புதன், 14 அக்டோபர், 2020

அக்டோபர் 14,வரலாற்றில் இன்று.இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் வெளியுறவு அதிகாரி சி.பி.முத்தம்மா (C.B.Muthamma) நினைவு தினம் இன்று.

அக்டோபர் 14,
வரலாற்றில் இன்று.


இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் வெளியுறவு அதிகாரி சி.பி.முத்தம்மா (C.B.Muthamma) நினைவு தினம் இன்று.


 கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டையில் பிறந்தவர். வனத்துறை அதிகாரியாக இருந்த தந்தை இறந்தபோது இவருக்கு வயது 9. தான் கஷ்டப்பட்டாலும் 4 குழந்தைகளையும் நன்கு படிக்கவைத்து நல்ல நிலைமைக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் அம்மா.

 மடிகேரியில் பள்ளிப் படிப்பு, சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். 3 முறை தங்கப் பதக்கம் வென்றார்.

 வெளியுறவுத் துறையில் பணியாற்றவேண்டும் என்பது இவரது விருப்பம். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்ற நாட்டின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

 இவரைப் பணியில் சேரவிடாமல் தடுக்க பல முயற்சிகள் நடந்தன. இவரது திறமைக்கு முன்பு எதுவும் எடுபடவில்லை. நாட்டின் முதல் பெண் வெளியுறவு அதிகாரியாக 1949இல் பணியில் சேர்ந்தார். அளவுகடந்த ஆர்வம், துடிப்போடு பணியைத் தொடங்கினார்.

ஆண் பெண் அதிகாரிகள் இடையே பாகுபாடு, தனித்தனி விதிமுறைகள் இருந்தன. திருமணம் செய்துகொள்ள அரசிடம் முன்அனுமதி பெறவேண்டும். குடும்பப் பொறுப்பு பணித் திறனை பாதிக்கும் நிலை ஏற்பட்டால், பணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றும் சட்டப் பிரிவில் கூறப்பட்டிருந்தது. பணி முதிர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் பெண்கள் உரிமை கோர முடியாது என்ற விதியும் இருந்தது.

 ‘இதுபோன்ற சட்டங்கள் பெண்ணுரிமை, சமத்துவம், அரசியல் சாசனத்துக்கு எதிரானவை. இந்த பாலினப் பாகுபாடுகள் களையப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் முத்தம்மா.

 வழக்கை விசாரித்தவர் நீதிபதி கிருஷ்ணய்யர். இந்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டது என்று அறிவித்த நீதிபதி, இவர் பதவி உயர்வுக்கு எல்லா வகையிலும் தகுதியானவர் என்றும் தீர்ப்பு கூறினார். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பு, ஆணாதிக்க கருத்து கொண்ட விதிகளைத் திருத்தி எழுத ஒரு வாய்ப்பாக அமைந்தது.

 நெதர்லாந்து நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். பர்மா, இங்கிலாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவில் தூதரக உயர் பொறுப்புகளில் முதன்முதலாக நியமிக்கப்பட்ட பெண் இவர்தான். 32 ஆண்டு அரசுப் பணிக்குப் பிறகு, 1982இல் ஓய்வு பெற்றார்.

 ஆதரவற்றோர் இல்லம் கட்ட டெல்லியில் இருந்த தனது சொந்த நிலத்தில் 15 ஏக்கரை அன்னை தெரசாவுக்கு வழங்கியவர்.

 இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளின் சமத்துவத்துக்காகப் போராடி அவர்களுக்கு சம உரிமை பெற்றுத்தந்த சி.பி.முத்தம்மா, 2009ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி தமது 85ஆவது வயதில் காலமானார்.

அக்டோபர் 14வரலாற்றில் இன்று.உலக கண்பார்வை தினம் இன்று.

அக்டோபர் 14
வரலாற்றில் இன்று.

உலக கண்பார்வை தினம் இன்று.

ஒரு சராசரி மனிதன் ஒரு நிமிடத்திற்கு 12 முறை கண்களை இமைக்கிறார், ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 முறை கண்களை இமைக்கிறார்.
நமது கண் இமைமுடிகளின் சராசரி ஆயுள் காலம் 5 மாதங்கள் மட்டுமே.
நமது கண்கள் தோராயமாக 28 கிராம் எடை உள்ளது.

இறந்த பிறகு மண்ணில் புதைக்காமல், நெருப்பில் எரிக்காமல் கண்தானம் செய்வோம்.

நம் கண்களை பார்வை மங்காமல் நீண்ட காலம் எப்படி பாதுகாக்கலாம்?

