வெள்ளி, 24 செப்டம்பர், 2021

வெண்ணந்தூர் உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணியில் இருந்து புதுச்சத்திரம் ஒன்றிய இடைநிலை ஆசிரியர்களை விடுவித்திடுக! நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஆசிரியர் மன்றம் கோரிக்கை!

 


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எலச்சிபாளையம் ஒன்றியக் கிளையின் செயற்குழுக் கூட்டம் 23.09.2021

 





தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் 

எலச்சிபாளையம் ஒன்றியக் கிளையின் செயற்குழுக் கூட்டம் வேலகவுண்டம்பட்டி 

மன்ற அலுவலகத்தில் இன்று (23.09.2021) பிற்பகல் 4.00 மணிக்கு வட்டாரத் தலைவர் திருமதி.சு.பேபி அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாநில செயலாளர் திரு. முருக செல்வராசன்

மாவட்ட செயலாளர் திரு. மெ.சங்கர்

மாவட்ட கொள்கை விளக்க செயலாளர் திரு. க.தங்கவேல்

மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ஆர்.ரவிக்குமார்

மாவட்ட துணை செயலாளர் திரு. க.வடிவேல்

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு. சு.செல்வகுமார் 

வட்டார மகளிர் அணி செயலாளர் திருமதி. ப.சுமதி

வட்டார பொருளாளர் திரு.தே.மணிகண்டன்

வட்டார செயலாளர் திரு. பெ.சிவக்குமார்

வட்டார துணை தலைவர் திரு .கு.துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்....

வியாழன், 23 செப்டம்பர், 2021

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வருகிற ஞாயிற்றுக்கிழமை 26-9-2021 தமிழகம் முழுவதும் மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம்

 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வருகிற ஞாயிற்றுக்கிழமை 26-9-2021 தமிழகம் முழுவதும் மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும்



1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?- கல்வி அமைச்சர் பேட்டி

1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை:


தமிழகத்தில் 1 - 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.


கோவையில் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது: 


1 முதல் 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. 


பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 


ஊரடங்கு தளர்வு குறித்து சுகாதார நிபுணர்களுடன் ஆலோசிக்கும் போது, 


பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும்.


பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் வலியுறுத்துகின்றன. 


கோவிட் அச்சம் காரணமாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். 


கோவிட் பரவல் கட்டுக்குள் இருப்பது பொறுத்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். 


இவ்வாறு அவர் கூறினார்

சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு CPS திட்டம் பொருந்தாது. இதுவரை பிடித்தம் செய்த பணத்தை ஊழியர்களுக்கு வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.

 


இணை இயக்குநர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD GO

இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் செய்து உத்தரவு



 

புதன், 22 செப்டம்பர், 2021

Fit India Movement Quiz போட்டியில் பங்கேற்பது குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 

CLICK HERE TO DOWNLOAD

விடுப்பின் போது அனுமதிக்கப்படும் வீட்டு வாடகைப் படி - அடிப்படை விதி 44 ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O.(Ms)No.89 date 09.09.2021

 முக்கிய குறிப்பு:

இந்த அரசாணையின் படி சில வலைதளங்களில் மகப்பேறு விடுப்பு எடுக்கும் ஆசிரியைகளுக்கு வீட்டு வாடகைப்படி இல்லை என்ற தகவல் தவறுதலாக பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை யாதெனில்

9 மாதங்களுக்கு மேல் விடுப்பில் இருப்பவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று இருந்த சட்ட வரம்புக்குள் மகப்பேறு விடுப்பு இருந்து வந்தது.

தற்போது மகப்பேறு விடுப்பு ஓராண்டு காலம் என நீடித்ததால் விதி எண் 101 a ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.



வீட்டு வாடகை படி பிடித்தம் செய்ய படத்தக்க விடுப்புகள் பட்டியலிலிருந்து மகப்பேறு விடுப்புக்கான ஓராண்டு கால விடுப்பினை நீக்கியுள்ளனர்.


எனவே ஓராண்டு காலம் மகப்பேறு விடுப்பு எடுக்கும் ஆசிரியைகளுக்கு எப்போதும் போல் வீட்டு வாடகைப்படி தொடரும்


CLICK HERE TO DOWNLOAD GO