ஞாயிறு, 4 நவம்பர், 2018

ஸ்மார்ட்போன் அதிக நேரம் உபயோகித்தால் கேன்சர் அபாயம் உண்டு

ஸ்மார்ட்போன்களில் RFR எனும் ரேடியோ கதிர்வீச்சு அதிகளவில் இருப்பதால் அதை அதிகம் பயன்படுத்துவோருக்கு இதயம், மூளை மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் புற்றுநோய் கட்டிகள் வர வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



அமெரிக்காவைச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்ட்டியூட் என்னும் ஆராய்ச்சி நிறுவனம், ரேடியோ கதிர்களின் விளைவுகள் குறித்து NTP (National Toxicology Programme) எனும் ஆராய்ச்சியை மேற்கொண்டது.



அந்த ஆராய்ச்சியில் எலிகளின் உடலில் ரேடியோ கதிர்களைச் செலுத்தி அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சோதனை செய்தது.




சோதனையின் முடிவில் RFR கதிர்வீச்சின் பாதிப்பால் ஆண் எலிகளுக்கு இதயம், மூளை மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் புற்றுநோய் கட்டிகள் உண்டாகின.



ஆனால், பெண் எலிகளுக்குக் குறைவான அளவிலேயே பாதிப்புகள் உண்டானது.



இந்த ஆராய்ச்சி குறித்து பேசிய ஜான் பச்சர் (NTPயின் ஆராய்ச்சியாளர்), “இந்த ஆராய்ச்சியில் எலிகளுக்கு ஏற்பட்ட விளைவுகளையும், ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மனிதர்களும் ஏற்படும் விளைவுகளையும் நேரடியாகத் தொடர்புபடுத்த முடியாது.



ஏனெனில் இந்தச் சோதனையின்போது எலிகளுக்கு உடல் முழுவதும் ரேடியோ கதிர்வீச்சுகள் செலுத்தப்பட்டது.



ஆனால், மனிதர்கள் விஷயத்தில் அவர்கள் எந்த இடத்தில் ஸ்மார்ட்போன்களை அதிகம் வைக்கிறார்களோ அங்கு இவ்வகை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.



இந்த ஆராய்ச்சியின் முடிவில் ஆண் எலிகளுக்கு ஏற்பட்ட விளைவுகளே மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாக நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.