிர மாட்டோம்.*

*இந்த புதிய கொள்கையினால் மேலே உள்ள எதுவும் மாறப்போவதில்லை. மாறாக வாட்ஸ்அப் மூலம் மக்கள் தங்கள் வர்த்தக தகவல்களைப் பகிரும் போது அது மேலும் பலரை சென்றடைய நாங்கள் இந்த விவரங்களைப் பயன்படுத்த உள்ளோம். வர்த்தகர்கள் தங்கள் பணிகளை வாட்ஸ்அப் மூலம் செய்துக் கொள்ளலாம் என்பதற்காக இந்த புதிய முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயனாளிகள் அனைவரும் வர்த்தகர்கள்: இல்லை என்பதால் இது குறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம்.*

*நாங்கள் இது குறித்து மக்களின் விருப்பத்தைக் கோர அறிவித்த காலக் கெடுவை மாற்ற உள்ளோம். பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் யாருடைய கணக்கும் நீக்கப்படாது. இந்த தவறான தகவலை நீக்கத் தேவையான பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வாட்ஸ்அப் மூலம் யாருடைய தனிப்பட்ட அல்லது அந்தரங்க விவரங்கள் யாருக்கும் அளிக்கப்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்த உள்ளோம். எனவே நாங்கள் இது குறித்த புதிய அறிவிப்பு மற்றும் வர்த்தக தேர்வுகளை வரும் மே மாதம் 15 ஆம் தேதி வெளியிட உள்ளோம்.*

*வாட்ஸ்அப் மூலம் உலக மக்களால் பகிரப்படும் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். மற்றும் தற்போதுள்ள தனிப்பட்ட தகவல்களை இப்போது மட்டுமின்றி எப்போதும் பாதுகாப்பாக வைத்திருப்போம். இது குறித்து எங்களிடம் விளக்கம் கேட்ட அனைவருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இதன் மூலம் சரியான உண்மை தகவல்களை அளிக்க வைத்து வதந்திகளை நிறுத்தவும் நீங்கள் உதவி உள்ளீர்கள். நாங்கள் எப்போதும் வாட்ஸ்அப் செயலி மக்களுக்கு மேலும் சேவைகள் செய்வதையும் அந்தரங்க தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதையும் தொடர்ந்து செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*9 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் பணிபுரிந்து (10 ஆண்டுகள் பணிபுரியவில்லை என்று ஓய்வூதியம் மறுக்கப்பட்ட நிலையில்), மறைந்த ஓய்வு பெற்ற புவியியல் உதவியாளருக்கு 01.10.1984 முதல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசாணை வெளியீடு!!!*

9 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் பணிபுரிந்து (10 ஆண்டுகள் பணிபுரியவில்லை என்று ஓய்வூதியம் மறுக்கப்பட்ட நிலையில்), மறைந்த ஓய்வு பெற்ற புவியியல் உதவியாளருக்கு 01.10.1984 முதல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசாணை வெளியீடு!!!
அரசாணையினைப் படிக்க இங்கே கிளிக் செய்க.