புதன், 6 மே, 2020

மே 6, வரலாற்றில் இன்று.

மிர்துலா சாராபாய் பிறந்த தினம் இன்று.

 மிர்துலா சாராபாய் ( 6 மே 1911 -  26 அக்டோபர் 1974) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.

 அகமதாபாத்தில் பிறந்த இவர் வளமான தொழில் அதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அம்பாலால் சாராபாய், சரியா தேவி  அவருடைய பெற்றோர்கள்.

மேலும் இவர் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை
விக்ரம் சாராபாய் அவர்களின் சகோதரி ஆவார்.

இவர் பள்ளிக்குப் போகாமலே இல்லத்தில் இருந்து கல்வி பயின்றார்.இருப்பினும் 1928 இல் குஜராத் வித்யாபீத்தில் சேர்ந்து, இடையிலேயே கல்வியை நிறுத்திவிட்டு உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டார். மகாத்மா காந்தியின் அழைப்பை அடுத்து அயல்நாட்டுப் பொருள்கள், நிறுவனங்கள் முதலியவற்றைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்கினார். எனவே வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பை மறுத்தார்.