சனி, 20 அக்டோபர், 2018

மூளைகாய்ச்சல் விழிப்புணர்வு பள்ளிகளில் நடத்த அரசு உத்தரவு

🔥🔥🔥மூளை காய்ச்சல் விழிப்புணர்வு : பள்ளிகளில் நடத்த உத்தரவு


💥💥தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில்,
மூளை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த
பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, சமக்ர
சிக் ஷா திட்டத்தின் கீழ், தொடக்கப் பள்ளிகளில், சிறப்பு குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேவையான சிறப்பு வசதிகள், மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ், ஆண்டு தோறும் மூளை காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டும், மூளை காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை நடத்த, அனைத்து தொடக்கப் பள்ளிகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரிகள், சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து, வட்டார வாரியாக முகாம்களை நடத்த வேண்டும்.'தன் சுத்தம், சுகாதாரம், மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான உணவு முறை, மூளை காய்ச்சல் ஆகியவை குறித்து, முகாம்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என சமக்ர சிக் ஷா திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுஉள்ளது.