புதன், 25 ஏப்ரல், 2018

வேண்டுகோள்~ நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் அன்பான மறவர்களே!மறத்தியரே!! மே 8இல் சென்னையில் ஒன்று கூடுக!!!


மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படல் வேண்டும்  என்று வலியுறுத்தி நம்முன்னோடிகள் போராட்டம் தொடங்கியப்பொழுது தமிழகத்தின்  முதலமைச்சர்.மாண்புமிகு. டாக்டர்  எம்.ஜி.ஆர் அவர்கள்.

 ஒன்றுபட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெற்றப்
பொழுது தமிழகத்தின்  முதலமைச்சர் மாண்புமிகு .ஜானகி இராமச்சந்திரன் அவர்கள்.

 போராட்டம்உச்சபட்ச கொதிநிலையை எட்டியப்பொழுது தமிழகத்தில் மேதகு குடியரசுத்தலைவர்ஆட்சி.தமிழகத்தின் ஆளுநர் டாக்டர்.பி.சி.அலெக்சாண்டர்அவர்கள்.

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இல்லாதநிலையிலும் தமிழக ஆளுநரும்,தலைமைச்செயலாளரும் ஏவிய  எல்லாவிதமான அச்சுறுத்தல்களையும் துச்சமென மதித்து ஒன்றுபட்டு போராடி தமிழகத்தின் ஆளுநர் அரசை பணியச்செய்து  போராட்டத்தை அச்சுறுத்திய  தமிழகத்தின்தலைமைச்செயலாளருடன் உடன்பாடு கண்டனர் நம்முன்னோர்.

ஒன்றுபட்டு 1988இல் போராடியதால்  மத்தியஊதியம்,ஒருமாத போனஸ்ஆகியகோரிக்கைகளைதேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பரிசீலிக்கும் என உடன்பாடு 22.07.1988அன்று  கையெழுத்தானது.

தமிழக
மக்களால்தேர்ந்தெடுக்கபட்ட அரசு நம் கோரிக்கைகளுக்கு ஆதரவுநல்கிய மாண்புமிகு. டாக்டர்.கலைஞர் தலைமையில் அமைந்தது.

தமிழக முதல்வர்.டாக்டர்.
கலைஞர்அவர்கள் தனது  தேர்தல் வாக்குறுதியின்படி மத்திய ஊதியம் வழங்கினார்கள்.

இன்றையநாள் வரையிலும் மத்திய ஊதியத்தினை தமிழகத்தின்  ஆசிரியர்களும்,அரசு ஊழியர்களும் பெறுகின்றனர் என்றால் அதற்கு அடிப்படையான காரணம் நம்முன்னோர்களின் தியாகம்நிறைந்த போராட்டங்களும்,நம்முன்னோர்களின் போராட்டங்களை ஆதரித்து ஆதரவு போராட்டங்கள்
நடத்தியும், ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு மத்தியஊதியம் வழங்கிய டாக்டர்.கலைஞர் அவர்களின் நற்ச் செய்கையுமே  ஆகும். 

இத்தகு போராட்டப்பாரம்பரியமும்,வரலாற்றுப்பெருமையும் கொண்ட நாம் நம் முன்னோர்களை நினைவில்கொண்டு, பொதுச்செயலாளர்.பாவலர்.அய்யா அவர்களின் வழிகாட்டுதலில்  எதிர்வரும் 08.05.18இல்  ஒன்றுகூடுவோம்;
சென்னையை
முற்றுகையிடுவோம்;
வென்றுகாட்டுவோம்.
                   நன்றி.
           ~முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக