செவ்வாய், 6 நவம்பர், 2018

மாணவர் சேர்க்கை கட்டணம் UGC புதிய உத்தரவு

*மாணவர் சேர்க்கை கட்டணம் யுஜிசி  புதிய உத்தரவு*

படிப்புக்கான முழுக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி சேர்க்கைக்குப் பிறகு, படிப்பைக் கைவிடும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை திருப்பித் தராதது, அசல் சான்றிதழ்களை ஒப்படைக்க மறுப்பது தொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து, இந்த விரிவான உத்தரவை யுஜிசி இப்போது பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கையின்போது விண்ணப்பப் படிவத்துடன், கல்லூரி தகவல் கையேட்டை விலை கொடுத்து வாங்குமாறு மாணவர்களை வற்புறுத்தக் கூடாது.

யுஜிசி வழிகாட்டுதலின்படி உயர்கல்வி நிறுவனங்கள் தங்களுடைய இணையதளங்களில் வெளியிட்டிருக்கும் தகவல்களையே பார்த்துத் தெரிந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கு, அதற்கான அனுமதியை கல்வி நிறுவனங்கள் வழங்கவேண்டும்.

 *கல்விக் கட்டணம்*: உயர் கல்வி நிறுவனங்கள் சேர்க்கையின்போது மாணவர்களிடம் ஒரு பருவம் அல்லது ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். படிப்பு முழுவதற்குமான கட்டணத்தை சேர்க்கையின்போது கல்வி நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது. அதோடு, சேர்க்கைக்குப் பின் படிப்பைக் கைவிட விரும்பும் மாணவர்களுக்கு, குறிப்பிட்ட காலக் கெடுவுக்கு ஏற்ப அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும்.

அதாவது, கல்லூரிகள் அறிவித்த மாணவர் சேர்க்கைக்கான கடைசித் தேதிக்கு 15 நாள்களுக்கு முன்பே, படிப்பைக் கைவிடுவதாகத் தெரிவிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தை 100 சதவீதம் திரும்ப அளிக்கவேண்டும்.
சேர்க்கைக்கான கடைசித் தேதியிலிருந்து 15 நாள்களுக்கும் குறைவாக படிப்பைக் கைவிடும் அறிவிப்பைத் தெரிவிக்கும் மாணவர்களுக்கு 90 சதவீத கட்டணத்தைத் திரும்ப அளிக்கவேண்டும்.

அறிவிக்கப்பட்ட சேர்க்கைக்கான கடைசித் தேதிக்குப் பிறகு 15 நாள்களுக்கு அறிவிப்பைத் தெரிவிக்கும் மாணவர்களுக்கு 80 சதவீத கட்டணத்தை திரும்ப அளிக்கவேண்டும்.
அதே போன்று, அறிவிக்கப்பட்ட கடைசித் தேதிக்குப் பிறகு 15 நாள்களுக்கு மேல் 30 நாள்களுக்கு அறிவிப்பை தெரிவிக்கும் மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும்.

அறிவிக்கப்பட்ட கடைசித் தேதிக்குப் பின்னர் 30 நாள்களுக்குப் பிறகு அறிவிப்பை வெளியிடும் மாணவர்களுக்கு கட்டணம் எதையும் திரும்ப அளிக்கத் தேவையில்லை என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

ஆபத்தான செல்பி எடுப்பவர்களை காக்க புதிய app



ஆபத்தான செல்ஃபி...எச்சரிக்கும் ஆப்!
பலரது லைக்குகளைப் பெறுவதற்காக எடுக்கப்படும் அபாயகரமான செல்ஃபி (கைப்படம்), சிலரது உயிரைப் பறிக்கும் கடைசிப் புகைப்படமாக அமைந்துவிடுகிறது. அபாயகரமான செல்ஃபி மோகத்தில் உலகம் முழுவதும் கடந்த 6 ஆண்டுகளில் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.

இதைத் தடுக்கும் வகையில் தில்லி இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய செயலி "ள்ஹச்ற்ண்ங்'- யை உருவாக்கி உள்ளனர். இதில், நமது ஸ்மார்ட் போனில் உள்ள கேமரா எச்சரிக்கையாகச் செயல்படுகிறது. அபாயகரமான இடங்களில் நின்று நாம் செல்ஃபி எடுத்தால், அந்த இடத்தின் அபாயகரமான தன்மையை இந்த செயலி எச்சரிக்கும்.
 உதாரணமாக, ரயில் தண்டவாளம், நீர்நிலைகள், உச்சி மலை, பெரிய விலங்குகள் போன்றவற்றுடன் நாம் செல்ஃபி எடுக்க முயன்றால், "நீங்கள் பாதுகாப்பான இடத்தில் இல்லை' என்று இந்த செயலி எச்சரிக்கும்.

