திங்கள், 25 நவம்பர், 2019

நவம்பர் 25,
வரலாற்றில் இன்று.


கார்ல் பென்ஸ் பிறந்த தினம் இன்று.


தற்போது உலகில் புகழ்பெற்ற நான்கு சக்கர வாகனங்களில் ஒன்றான பென்ஸ் காரை உருவாக்கிய கார்ல் பென்ஸ், ஜெர்மன் நாட்டின் பாடன் எனும் ஊரில் 1844ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று  பிறந்தார்.

 இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணி செய்த பின்பு, மனிதனின் துணையின்றி  இயங்கும் வாகனத்தை உருவாக்க எண்ணினார். தனது மனைவி பெர்தா பென்சின் உதவியுடன் இரண்டு ஸ்ட்ரோக் என்ஜினை உருவாக்கி, 1879ஆம் ஆண்டு காப்புரிமை பெற்றார்.

 மேலும் கார்புரேட்டர், கிளட்ச், கியர் சிஃப்ட், ரேடியேடர் போன்றவற்றையும் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார்.

 1885ஆம் ஆண்டு பெட்ரோலில் இயங்கும் நான்கு ஸ்ட்ரோக் என்ஜினை உருவாக்கினார்.

மூன்று சக்கர வாகனமான இதற்கு பென்ஸ் வேகன் என்று பெயரிட்டார். இவர் உருவாக்கிய பயணிகள் வாகனத்தின் இன்றைய மேம்பட்ட வடிவமாக அதி நவீன வசதிகள் கொண்ட பென்ஸ் கார்களை இன்று சாலையில் காண முடிகிறது.