*🌷மாணவர்களின் எடையில் 10% மட்டுமே புத்தகப் பையின் எடை; 2-ம் வகுப்பு வரை நோ வீட்டுப்பாடம்- மத்தியக் கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்கள் :*
*2-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதைத் தவிர்க்கலாம் என்றும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் புத்தகப் பையின் சுமை, அவர்களது எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என மத்தியக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.*
*இதுதொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அனைத்து மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களுக்கும் பள்ளிப் புத்தகப் பை 2020 (School Bag Policy 2020) என்ற பெயரில் அறிவுறுத்தல்களோடு கூறிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.*
*அதில் கூறப்பட்டுள்ளதாவது:*
*புதிய கல்விக் கொள்கையின்படி என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ, கேவிஎஸ், என்விஎஸ் ஆகியவை இணைந்து புத்தகப் பை தொடர்பாக ஆராய வல்லுநர் குழுவை அமைத்தன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.*
*ஒவ்வொரு மாணவரும் 6 - 8 ஆம் வகுப்பில் வேடிக்கையான படிப்பைத்தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உள்ளூர்த் தேவைகளுக்கு ஏற்ப கைவினைத் தொழில், தச்சு, மின்சார வேலை, உலோக வேலை, தோட்ட வேலை ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.*
*ஆண்டுதோறும் 6 - 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் புத்தகப் பை இல்லாத தினங்களைப் பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும்.*
*அதேபோல புத்தகப் பையின் எடையைத் தொடர்ந்து, சீராகக் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தின் எடையையும் அதன் மீது குறிப்பிட வேண்டும்.*
*மழலையர் வகுப்பு மாணவர்களுக்குப் புத்தகப் பை கூடாது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் புத்தகப் பையின் சுமை, அவர்களது எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும்.*
*தரமான மதிய உணவு மற்றும் நீர் ஆகியவற்றைப் பள்ளிகளிலேயே வழங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம்.*
*வீட்டுப்பாடம்:*
*இரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் வழங்குவதைத் தவிர்க்கலாம்.*
*3- 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களை, ஒரு வாரத்துக்கு அதிகபட்சம் 2 மணி நேரங்கள் வீட்டுப் பாடம் செய்ய அனுமதிக்கலாம்.*
*6- 8 ஆம் வகுப்பு வரை தினந்தோறும் ஒரு மணி நேரம் என்ற அளவில் ஒரு வாரத்துக்கு அதிகபட்சம் 5 அல்லது 6 மணி நேரங்கள் வீட்டுப் பாடம் செய்ய அனுமதிக்கலாம்.*
*9- 12 ஆம் வகுப்பு வரை தினந்தோறும் இரண்டு மணி நேரங்கள் என்ற அளவில் ஒரு வாரத்துக்கு அதிகபட்சம் 10 அல்லது 12 மணி நேரங்கள் வீட்டுப் பாடம் அளிக்கலாம்.*
*ஆசிரியர்களும் பள்ளி முதல்வர்களும் இயந்திரத்தனமான வீட்டுப் பாடங்களை அளிக்காமல், படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக வீட்டுப் பாடங்கள் கொடுக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்''.*
*இவ்வாறு மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக