ஞாயிறு, 28 ஜூன், 2020

*🌐ஜூன் 28, வரலாற்றில் இன்று:ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு உதவியதற்காக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 28, வரலாற்றில் இன்று.

ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு உதவியதற்காக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பிறந்த தினம் இன்று.

பேராசிரியர் முகமது யூனுஸ் (பிறப்பு – ஜூன் 28 1940 சிட்டகொங், வங்காளதேசம்) வங்காளதேசத்தினைச் சேர்ந்த வங்கி முதல்வரும், பொருளியலாளருமாவார். சிறுகடன் எனும் திட்டத்தை தோற்றுவித்தவரும், நடைமுறைப்படுத்தியவருமாவார்.

ஏழைத் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் சிறு தொகைக்கடனே சிறுகடன் (microcredit) ஆகும். கிராமின் வங்கியின் தோற்றுவிப்பாளரும் ‘Banker to the Poor’ எனும் நூலின் ஆசிரியருமாவார். ஏழை மக்களின் பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டமைக்காக 2006 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு இவருக்கும், இவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, உலக உணவு விருது உட்பட பல பன்னாட்டு, தேசிய விருதுகளையும் யூனுஸ் பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக