செவ்வாய், 9 ஜூன், 2020

பள்ளிக்கூடங்கள் திறப்பை இப்போது பேசுவதே அபத்தம்- முன்னாள் கல்வி அமைச்சர்

 நாளிதழின்   
நடுபக்க ஆசிரியர் திரு.சமஸ் அவர்களின் குறிப்புரையோடு,
தமிழகத்தின் மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 
திரு.தங்கம் தென்னரசு அவர்களின் நேர்காணல்...

*☀பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்து செய்தல் மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வு ஒத்திவைப்பு சார்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்.*

*☀பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்து செய்தல் மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வு ஒத்திவைப்பு சார்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்.*


*☀தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை ஏற்பு ! பத்தாம் வகுப்பு உள்ளிட்ட இதர வகுப்புகளில் விடுபட்ட பொதுத்தேர்வுகள் இரத்து! பள்ளிகளில் கல்வி பயின்ற மாணாக்கர் அனைவரும் தேர்ச்சி!

*☀தமிழகத்தின் ஒட்டுமொத்த  கோரிக்கை ஏற்பு !*

பத்தாம் வகுப்பு உள்ளிட்ட இதர வகுப்புகளில் விடுபட்ட
பொதுத்தேர்வுகள்  இரத்து!
பள்ளிகளில் கல்வி பயின்ற மாணாக்கர் அனைவரும் தேர்ச்சி!

*🌐ஜூன் 9,* *வரலாற்றில் இன்று:இராமச்சந்திர காந்தி பிறந்த தினம் இன்று.*

ஜூன் 9,
வரலாற்றில் இன்று.

இராமச்சந்திர காந்தி பிறந்த தினம் இன்று.


இராமச்சந்திர காந்தி (ஜூன் 9, 1937—சூன் 13 2007)  ஒரு மெய்யியல் அறிஞர் ஆவார்.

 இவருடைய தந்தையார் தேவதாஸ் காந்தி (மகாத்மா காந்தியின் மகன்). தாயார் இலட்சுமி (இராஜாஜியின் மகள்)

 இராஜமோகன் காந்தி, கோபால்கிருஷ்ண காந்தி, தாரா காந்தி பட்டாசார்சி ஆகியோர் இராமச்சந்திர காந்தியின் உடன் பிறந்தவர்கள். இவரது மகள் லீலா காந்தி ஆவார்.


இராமச்சந்திர காந்தி ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் மெய்யியல் படித்து முனைவர் பட்டம் பெற்றார். விசுவ பாரதி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக் கழகம், பெங்களூரு பல்கலைக் கழகம், கலிபோர்னியா ஒன்றிணைந்த கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். ஐதராபாத்து பல்கலைக் கழகத்தில் இவருடைய முயற்சியால் தத்துவத்துறை ஏற்படுத்தப்பட்டது.


காந்தி அடிகளையும் இரமண மகரிசியையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் ஆராய்ந்து ஒரு நூல் எழுதினார். பாபர் மசூதி இடிக்க வேண்டும் என்று இந்துத்துவ இயக்கங்கள் முயன்றபோதும் பரப்புரை செய்தபோதும் தம் இந்து மத ஆராய்ச்சி அறிவு கொண்டு அதற்கு எதிராக கருத்துகளை எழுதினார். அது போலவே 2002 ஆம் ஆண்டில் குசராத்தில் நடந்த இனக் கலவரத்தில் இசுலாமியர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்தார்.

எழுதிய முக்கிய நூல்கள்

Moksha & Martyrdom: Reflections on Ramana Maharishi and Mahatma Gandhi
Sita's Kitchen: A Testimony of Faith and Inquiry
Svaraj: A Journey with Tyeb Mehta's Shantiniketan Triptych

*🌐ஜூன் 9,* *வரலாற்றில் இன்று:இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, புதுவை ஆளுநர் கிரண் பேடி பிறந்த தினம் இன்று.*

ஜூன் 9,
வரலாற்றில் இன்று.

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, புதுவை ஆளுநர் கிரண் பேடி பிறந்த தினம் இன்று.


கிரண் பேடி என்கிற பெயரை சொல்கிற பொழுதே ஒரு கம்பீரம் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும்.


 இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஆன அவரின் வாழ்க்கை அத்தனை சுவாரசியமானது. பெண்ணால் எதுவும் முடியும் என்று காண்பிக்கும் வாழ்க்கை அவருடையது.

