புதன், 26 டிசம்பர், 2018

தவறான பேங்க் அக்கவுண்டில் பணம் சென்று விட்டால் அதை எப்படி திரும்பி பெறுவது?

ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்யும் போது, அக்கவுண்ட் நம்பர் என்டர் செய்யும்போது தவறுதலாக ஒன்று அல்லது இரண்டு நம்பரை மாற்றி போட்டு விடுகிறோம்,இதனால் நாம் அனுப்பிய பணம் வேறு ஒரு நபருக்கு சென்று விடுகிறது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் பல பேர் அவர்கள் பணத்தை பறி கொடுத்தது இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்வது என்பதே தெரியாமல் போய்விடுகிறது. அப்படி நினைக்காமல் நீங்கள் உங்கள் பணத்தை  திரும்பபெறலாம்.

இதற்கு நீங்கள் தவறுதலாக வேறு ஒருவரின் அக்கவுண்டில் பணம் அனுப்பி விட்டிர்கள் என்றால், முதலில் இதை பற்றி பேங்க் மேனேஜரிடம் சென்று இந்த தகவலை வழங்க வேண்டும்.

மேனேஜரிடம் உங்கள் அக்கவுண்ட் நம்பர்,இதனுடன் எந்த அக்கவுண்டில் பணம் அனுப்பினீர்களோ அந்த அக்கவுண்ட் நம்பர், தேதி, நேரம் மற்றும் பணம் எவ்வளவு மதிப்பு என்பதை பற்றி தகவல் வழங்க வேண்டும்.

இதன் பிறகு, நீங்கள் பணத்தை எந்த பேங்கில் அனுப்பினீர்களோ அந்த பேங்கை தொடர்பு கொள்ள வேண்டும். பிறகு, உங்கள் பணத்தை திரும்பப் பெற வாடிக்கையாளர் இடம் இருந்து திரும்பி தர அனுமதி அளிக்கும் , இதனுடன் பேங்க் முழு நடவடிக்கையும் எடுத்து உங்கள் பணத்தை அந்த நபரிடம் இருந்து வாங்கி தந்து விடும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக