செவ்வாய், 5 டிசம்பர், 2017

வந்தாச்சு...பைக் ஓட்டுபவர்களுக்கு என கூகுள் மேப்ஸில் புதிய வசதி!

வாகன போக்குவரத்துக்கேற்ற சுலபமான வழிகளைத் தேர்தெடுக்க உதவும் கூகுள் மேப்ஸில் பைக் ஓட்டுபவர்களுக்கு என பிரத்யேகமான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



உலகம் முழுவதும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு புதிதாக ஒருவர் செல்ல விரும்பும் பொழுது அவருக்கு கை கொடுக்கும் சாதனமாக கூகுள் மேப்ஸ் விளங்குகிறது. குறிப்பாக வாடகை கார் இயக்கும் நிறுவனங்களுக்கு இந்த சேவை வரப்பிரசாதமாக விளங்குகிறது. ஆனால் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு என இந்த சேவையில் தனிப் பிரிவு இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கூகுள் மேப்ஸில் பைக் ஓட்டுபவர்களுக்கு என பிரத்யேகமான புதிய வசதி செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் இந்த சேவை அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமான சேவை போன்று இதிலும் குரல் வழி வழிகாட்டும் சேவையும் உள்ளது.

கூகுள் மேப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே இருக்க கூடிய ட்ரைவ், ட்ரெயின் அல்லது பஸ் மற்றும் வாக் ஆகிய வசதிகளோடு தற்பொழுது பைக் வசதியும் புதிதாக சேர உள்ளது. உலகிலேயே முதன் முறையாக இந்தியாவில்தான் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதர வாகனங்கள் எளிதில் அணுக முடியாத 'குறுக்கு வழிகள்' பைக் சேவைக்கு என ஒதுக்கப்படும். அத்துடன் பயண நேரம் மற்றும் சென்று சேரும் நேரம் முதலியவையும் இதில் உங்களுக்கு கிடைக்கும்.

இது குறித்து கூகுள் துணைத் தலைவர் சீசர் சென்குப்தா கூறியதாவது:

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தையாக இந்தியா உள்ளது. எனவே இதனைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பயனாளர்களுக்கு என இதர வாகனகளைப் போல அல்லாமல் பிரத்யேக வசதிகளை அளிக்க வேண்டிய தேவை உள்ளது.

இந்தியர்கள் பெரும்பாலும் பைக் பயணத்தின் பொழுது உள்ளூர் அடையாளத் தலங்களையே நினைவினைல் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அதன்படி பயனாளர்கள் செல்லும் வழியில் உள்ள உள்ளூர் அடையாளத் தலங்கள் அனைத்தும் தெளிவாக இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இவ்வாறு சென்குப்தா தெரிவித்தார்.

மற்ற நாடுகளுக்கும் இந்த வசதி விரைவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

ஒரு பக்கத்தில் ஒரு வருட நாட்காட்டி 2018...

புயல் காலங்களில் ஏற்றப்படும் எச்சரிக்கை கூண்டு:1 முதல் 11 வரை...


புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது 
துறைமுகப் பகுதியில் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.
பகல் நேரங்கள் கருப்பு நிறத்துடன் கூடிய மூங்கில் பிரம்புகளால் ஆன சின்னங்களும், இரவு மற்றும் மேக மூட்டமாக உள்ள நேரங்களில் ஒளிகளை பாய்ச்சும் விளக்குகள் மூலம் இந்த எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. இந்த எச்சரிக்கைச் சின்னங்கள் ஒன்றில் துவங்கி 11 வரை உள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் மற்றும் மழைக் காலங்களில் விடுக்கப்படும் புயல் எச்சரிக்கை சின்னங்கள்குறித்த விளக்கங்களின் விவரங்கள்...

1.ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என அர்த்தம். இதனால் துறைமுகம் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால், சற்றே பலமாக காற்று வீசுகிறது என்று பொருள்.

 2-ம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையைக் கண்டால், துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற வேண்டும்.

 3-ம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

 4-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து. 3 மற்றும் 4-ம் எண் கூண்டுகள், துறைமுகத்தில் மோசமான வானிலை நிலவுவதைத் தெரியப்படுத்துகின்றன.

 5-ம் எண் கூண்டு, புயல் உருவாகி இருப்பதைக் குறிக்கிறது. அத்தோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

 6-ம் எண் கூண்டு, 5-வது எண்ணின் எச்சரிக்கைதான். ஆனால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்துசெல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

 7-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை. 5, 6 மற்றும் 7-ம் எண் கூண்டுகள் துறைமுகத்துக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைக் குறிக்கிறது.

 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், 'மிகுந்த அபாயம்' என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிரப் புயலாகவோ உருவெடுத்துள்ளது. அப்போது துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

 9-ம் எண் புயல் கூண்டுக்கு, புயல், தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிரப் புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். மேலும் துறைமுகத்தைப் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்துசெல்லும்.

 10-ம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், அதி தீவிரப் புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

 11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

பொது இடங்களில் வைஃபையை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை...


மொபைல்ல டேட்டா காலியாகி என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டிருக்கும்போதே "Wifi Networks Available
என ஒரு நோட்டிபிகேஷன் காட்டுனா எவ்வளவு சந்தோசமா இருக்கும்?
அதுவும் பாஸ்வேர்ட் இல்லாத நெட்வொர்க்கா இருந்தா கேட்கவே வேண்டாம். வேற எதுவும் யோசிக்காம உடனே கனெக்ட் பண்ணி யூஸ் பண்ண ஆரம்பிச்சிடுவோம். அதேபோல மடிக்கணினிகள் வைத்திருக்கும்பொழுதும் நம்மில் பலர் வைஃபை ஹாட்ஸ்பாட்களையே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதுபோன்ற சமயங்களில் வேகம் முக்கியமாக தெரிந்தாலும் அதற்குப் பின்னால் உங்கள் தகவல்கள் திருடப்படும் வாய்ப்பிருக்கிறது.
பாதுகாப்பற்ற இணைய இணைப்புகளின் பிரச்னைகள்
இணையம் என்பது நம்மில் பலருக்கு அன்றாடத் தேவைகளில் ஒன்றாகவே மாறியிருக்கிறது. வணிக வளாகங்கள், விமான நிலையம், பேருந்து நிலையம் என பெரும்பாலான பொது இடங்களில் இலவச வைஃபை நெட்வொர்க்குகள் கட்டணமின்றி இலவசமாகவே கிடைக்கின்றன. மொபைலில் டேட்டா இருந்தாலும் இதுபோன்ற இடங்களில் அவற்றை உபயோகிக்க ஆரம்பித்துவிடுவது பெரும்பாலோரின் வழக்கம். அதேபோல எப்பொழுதாவது அவசரமாக இணைய இணைப்பு தேவைப்படும் சமயங்களில் அருகில் இருப்பவரிடம் இணையத்தை பகிர்ந்துகொண்டிருப்போம். அவைப் பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் பிரச்னையில்லை பாதுகாப்பற்ற இணைப்புகள்தான் மால்வேர் தாக்குதல் அபாயத்தை அதிகரிக்கின்றன.
மடிக்கணினிகள்தான் எளிதில் மால்வேர் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. கிரெடிட்கார்டு தகவல்கள், பாஸ்வேடுகள், தனிப்பட்ட தகவல்கள் போன்றவை இதுபோன்ற இணைப்புகள் மூலமாக திருடப்படுகின்றன. வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மூலமாக ஒரே நேரத்தில் பலருக்கு மால்வேர்களை பரப்ப முடியும் என்பதால் ஹேக்கர்களுக்கு இது சாதகமாகி விடுகின்றன. பலர் இணைந்திருப்பதால் மால்வேரால் பாதிக்கப்பட்ட ஏதாவது ஒரு டிவைஸ் மற்றவர்களையும் தாக்குகிறது.
இதுதவிர ஹேக்கர்கள் உபயோகிக்கும் மற்றொரு உத்தி போலியான வைஃபை ஹாட்ஸ்பாட்களை உருவாக்குவது. சாதாரண வைஃபை ஹாட்ஸ்பாட்களைப் போல தோற்றமளிக்கும் இவை அபாயகரமானவை. இவற்றால் ஸ்மார்ட்போனின் ஓட்டுமொத்த தகவல்களும் திருடப்படும் வாய்ப்பு அதிகம்.