நான்கு பெண் பிள்ளைகளில் ஒருவராக பிறந்த கிரண் பேடியை பெற்றோர் நம்பிக்கை மற்றும் தைரியம் மிகுந்தவராகவே வளர்த்தார்கள். கல்வி மற்றும் டென்னிஸ் இரண்டிலும் அளவில்லாத ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த இவர் ஆசிய சாம்பியன் ஆகியும் சாதித்துக்காண்பித்தார்.

 போலீஸ் துறைக்குள் பெண்கள் நுழைய உள்துறை அமைச்சகம் விடாது என்கிற மாயையை தான் தனித்து நிற்பேன் என்கிற குறிக்கோளின் மூலம் உடைத்து போலீஸ் அதிகாரி ஆனார்.

ஒற்றை ஆளாக கலவரம் செய்ய வந்த கும்பலை அவர் விரட்டி அடித்தது ஜனாதிபதி விருதை பெற்றுத்தந்தது.


ஆசிய விளையாட்டுப்
போட்டிகளின் பொழுது டெல்லி போக்குவரத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த இவர் அதை கச்சிதமாக செய்தார்.

பிரதமரின் கார் விதிமுறைகளை மீறிய பொழுது அதையும் நிறுத்தி கையகப்படுத்தி கிரேன் பேடி என்று பெயர் பெற்றார்.

பயங்கரமான ஆட்கள் நிறைந்த இடமாக கருதப்படும் திஹார் சிறையின் தலைமைப்பொறுப்பு இவர் வசம் வந்த பொழுது முடிந்தார் இவர் என்றே அனைவரும் எண்ணினார்கள். குற்றவாளிகளை மனிதர்களாக பார்த்தார் இவர். அங்கே பத்து சதவிகிதம் பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்கள் என்பதையும் கவனித்தார். அவர்களுக்கு என்று ஜனநாயக பிரிவுகளை உருவாக்கினார். யோகா,போதை பழக்கத்தில் இருந்து விடுதலை,விளையாட,
கல்வி கற்க ,
உற்சாகமாக செயலாற்ற உதவிகள் எல்லாமும் செய்தார். சிறைக்குளே வங்கியும் துவங்கி கைதிகளை ஊக்குவித்தார்.

டெல்லியின் மாவட்டங்களில் பொறுப்பில் இருந்த பொழுது நீல மற்றும் வெள்ளை அறைகளை அமைத்து மக்களின் குறைகளை கேட்டு தீர்க்கும் நடவடிக்கைகளையும் எடுத்தார் அவர்.

 தற்போது புதுவை ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.

அவர் அரசியலில் சேர்ந்ததை தாண்டி 'நான் துணிந்தவள்' என்று தலைப்பிடப்பட்ட அவரின் சுயசரிதை எல்லாரும் வாசிக்க வேண்டிய ஒன்று.

 துணிந்து, நிமிர்ந்து நின்று வானைத்தொட முயலும் எல்லா பெண்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் கிரண் பேடி ஒரு முன்மாதிரியே.

*🌐ஜூன் 9,* *வரலாற்றில் இன்று:ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த தினம்.*

ஜூன் 9,
வரலாற்றில் இன்று.

ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த தினம் இன்று.

ஜார்ஜ் ஸ்டீபென்சன(9 ஜூன் 1781 - ஆகஸ்ட் 12, 1848) நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர்.

தொடர்வண்டிப் பாதையின் தந்தை எனப் போற்றப்படுபவர். நீராவி வண்டிகளின் போக்குவரத்திற்கு உலகின் முதல் பொது தொடர்வண்டிப் பாதைக்கான தண்டவாளங்களை அமைத்தவர். 4 அடி 8 1/2 அங்குலம் (1,435 மிமீ)நீளத்திற்கு இவர் அமைத்த இரயில் பாதை, இன்றும் உலகத்தரமான பாதையாக உள்ளது. அது "ஸ்டீபன்சன் பாதை" என அழைக்கப்படுகிறது.

*🌐ஜூன் 9,* *வரலாற்றில் இன்று:நீரோ மன்னன் நினைவு தினம் இன்று(கி.பி.68).*

ஜூன் 9,
வரலாற்றில் இன்று.

நீரோ மன்னன் நினைவு தினம் இன்று(கி.பி.68).


ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம் என்று சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் நடந்தது என்ன?