உலகம் முழுவதும் 5,500-க்கும் மேற்பட்ட அபாயகரமான இடங்கள் இந்த ஆப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த அபாயகரமான இடங்களை நிர்ணயிப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஓராண்டுக்கு முன்பே "லோகேஷன் மார்க்கர்' எனும் ஆப்பை வெளியிட்டு, பொது மக்களின் தகவல்களைப் பெற்றுள்ளனர்.
ஒரே இடத்தை குறிப்பிட்டு அபாயகரமான பகுதி என மூன்றுக்கும் மேற்பட்டோர் பதிவிட்டால் அதை அபாயகரமான பகுதியாக நிர்ணயித்துள்ளனர். இதுபோன்று சுமார் 6000 இடங்கள் அபாயகரமான பகுதிகளாக இவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து இந்த செயலியை உருவாக்கிய தில்லி ஐஐஐடி பேராசிரியர் பொன்னுரங்கம் குமாரகுரு கூறியதாவது:
 ""கடந்த ஓராண்டாக எங்கள் குழு இந்த செயலியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. ஸ்மார்ட் போனில் டேட்டா (இண்டர்நெட்) ஆப் செய்யப்பட்டிருந்தாலும் இந்த செயலி செயல்படும். எவ்வளவு உயரத்தில் நாம் நிற்கிறோம். நமக்கு பின்னால் என்ன பொருள் உள்ளது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இந்த ஆப் எச்சரிக்கும்' என்றார்.
 - அ.சர்ஃப்ராஸ்

தபால் நிலையங்கள் மூலம் பண பரிமாற்றம் -புதிய திட்டம்

டெல்லி: தபால் நிலையங்கள் மூலம் எளிதாக பணம் அனுப்ப உதவியாக மத்திய அரசு இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் ( India Post Payments Bank - IPPB) என்ற வசதியை உருவாக்கி கொடுத்துள்ளது.


கடந்த 2018 செப்டம்பர் மாதம் இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வரை இந்தியா முழுக்க 650 ஐபிபிபி கிளைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுக்க 1.5 தபால் நிலையங்கள், 3 லட்சம் தபால் பணியாளர்கள் இந்த பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். இவர்கள் ஸ்மார்ட் போன்கள், டிஜிட்டல் கருவிகள் உதவியுடன் மக்களுக்கு பண பரிமாற்றத்தில் உதவ போகிறார்கள்.

ஐபிபிபியின் பயன்கள்:

பண பரிமாற்றம்

அரசு திட்டங்களை எளிதாக பெற முடியும்

கட்டணங்கள் எளிதாக செலுத்தலாம்

முதலீடு செய்ய முடியும்

இன்சூரன்ஸ் செய்ய உதவும்

ஐபிபிபி மூலம் சேவைகள் அனைத்தும் வீட்டிற்கே கொண்டு வரப்படும்.

ஐபிபிபி மூலம் மத்திய அரசின் பிரதான மந்திரி பசல் பீமா யோஜனா, பிரதான மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா ஆகிய திட்டங்களில் சேவைகளை எளிதாக பெற முடியும்.

3 தபால் பணியாளர்கள் மக்களுக்கு எளிதாக ஆசு சேவைகளை வழங்க உதவுவார்கள். எல்லா மக்களும், விவசாயிகளும், கிராம நடுத்தர குடும்பங்களும் இதனால் பயன் பெற முடியும். இன்னும் 3 மாதத்தில் இந்த வசதி 1.5 லட்சம் வங்கிகளில் உருவாக்கப்படும்.

டெங்கு காய்ச்சலுக்கு ஆயுர்வேத மருந்து~ மத்திய அமைச்சர் தகவல்...

தொலைதூர கல்வி இயக்ககத்தில் 5 ஆண்டுக்குள் படிப்பை நிறைவு செய்ய சேலம் பெரியார் பல்கலை அறிவுறுத்தல்...

அரசு பள்ளி ஆசிரியர்களின் கியூஆர் கோடு பயன்பாட்டை ஆய்வு செய்ய சிறப்புக்குழு...

குழந்தைகள் பட்டாசு வெடித்தாலும் பெற்றோருக்கு தண்டனை உறுதி ~ சட்ட வல்லுநர்கள் கருத்து...

எலிகளுக்கு கேன்சர் உருவானாலும் செல்போன் கதிரியக்கத்தால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை ~ஆய்வில் தகவல்...

கிராம பகுதிகளில் காஸ்சிலிண்டர் புக் செய்ய பொது சேவை மையங்கள்...

மாசில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் ~ கலெக்டர் அறிக்கை…

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...