நம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். எனவே அதற்கு எந்த மாதிரியான பராமரிப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் பரிந்துரைக்கிறார். இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
    

இப்பொழுது நாம் வேலை செய்யும் அனைத்து விஷயங்களும் கணினி மயமாக்கப்பட்டு விட்டது. ஓயாமல் டிஜிட்டல் திரை முன்னாடியே உட்கார்ந்து இருப்பது, வயதாகுவது போன்ற பிரச்சினைகளால் நாம் கண் பார்வை குறைப்பாட்டை அனுபவிக்கிறோம். இதனால் குழந்தைகள் சிறு வயதிலேயே கண்ணாடி போடும் சூழலை அனுபவித்து வருகிறார்கள். இதுபோன்ற கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்ப்பது எப்படி, நீண்ட நாள் கண் பார்வையை எப்படி ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
​கண் நோய்கள்

கண்கள் சிவந்து போதல், கண்களுக்கு போதிய ஊட்டச்சத்து இல்லாமல் பார்வை குறைபாடு, கண்புரை, மாகுலார் சிதைவு, கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை பிரச்சினைகள் என நிறைய கண் சம்பந்தமான பிரச்சனைகள் வருகின்றன. எனவே இவற்றையெல்லாம் களைந்து நம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும். உங்களுக்காக கண் ஆரோக்கிய பராமரிப்பு பற்றி படிப்படியாக இங்கே சொல்லப்பட்டு உள்ளது. இவை எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

​நன்றாக சாப்பிடுங்கள்

உங்க கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்க கண்ணிலிருந்து தொடங்குவது மிகவும் அவசியம். கண் ஆரோக்கியத்திற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம், லுடீன், துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் இ போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். இந்த சத்துக்கள் வயது தொடர்பான பார்வை சிக்கல்கள், மாகுலார் சிதைவு மற்றும் கண்புரை போன்றவற்றில் இருந்து காக்கிறது.

கீரை, காலே, காலார்ட்ஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள், சால்மன், டுனா மற்றும் பிற மீன் வகைகள், முட்டை, நட்ஸ் வகைகள் , பீன்ஸ் மற்றும் புரத மூலங்கள், ஆரஞ்சு மற்றும் பிற சிட்ரஸ் பழங்கள், சிப்பிகள் மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றை சாப்பிடுங்கள்.

சரிவிகித உணவு உங்க எடையை நிர்வகிக்க உதவும். கண் ஆரோக்கியம் மட்டுமல்லாது உடம் பருமன், டைப் 2 டயாபெட்டீஸ் போன்றவை வராமல் தடுக்கிறது. ஏனெனில் நீரிழிவு நோயால் ஏற்படும் நீரிழிவு கண் நோய் சிதைவு போன்ற பிரச்சனையை தடுக்க இந்த வகை உணவுகள் உதவுகின்றன.

​புகைப்பிடித்தலை தவிருங்கள்

புகைப்பிடித்தலால் கண்களில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. கண்புரை, பார்வை நரம்புக்கு சேதம் மற்றும் மாகுலர் சிதைவு ஆகியவற்றைப் பெற அதிக வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் புகைப்பிடித்தலில் இருந்து வெளியேறுவது உங்க கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

​சன் கிளாஸ்

வெளியே செல்லும் போது சன் கிளாஸ் அணிந்து கொள்ளுங்கள்

சன் கிளாஸ் உங்க கண்களை புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து காக்கிறது. இது உங்க கண்களை பாதுகாக்க உதவுகிறது. அதிகப்படியான புற ஊதா வெளிப்பாடு கண்புரை மற்றும் மாகுலர் சிதைவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

UVA மற்றும் UVB கதிர்களில் 99% முதல் 100% வரை தடுக்கும். மடக்கு லென்ஸ்கள் உங்கள் கண்களை பக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. வாகனம் ஓட்டும் போது பயன்படுத்தும் லென்ஸ்கள் உங்க கண்களின் கூசும் தன்மையை குறைக்கின்றன. நீங்கள் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்தால், சிலர் புற ஊதா பாதுகாப்பை பெற முடியும். எனவே உங்க கண்களை பாதுகாக்க கூடுதல் லேயருடன் சன் கிளாஸ்களை அணிவது நல்லது என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

​பாதுகாப்பு கண்ணாடியை பயன்படுத்துங்கள்

நீங்கள் நச்சு கலந்த தொழிற்சாலையில் வேலை பார்த்தாலோ அல்லது வான்வழி பொருட்களை பயன்படுத்தும் வேலையில் வேலை பார்த்தாலோ பாதுகாப்பு கண்ணாடியை அணிய மறக்காதீர்கள். ஐஸ் ஹாக்கி, ராக்கெட்பால், லாக்ரோஸ் போன்ற விளையாட்டுகளும் உங்க கண் காயத்திற்கு வழிவகுக்கும். பாதுகாப்பு மாஸ்க் கொண்ட ஹெல்மெட் அல்லது பாலிகார்பனேட் லென்ஸ்கள் கொண்ட விளையாட்டு கண்ணாடிகள் உங்கள் கண்களைப் பாதுகாக்கும். எனவே விளையாடும் போது உங்க கண்களை பாதுகாக்க இதை அணிந்து கொள்ளுங்கள்.

​கணினித்திரை

கொஞ்ச நேரம் கணினித் திரையில் இருந்து விலகி இருங்கள்

கணினி அல்லது மொபைல் திரையில் அதிக நேரம் பார்ப்பது உங்களுக்கு கீழ்க்கண்ட பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

கண் சிரமம் ஏற்படுதல்

மங்கலான பார்வை

தூரத்தில் கவனம் செலுத்துவதில் சிக்கல்

வறண்ட கண்கள்

தலைவலி

கழுத்து, முதுகு, தோள்பட்டை வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கண் திரையில் இருந்து விலகி உங்க கண்ணுக்கு பயிற்சி கொடுப்பது நல்லது

​கண் பாதுகாப்பு அம்சங்கள்

உங்க கண்ணாடிகளை தேர்வு செய்யும் போது கணினித்திரையை பார்ப்பதற்கான பாதுகாப்பு அம்சங்களை கொண்டு தேர்வு செய்யுங்கள்.

கண்ணாடி அணிந்தும் வேலை பார்க்கும் போது உங்களுக்கு கண் அயர்வு ஏற்பட்டால் உங்க மருத்துவரிடம் அது குறித்து பேசுங்கள்.

உங்க கண்களை மானிட்டரின் மேலே இருக்குமாறு வையுங்கள். இது உங்களுக்கு கணினி திரையை தெளிவாக பார்க்க உதவி செய்யும்.

ஜன்னல்கள் மற்றும் விளக்குகளிலிருந்து வரும் வெளிச்சம் உங்க கண்களை கூசுவதைத் தவிர்க்க முயற்சிக்கவும்.

ஒரு வசதியான ஆதரவான நாற்காலியை தேர்வு செய்யுங்கள். உங்க கால்களை தரையில் இருக்கும்படி வையுங்கள்.

உங்க கண்கள் வறண்டு போய் இருந்தால் சிமிட்டுங்கள். செயற்கை கண்ணீரை பயன்படுத்த முயற்சிக்காதீர்கள்.

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கண்களை ரிலாக்ஸ் செய்யுங்கள். 20 விநாடிகளுக்கு தொலை தூர பொருட்களை பாருங்கள். ஒவ்வொரு 2 மணி நேரமாவது எழுந்து 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்யுங்கள்.

​கண் மருத்துவரை தொடர்ச்சியாக போய் சந்தியுங்கள்

உங்க கண் மருத்துவரை தவறாமல் பார்வையிடுவது மிகவும் அவசியம். இது சிறு குழந்தைகள் கூட கண் பார்வையை பாதுகாக்க உதவுகிறது. இதன் மூலம் கண் சம்பந்தமான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே நாம் காண முடியும். கண் பரிசோதனைகளில் கிளைக்கோமா போன்ற அறிகுறிகளை காண முடியும். ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது உங்க கண் பார்வை இழப்பை தடுக்க முடியும். கண் சுகாதார தேவைகளை பொறுத்து நீங்கள் இரண்டு வகையான மருத்துவர்களை காண வேண்டும்.

​கண் மருத்துவர்கள்

இவர்கள் கண் பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள். கண் பராமரிப்பு, கண் நோய்க்கு சிகிச்சை அளிப்பது மற்றும் கண் அறுவை சிகிச்சை அளிப்பது போன்றவற்றை அவர்கள் செய்வார்கள். உங்க கண்களை பரிசோதனை செய்து சிகச்சை அளிக்க முயற்சி செய்வார்.

ஒரு விரிவான கண் பரிசோதனையில் பின்வருவன அடங்கும்

உங்க குடும்ப வரலாறு, உங்க உடல் நிலை குறித்து மருத்துவர் விசாரிப்பார்.

ஒரு ஆஸ்டிஜிமாடிசம் (பார்வையை மழுங்கடிக்கும் வளைந்த கார்னியா), அல்லது பிரஸ்பியோபியா (வயது தொடர்பான பார்வை மாற்றங்கள்) போன்றவை குறித்து கேட்கப்படும்.

உங்க கண்கள் எப்படி நன்றாக வேலை செய்கிறது என்பது குறித்து பரிசோதனை செய்யப்படும். கண் பார்வையில் ஏற்படுத்தும் அழுத்தம், பார்வை நரம்பு சோதனைகள் மூலம் கிளைக்கோமாவை சோதிக்க முடியும்.

மைக்ரோஸ்கோப் மூலம் உங்க கண்களின் வெளிப்புற மற்றும் உட்புற சோதனைகளை விரிவாக்கம் செய்து பார்க்க முடியும். வேண்டுமானால் பிற சோதனைகளையும் நீங்கள் செய்து பார்க்கலாம்.

அக்டோபர் 14, வரலாற்றில் இன்று.உலகத்தர நிர்ணய தினம் இன்று.

அக்டோபர் 14, வரலாற்றில் இன்று.

உலகத்தர நிர்ணய தினம் இன்று.

உற்பத்தி செய்யும் பொருட்கள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக 1946ஆம் ஆண்டு, அக்டோபர் 14 இல் சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது.

 உலகத் தர நிர்ணய தினம் 1970ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

 நுகர்வோர்க்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். தரமான பொருட்களே உலகைக் காக்கும் என தர நிர்ணய அமைப்பு கூறுகிறது.