ஜனவரி 18,
வரலாற்றில் இன்று.
குமாரசுவாமி புலவர் பிறந்த தினம் இன்று.
வரலாற்றில் இன்று.
குமாரசுவாமி புலவர் பிறந்த தினம் இன்று.
தமிழின் இலக்கண, இலக்கியத்திற்கு சிறந்த பங்காற்றிய குமாரசுவாமி புலவர் இலங்கையில் 1854ஆம் ஆண்டு ஜனவரி 18இல் பிறந்தவர். தமிழ் மொழியின் மீது இவருக்கிருந்த பற்றின் காரணமாக இலக்கியம், இலக்கணம், செய்யுள், காப்பியம் போன்றவற்றை மூத்த தமிழறிஞரிடம் தேடிச் சென்று கற்றார். புலவர் ஆறுமுக நாவலர் இவரது நண்பராவார். 1902ஆம் ஆண்டு பாண்டித்துரை தேவரால் உருவாக்கப்பட்ட மதுரை தமிழ் சங்கத்தின் செந்தமிழ் இதழிற்கு கட்டுரைகள் எழுதியுள்ளார். வடமொழியிலும் புலமை பெற்ற இவர், வடமொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். பதிகம், சிற்றிலக்கிய நூல்கள், உரைநடை நூல்கள் ஆகியவற்றை படைத்துள்ளார்.