வியாழன், 30 ஏப்ரல், 2020

கொரோனா காலத்தில்
வேறு மாநிலங்களில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள்
 தமது சொந்த மாநிலத்துக்குத் திரும்பலாம்!மத்தியரசு அனுமதி ஆணை வெளியீீடு!



ஊரடங்கின் காரணமாக வெவ்வேறு இடங்களில் மாட்டிக்கொண்டிருக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள், திருத்தலப் பயணிகள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், மற்றும் சிலரை சொந்த மாநிலத்துக்கு அனுப்புவதற்கான திட்டமிடலாம் எனவும், அந்தந்த மாநிலங்கள் இதற்கென அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் மைய அரசு சற்று முன் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

தமது மாநிலத்தில் உள்ள வேற்று மாநிலத்தவர்களை பதிவு செய்யவும், வேண்டுகிற நபர்களை வேற்று மாநிலத்துக்கு அனுப்பவும், வேற்று மாநிலத்திலிருந்து வருகிறவர்களைப் பெறவும் தேவையான விழமுறைகளை வகுக்கலாம்.
 இதற்காக அந்தந்த மாநிலங்களின் அதிகாரிகள் தமக்கிடையே ஆலோசித்து ஒப்புக்கொள்ளலாம்.

அவ்வாறு செல்பவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு, அறிகுறி இல்லாமல் இருந்தால் மட்டுமே அனுப்பப்படுவார்கள்.
போய்ச் சேருகிற இடத்திலும் பரிசோதனை செய்யப்பட்டு தேவையைப் பொறுத்து வீட்டு குவாரன்டைன் அல்லது மருத்துவமனை குவாரன்டைனில் வைக்கப்பட வேண்டும்.

இது போன்றுபல்வேறு வழிகாட்டுதல்களை மத்தியஅரசு வழங்கி உள்ளது.