இந்தியாவில் இனி பேஸ்புக்
பயன்படுத்துவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.
இந்தியாவில் 24.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் பேஸ்புக் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பேஸ்புக் கணக்குகளில் ஏராளமானவை போலியானவை என தெரிய வந்துள்ளது. இத்தகைய போலி கணக்குகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக, பேஸ்புக் பயன்படுத்துவோரின் ஆதார் எண்ணை வைத்து, அவர் உண்மையான பெயரில் தான் கணக்கு வைத்துள்ளாரா என பேஸ்புக் சரிபார்க்க முடிவு செய்துள்ளது.
மொபைல் பேஸ்புக் இணையதளத்தில் இது சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, புதிதாக பேஸ்புக் கணக்கு துவங்கியவர்களிடம் ஆதார் அட்டையில் உள்ளது போன்று உங்களின் பெயரை பதிவு செய்யுங்கள். அது உங்களை அடையாளம் காண உங்கள் நண்பர்களுக்கு எளிதாக என தெரிவிக்கப்பட உள்ளது. ரெட்டிட், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக