சனி, 28 ஏப்ரல், 2018

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு முழுத்தகுதி பெற்ற அரசு நகராட்சி/ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் (Seniority List) தயார் செய்து அனுப்பக் கோருதல் சார்பு...

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடஉயர்வு மாறுதல் சார்ந்த படிவங்கள்...

மாணவர்கள் பாதுகாப்பு சார்பான முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகள்...

தகவல் தொழில்நுட்ப பயிலரங்கு (28-04-18~ நாமக்கல்) அழைப்பிதழ்...


ஆசிரியர் மன்றத்தினருக்கு வணக்கம்.

தகவல் தொழில் நுட்ப பயிலரங்குக்கு நாமக்கல் வருகை தரும்  அனைவரையும் மாவட்ட இணையக்குழுவின் சார்பில்  அன்புடன் வரவேற்கிறேன்.

தங்களுக்கு சில தகவல்கள் தெரிவிக்கிறேன்.

1)நாமக்கல் நகரப்பேருந்து நிலையத்தில் இருந்து  வளையப்பட்டி,
காட்டுப்புத்தூர்,செவிந்திப்பட்டி மற்றும்
தொட்டியம் செல்லும் நகரப்பேருந்துகளில் ஏறி திருச்சிசாலை -ஆண்டவர்பெட்ரோல்பங்கு என கேட்டு இறங்கிக்கொள்ளலாம்.பெட்ரோல்பங்குக்கு வடக்கு பக்கத்தில் பொன்விழா நகர் நுழைவு வாயில் அமைந்துள்ளது.
நுழைவு வாயிலிலேயே பள்ளியின் பெயர்ப்பலகை இருக்கிறது.
நுழைவு வாயில் வழியில் பயணித்து இரண்டாவது வடக்குபக்கச் சந்தில் திரும்பினால் பள்ளி வரவேற்கும்.எனவே எளிதாக பயிலரங்கிற்கு வரலாம்.

2)நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து(நாம் அடிக்கடி போராடும் இடத்தில் இருந்து) திருச்சிசாலை  ஷேர் ஆட்டோவில் பயணித்து பொன்விழாநகர்
நுழைவுவாயில் இறங்கிக்கொள்ளலாம்.

3)ஒன்றியத்தில் இருந்து குழுவாக பேருந்தில் பயணித்து  வருபவர் பேருந்து நிலையம் அடைவதற்கு முன்பாக ஈஷாகால்டாக்ஸிக்கு    அலைபேசி எண்7548884999 போன்செய்து பேருந்து நிறுத்தம் டூ மாருதிநகர் நடுநிலைப்பள்ளி என கூறி புக்செய்துக்கொள்ளலாம்.கார் டிரைவர் அழைப்பார். அவர் நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு வெளியே நிற்கச்சொல்லும் இடத்தில் நின்றால் பிக்கப் செய்து மாருதிநகர் பள்ளியிலேயே டிராப் செய்து அதாவது இறக்கி விட்டுவிடுவார்.கட்டணம்ரூ50/மட்டுமேயாகும்.

4)நாமக்கல் பேருந்து நிலையம் - மாருதிநகர் பள்ளி வரையிலான பயண உதவிகளுக்கு தேவையெனில்  எங்களைத்தொடர்பு கொள்ளுங்கள்.

திரு.மெ.சங்கர்
( 9443217553 ) ,

திரு.அ.ஜெயக்குமார்
( 9843180162 ) ,

திரு.த.தண்டபாணி  
( 94434 81828 ),

திருமதி.கு.பாரதி 
( 9843180162 ),

திருமதி.
பொன்.திலகம்
( 9486574127 ),

திருமதி.
ந.தங்கம்மாள் 
( 9486263631 )

ஆகியோரை தேவையெனில்  தொடர்புக்கொள்ளுங்கள்.

தங்களை பயிலரங்கிற்கு  எதிர்நோக்குகிறேன்.

-மெ.சங்கர்,
அமைப்பாளர்-மாவட்ட இணையக்குழு.

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட GMail...