ரோமானிய அரசை ஆண்ட Julio-Claudian வம்சத்தின் கடைசி வாரிசாக கிபி 54 இல் பதவியேற்கிறார் நீரோ.

இயற்கையிலேயே ரோமானிய கலாச்சாரத்திலும்,நுண்கலைகளிலும் ,
விளையாட்டிலும் ஆர்வங்கொண்ட நீரோ
அவற்றை ஊக்குவிற்கும் பொருட்டு அதற்கான பல தியேட்டர்களையும்
விளையாட்டு கூடங்களையும் கட்டினான்.
அவன் காலத்தில் ரோமானிய கலாச்சாரம் அனைத்திலும் சிறந்து விளங்கியது.

கிபி 64 ஆம் வருடம் ஜூலை மாதம் 18 தேதி இரவு ரோம் நகரத்தில் தீடீரென்று தீ பரவியது.
அகோரப் பசிகொண்ட அந்த தீ மொத்த ரோம் நகரையும் தின்று தீர்த்து சாம்பலாக்கியது.
மக்கள் பெரும் துயருக்குள்ளாகினர்.

ரோமப்பேரரசர் நீரோ கட்டாயத் தற்கொலைமூலம் இறந்தார். நீரோவுக்கு அப்போது வயது 30! கட்டாயத் தற்கொலை என்பது அக்காலத்தில் உயர்குடியினருக்கு மரண தண்டனை வழங்கும் முறையாக இருந்தது. 17 வயதில் ரோமப் பேரரசராகி, 13 ஆண்டுகள் ஆட்சி நடத்தியபின், நாட்டின் எதிரி என்று நீரோவை செனட் அறிவித்து, இத்தண்டனையை வழங்கியது.

 ரோம் எரியும்போது ஃபிடில் வாசித்தவருக்கு வேறென்ன கிடைக்கும் என்று தோன்றுகிறதா? உண்மை வேறு!

 தீப்பிடித்த கி.பி.64 ஜூலை 18 அன்று அவர் ரோம் நகரில் இல்லை. 50 கி.மீ. தொலைவிலுள்ள ஆண்ட்டியம் என்ற இடத்திலிருந்த அவரைச் செய்தி சென்றடைந்தவுடனே, ரோம் நகருக்குத் திரும்பிய நீரோ, எரிந்துகொண்டிருந்த தீயிலிருந்து மக்களை மீட்கும் பணியில் தானே நேரடியாக ஈடுபட்டதாக, நீரோ காலத்திய செனட்டரும், வரலாற்றாசிரியருமான டாசிட்டஸ் பதிவு செய்துள்ளார்.

 நிவாரணப் பணிகளுக்குத் தன் சொந்த நிதியை வழங்கியதுடன், பல நாட்கள் மெய்க்காவலர்கள்கூட இன்றி, இடிபாடுகளுக்கிடையே மக்களுடன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

தீ விபத்தில் வீடிழந்தவர்கள் தங்க தன் அரண்மனைகளைத் திறந்துவிட்டதுடன், அவர்களுக்கு தட்டுப்பாடின்றி உணவுகளையும் வழங்கினார்.

 தீ விபத்திற்குப்பின், நகரை மறுசீரமைப்பதற்கும், அதற்கு முன்பே வணிகம், கலை, விளையாட்டு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கும் நீரோ விதித்த வரிகள் செல்வந்தர்களை கோபத்துக்கு
உள்ளாக்கின.
 அவர்களுக்கு ஆதரவாக கலகம் செய்த கிறித்தவ மதத்தலைவர்கள் உள்ளிட்டவர்களைத் தயங்காமல் நீரோ கொன்றார். இவற்றாலேயே கிறித்தவ வரலாற்றாசிரியர்கள், பிற்காலத்தில், அவரைப் பற்றி மிக மோசமாக எழுதினர். ஒரு பேரரசர் என்ற எல்லைக்குள் நிற்காமல், அனைத்து நிலைகளுக்கும் நீரோ இறங்கிப் பழகியது, அக்காலத்தில் அவரை ஒரு கோமாளியாகப் பார்க்கச் செய்ததும் இவர்களுக்கு வசதியாகிப் போனது. நீரோவின் மறைவிற்குப்பின், ஒரே (கி.பி.69) ஆண்டில் 4 பேரரசர்கள் வருமளவுக்கு ரோமப் பேரரசில் பிரச்சனைகள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.