புதுச்சத்திரம் வட்டாரக் கல்வி அலுவலருடன் ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு இன்று (4.1.2022) மாலை , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், புதுச்சத்திரம் ஒன்றியக் கிளையின் சார்பாக , புதியதாக பொறுப்பேற்றுள்ள வட்டாரக் கல்வி அலுவலர் திரு. வ.சந்திரசேகரன் அவர்களை, மரியாதை நிமித்தமாக ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்தித்த போது , ஒன்றியப் பொருளாளர் திரு.இரா.பிரபாகரன் அவர்கள் பொன்னாடை அணிவித்தார். மாவட்ட துணைச்செயலாளர் திருமதி.து.லதா அவர்கள் புத்தகங்கள் வழங்கி வரவேற்றார். மேலும் ஒன்றியத் தலைவர் திரு.பெ.பன்னீர்செல்வம், துணைத்தலைவர் திரு.பெ.முருகேசன், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் திரு.சி.சேகர் , மகளிர் அணி அமைப்பாளர் திருமதி.வெ.கவிதா மற்றும் திரு.அ.கனகராசு, திருமதி.கோ.தேன்மொழி மற்றும் திருமதி . N R சாந்தி அவர்களை ஒன்றியச் செயலாளர் திரு.கொ.கதிரேசன் அவர்கள், பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களை வரவேற்று சிறப்பித்தார்.
செவ்வாய், 4 ஜனவரி, 2022
சேந்தமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலருடன் ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு
*சேந்தமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலருடன் ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு:* இன்று 04/01/2022 சேந்தமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உருவப்படம் மற்றும் மன்ற நாட்காட்டி வழங்கினர். இச்சந்திப்பில் ஒன்றியத் தலைவர் மு தனசேகரன் (பொ) ஒன்றியச்செயலாளர் கா சுந்தரம், ஒன்றியப்பொருளாளர் சி பெரியசாமி, மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் ப இராஜேந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கா செல்வம், ஒன்றிய துணைச்செயலாளர் சை ரபி , செயற்குழு உறுப்பினர்கள் S S T கலைச்செல்வி, மு சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)