கூகுளின் ஜிமெயில் சேவையில் பல்வேறு புதிய வசதிகள் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட நிலையில், இவை வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகின்றன.

கூகுளின் ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் போன்ற வசதிகள் சோதனை செய்யப்படுவது சமீபத்தில் தெரியவந்த நிலையில், இவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை இணைப்பது புதிய பட்டன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது.

புதிய அப்டேட் மூலம் இனி முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களுக்கு குவிக் ரிமைன்டர்ஸ் மூலம் உடனடியாக பதில் அனுப்ப முடியும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்றே ஜிமெயில் வெப் சேவையிலும் ஸ்மார்ட் ரிப்ளைஸ் (Smart Replies) வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு குறுந்தகவல்களை வேகமாக பதில் அனுப்ப முடியும்.

இதேபோன்று அவசியமற்ற நியூஸ்லெட்டர்களுக்கு எப்போது அன்-சப்ஸ்கிரைப் (UnSubscribe) செய்ய வேண்டும் என்பதை ஜிமெயில் பரிந்துரை செய்யும். இத்துடன் ஆபத்து நிறைந்த மின்னஞ்சல்கள் வரும் போது எச்சரிக்கை செய்யும். மேலும் ஜிமெயிலில் வழங்கப்பட்டு இருக்கும் கான்ஃபிடென்ஷியல் மோட் (Confidential Mode) மின்னஞ்சல்களை ஃபார்வேர்டு, காப்பி, டவுன்லோடு அல்லது பிரின்ட் செய்யவிடாமல் தடுக்கும்.

அதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை அனுப்பும் போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட மின்னஞ்சலில் நேரம் குறித்தவுடன் தானாக மறைந்து போகும் வசதியும் ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படுகிறது. ஜிமெயில் வெப் சேவையில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் சில வாடிக்கையாளர்களுக்கு சில புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் வழங்கப்படும். புதிய வசதிகளை பெற வாடிக்கையாளர்கள் ஜிமெயில் செட்டிங்ஸ் (Settings) -- டிரை தி நியூ ஜிமெயில் (Try the new Gmail) அம்சங்களை தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.

புதிய அம்சங்கள் வேண்டாம் என்போர் மீண்டும் செட்டிங்ஸ் -- கோ பேக் டு கிளாசிக் ஜிமெயில் (Go Back to Classic Gmail) ஆப்ஷன் சென்று பழைய ஜிமெயிலையே பயன்படுத்தலாம்.

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்~ மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை…

வியாழன், 26 ஏப்ரல், 2018

தொடக்கக் கல்வி- 01-08-2017 நிலவரப்படி அரசு மற்றும் நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் பணியிடங்கள் மாணவர்கள் எண்ணிக்கைக்குகேற்ப நிர்ணயம் செய்தல் - ஆய்வு கூட்டம் நடைபெறுதல் சார்ந்து...

தேர்வுகள் - விடைத்தாள் மதிப்பீடு - இடைநிலைப் பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 -விடைத்தாள் மதிப்பீட்டு பணி - மதிப்பீட்டு பணிக்கு அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள் பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல்-சார்பு..

அஞ்சல் துறை ஊழியர்கள் கதர் ஆடைகளை வார வேலைநாட்களில் ஒரு நாள் அணிந்து பணியாற்றுமாறு சுற்றறிக்கை...

அஞ்சல் துறை ஊழியர்கள் கதர் ஆடைகளை வார வேலைநாட்களில் ஒரு நாள் அணிந்து பணியாற்றுமாறு
மத்திய சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்திருந்தது . அதனடிப்படையில் அஞ்சல் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் ஒரு நாள் கதர் ஆடைகளை அணிந்து கிராமப்புற கைவிளைஞர்களின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு அஞ்சல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநில அஞ்சல் நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு...


12ஆம் வகுப்பு தேர்வு முடிவு - மே 16
11ஆம் வகுப்பு தேர்வு முடிவு – மே 30
10ஆம் வகுப்பு தேர்வு முடிவு – மே 23