வைஃபை ஹாட்ஸ்பாட்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

தவிர்க்க முடியாத சமயங்களில் பொது இடங்களிலோ அல்லது இலவச வைஃபையையோ பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். அப்பொழுது சில வழிமுறைகளைப் பின்பற்றி தகவல்களைப் பாதுகாக்கலாம்.

- ஒரு நிறுவனத்தின் வைஃபை ஹாட்ஸ்பாட்களைப் பயன்படுத்தும்போது அது அவர்களுடையதுதானா என்று உறுதி செய்துவிட்டு பயன்படுத்தலாம்.

- பாதுகாப்பற்ற இணைப்புகள் பாஸ்வேர்டைக் கொண்டிருப்பதில்லை. எனவே, அவற்றைத் தவிர்த்து விடவேண்டும்.

VPN வசதியைப் பயன்படுத்தலாம். இதன் மூலமாகத் தகவல்கள் "Encryption" செய்யப்படுவதால் தகவல்கள் பாதுகாக்கப்படும்.
VPN மென்பொருள்கள் கணினி, ஸ்மார்ட்போன் என இரண்டுக்கும் கிடைக்கின்றன.

- ஆன்டி வைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்திருப்பது பாதுகாப்பை அதிகப்படுத்தும்.

- ஸ்மார்ட்போன் என்றாலும், மடிக்கணினியாக இருந்தாலும் அவற்றின் இயங்குதளத்தை அப்டேட் செய்துவிடுவது அவசியம்.

-தேவையற்ற பாப்-அப் களோ விளம்பரங்களோ தோன்றினால் அவற்றை கிளிக் செய்யக்கூடாது.

- தேவையற்ற போது வைஃபை வசதியை ஆஃப் செய்து வைக்கலாம். இதனால் பாஸ்வேர்ட் இல்லாத ஒப்பன் நெட்வொர்க்குகளில் தானாகவே கனெக்ட் ஆவதைத் தடுக்கலாம்.

- கணினியில் ஃபயர்வால் அமைப்பை செயல்படுத்துவதன் மூலமாக அங்கீகரமில்லாத தொடர்புகளைத் தவிர்க்கலாம்.

- கிரெடிட்கார்ட் மற்றும் வங்கிச் சேவைகளைப் பொது வைஃபையில் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். 

அக்கவுண்ட்களை லாகின் செய்வதைத் தவிர்க்கலாம், அவசியம் எனும்போது two-factor authentication வசதியைப் பயன்படுத்தலாம்.

THANJAI TAMIL UNIVERSTY - DISTANCE EDUCATION M.PHIL ADMISSION 2017-18 - APPLICATION...

EMIS LOGIN PROBLEM~Solution...


 இது வரை  EMIS LOGIN  PROBLEM  உள்ள  பள்ளிகள்  தங்களுடைய  பள்ளி பெயருடன்  இமெயில்  ஒன்றை CREATE  செய்து  அந்த  email  account  இருந்து  EMIS  WEBSITE  Email : tnemiscel@gmail.com  என்ற  வளைதளத்திற்கு  இமெயில்  தங்கள்  பள்ளி உடைய   User name: (3308140XXXX) PW: (given in office)  முழு  விவரங்களுடன்  OPEN ஆகவில்லை  என  type    செய்து   தலைமைஆசிரியர் கைபேசி  எண்ணுடன்  அனுப்ப வேண்டும். அவர்கள்  உடனடியாக  உங்களுடைய  user name  check செய்து  password  இமெயிலுக்கு அனுப்புவர்.  அவற்றை கொண்டு நீங்கள்  முதல் வகுப்பு மாணவர்கள் உள்ளீடு  செய்யலாம்.

தேசிய மாசுக் கட்டுபாட்டு தினம் மற்றும் தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் குறித்து முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்!


ஆதாருடன் இணைக்க வேண்டிய 'ஆறு'...

ஒரு பக்கத்தில் ஒரு வருட நாட்காட்டி 2018...