புதன், 14 நவம்பர், 2018

திருக்குறளில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்


ஆசிரியர்களின் விடா முயற்சி மற்றும் பணி அர்ப்பணிப்பால், அரசு பள்ளி மாணவர்கள் திருக்குறளில் பல்வேறு சாதனை புரிந்து வருவது பெற்றோர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.

 மீஞ்சூர் ஒன்றியம், ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ப்ரி கே.ஜி., முதல், 5ம் வகுப்பு வரை, 74 மாணவர்கள் உள்ளனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள். மற்ற பள்ளிகளுக்கு முன் மாதிரியாக இருந்து வருகின்றனர்.திருக்குறளில் உள்ள, 1,330 குறள்களையும் அதிகாரங்களின் வரிசையிலும், எண்களின் வரிசையிலும் உச்சரிப்பு பிழையின்றி சொல்லி அசத்துகின்றனர். திருக்குறள் துவங்கும், முடியும் வார்த்தை என. எப்படி கேட்டாலும், அந்த குறளினை முழுமையாக கூறுகின்றனர்.மூன்று ஆண்டுகளாக, இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேமா, உதவி ஆசிரியர் கனிமொழி, பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் சங்கீதா ஆகியோரின் பணி அர்ப்பணிப்பால், மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர். 
கடந்த மாதம், உலக திருக்குறள் மையம் சார்பில் நடந்த போட்டியில், இப்பள்ளியைச் சேர்ந்த, 21 மாணவர்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்று உள்ளனர்.'ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்சில்' இடம் பிடித்து உள்ளனர். மேலும், திருக்குறள் ஞாயிறு, திருக்குறள் பிஞ்சு என, பல்வேறு பட்டங்களையும் பெற்று உள்ளனர். 'லிம்கா ரெக்கார்ட்சில்' இடம் பெற தற்போது தீவிர பயிற்சியில் உள்ளனர்.