ஞாயிறு, 10 மே, 2020

மே 10, வரலாற்றில் இன்று.

உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் இன்று.

உலகம் முழுவதும் பல்லுறுப்பு நோயால் 50 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் ஆண்டு தோறும் மே 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்த பல்லுறுப்பு நோயானது தோல் மட்டுமில்லாமல் சிறுநீரகம், மூளை, இதயம், நுரையீரல், கண்கள் போன்ற உள்ளுறுப்புகளையும் எலும்புகளையும் தாக்குகிறது. தேவையில்லாத சில மருந்துகளை உட்கொள்ளுதல், கிருமி தொற்று, உணவுப் பழக்கம் போன்ற காரணங்களாலும் மரபு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது. ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால், அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். தீராத காய்ச்சல், அதிகமாக முடி உதிர்தல், வாய்ப்புண்கள், சோர்வு நிலை, ரத்த சோகை, தோலில் புதிய சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.