வெள்ளி, 2 மார்ச், 2018
ஆப்பிரிக்க குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 2030க்கு பின்னும் தொடரும்...
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்க குழந்தைகள் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க வேண்டும் என்று ஐ.நாவின் நிலைபேண் வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) திட்டத்தின்கீழ் வைத்திருக்கும் இலக்கை அடைய முடியாது என்பது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கல்வி தொடர்பாக ஆப்பிரிக்க நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
'நேச்சர்' சஞ்சிகையில் பதிப்பிடப்பட்டுள்ள இந்த இரு ஆய்வுகளிலும், 2000 முதல் 2015 வரை 51 ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தை வளர்ச்சி விகிதம் மற்றும் மகப்பேறு வயதுடைய பெண்கள் அடைந்திருக்கும் கல்வி ஆகியவை குறித்த தரவுகள் திரட்டப்பட்டன.
மேற்கண்ட இரு விடயங்கள் குறித்தும் ஒவ்வொரு தனிப்பட்ட கிராமத்தின் புள்ளிவிவரங்களையும் தெளிவாக விளக்கும் வரைபடங்களை வெளியிட்டுள்ள இந்த ஆய்வுகள் மூலம் அனைத்து ஆப்பிரிக்க நாடுகளிலும் குழந்தைகளின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும் குறைந்தது ஒரு பிராந்தியமாவது இருப்பது தெரியவந்துள்ளது.
நன்றி:பிபிசி தமிழ்.
உலகில் 35 கோடியே 70 லட்சம் குழந்தைகள் போர் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக குழந்தை நல அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது...
உலகளவில் போர் நடைபெறும் பகுதிகளில் ஆறுக்கு ஒரு குழந்தை வாழ்ந்து வருவதாக "சேவ் த சில்ரன்" என்ற குழந்தைகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
போர் சூழலில் வாழுகின்ற குழந்தைகள், இதற்கு முன்னர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக ஆபத்தில் வாழ்ந்து வருவதாக இந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இது நடத்தியுள்ள புதிய ஆய்வில் 35 கோடி 70 லட்சம் குழந்தைகள் போர் மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களோடு நம் பொதுச்செயலாளர் பாவலர் அவர்கள் சத்திப்பு....
வணக்கம்.
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களோடு நம் பொதுச்செயலாளர் பாவலர் அவர்கள் சத்திப்பு. சந்திப்பின் போது பதவி உயர்வு அளிக்க, பதவி உயர்வு பட்டியலில் உள்ளபடி காலியாக உள்ள காலி பணியிடங்களில் நியமனம் செய்ய உடனே ஆவன செய்யுமாறு கோரிக்கை வைத்தார். அதற்குரிய காரண நியாயங்களை விளக்கினார். அதனை இயக்குனர் ஏற்றுக் கொண்டு உடனே செயல்படுத்துவதாக உறுதி அளித்தார். பாவலர் உடன் கிருட்டினகிரி மாவட்டச் செயலாளர் கிருட்டினமூர்த்தி, விழுப்புரம் சீனி.சின்னசாமி, திருப்பூர் கந்தவேல் அவர்களும் மற்றும் கிருட்டினகிரி மாவட்ட துணைச்செயலாளர் சுரேசு அவர்களும் உடன் உள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)