ஞாயிறு, 17 டிசம்பர், 2017

திறன் தேர்வு: 1.45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!



தமிழகம் முழுவதும் தேசிய வருவாய் வழி, திறன்
படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (டிசம்பர் 16) நடைபெற்றது.

பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான (NMMS) திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மழையால் பல்வேறு மாவட்டங்களில் பணிகள் பாதிக்கப்பட்டதால், தேர்வு டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் திறன் தேர்வு நடைபெற்றது. அதற்காகத் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், 503 மையங்கள் அமைக்கப்பட்டது. சுமார் 1,45,996 மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். காலை 9.30 மணி முதல் 11.30 வரை முதல் தாள், காலை 11.30 முதல் பகல் 1 மணி வரை இரண்டாம் தாள் என இரு தாள்களாகத் தேர்வு நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக