புதன், 19 ஜூன், 2019

2019-20ம் கல்வியாண்டில் பள்ளிகளில் இடஒதுக்கீட்டு முறையில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்: 23.05.2019



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை) புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை _கலந்தாய்வு கூட்டச் செய்திகள் இன்றைய நாளேடுகளில்...



இந்திய மாணவர் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம்_ புதிய தேசிய வரைவு கல்விக்கொள்கையை தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளது

வணக்கம்.
இன்றைய தேவையை ஓரளவேனும்  நிறைவு செய்திடும்  நற்செயல்களில்
 இவ் வெளியீடு முதன்மையானது;
முக்கியமானது.
காலத்தின் தேவையை  நிறைவு செய்தவர்கள் நினைவில் 
நிற்க தகுந்தவர்கள்.
இந்திய மாணவர் சங்கம்,
பாரதி புத்தகலாயம்,
மொழி பெயர்ப்பாளர்கள், வெளியீட்டாளர்கள் ஆகியோரின் பணிகளுக்கு மனம் நிறைந்த இனிய பாராட்டும், அன்புவாழ்த்தும் ...

Click here on Tamil version...

மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் தூய்மை சார்ந்த வாசகங்களை சுவற்றில் எழுதுதல் சார்ந்த மாநில திட்ட இயக்குநரின் கடிதம்


2 ஆண்டுக்கு எடுத்த காப்பீட்டில் வரிச்சலுகை பெறுவது எப்படி?

கல்வி தொலைக்காட்சி இப்போது மொபைல் ஆப் வடிவில்...

கொல்லிமலை அரசு பண்ணையில் பழச்செடி விற்பனை...

பிஇ, பிடெக் கவுன்சலிங் 25ம் தேதி தொடங்கும் ~ உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு…

செவ்வாய், 18 ஜூன், 2019

👍👏இந்திய அளவில் முதலிடம் பிடித்த 'தமிழ்வாழ்க'ஹேஷ்டேக்*

*👍👏இந்திய அளவில் முதலிடம் பிடித்த 'தமிழ்வாழ்க'ஹேஷ்டேக்*


*மக்களவையில் தமிழக எம்பிக்கள் தமிழ் வாழ்க முழக்கமிட்டு பதவி பிரமாணம் செய்ததால், இந்திய அளவில் தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.*


*நேற்று முதல் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர்.  தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிகள் இன்று பதவியேற்றனர்.*


 *மக்களவையின் தற்காலிக சபாநாயகர் வீரேந்திரக் குமார் எம்.பி.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழக எம்.பிக்கள் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.*


 *தயாநிதி மாறன்  “வாழ்க தமிழ்“, “வாழ்க கலைஞர்“, “வாழ்க பெரியார்“ என்ற முழக்கத்துடன் பதவியேற்று கொண்டனர். கனிமொழி  “வாழ்க தமிழ்“, “வாழ்க பெரியார்என்று பதவியேற்றார்.*

*அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரும், தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் குமார், எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க என்றும், வந்தே மாதரம்,  ஜெய்ஹிந்த் என்றும் முழக்கமிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், வாழ்க அம்பேத்கர், பெரியாரியம்.. வளர்க ஜனநாயக சமத்துவம்” என்றார். இந்நிலையில், தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.*

நீட்'டை மையப்படுத்திக் கல்வியைத் திட்டமிடுவது அனைத்தையும் பாதிக்கும்.*

*🌷'நீட்'டை மையப்படுத்திக் கல்வியைத்  திட்டமிடுவது அனைத்தையும்  பாதிக்கும்.*

*மு.சிவகுருநாதன்*

          *இவ்வாண்டு 10, +1, +2 ஆகிய வகுப்புகளில் தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.*

       *அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடத்தில் +1, +2 ஐப் போன்று ஒருதாள் முறை என்னும் அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றிருக்க வேண்டிய இச்செயலை இப்போதேனும் செய்ய முன்வந்ததற்கு அரசைப் பாராட்டலாம். பொதுத்தேர்வு இல்லை என்பதால் ஒன்பதாம் வகுப்பிற்கு இம்முறையை அமலாக்க மறுக்க வேண்டாம். பத்தாம் வகுப்பில் என்ன நடைமுறையே அதை  ஒன்பதாம் வகுப்பிலும் அமல்படுத்துவதே நல்லது.*

       *முன்பு கசியவிடப்பட்ட +1, +2 வகுப்புகளில் மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டில் ஒன்று விருப்பப்பாடமாக மாற்றப்படும் என்கிற அறிவிப்பு சற்று மாற்றப்பட்டு இப்போது வந்துள்ளது.*


        *கணிதவியல், உயிரியல் ஆகிய படங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு  செய்யும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மருத்துவம் படிக்க விரும்புவோர் உயிரியல் பாடத்தையும்  பொறியியல் படிக்க விரும்புவோர் கணிதவியல் படத்தையும் தேர்வு செய்யலாம் என்று சொல்கிறார்கள்.*


        *இது மிகவும் மோசமான நடைமுறை. இது மாணவர்களின் உரிமைகளையும் கல்வி வாய்ப்புகளையும் திட்டமிட்டுப் பறிக்கும் செயலாகும்.*


      *பத்தாம் வகுப்பில் ஒரு மாணவர் தனது எதிர்காலத்தை எப்படி முடிவு செய்யமுடியும்?  இருக்கின்ற குறைந்தபட்ச மருத்துவ இடங்களுக்கு முயன்றுத் தோற்றலும் கணிதவியல் பாடம் படித்திருந்தால்  வேறு நல்ல படிப்புகளைத் தேர்வுசெய்து வாழ்க்கைப்பாதையை நன்றாக வேறு வழிகளில் செலுத்தமுடியும்.*

       *மோடி அரசியல் முந்தைய திட்டத்தை  தமிழக அரசு வேறு முறைகளில் செயல்படுத்தத் துடிப்பது தெரிகிறது.*

     *எட்டாம் வகுப்பில்  திறன் குறைந்தவர்களை தொழில்கல்விக்கு அனுப்பும் 'நவீன குலக்கல்வித்திட்டம்', ஒன்று மத்திய அரசிடம் உள்ளது. அதை அப்படியே நகலெடுக்கும் திட்டங்களை  தமிழகம்  செய்யக்கூடாது  என்பதே நமது எதிர்பார்ப்பு.*

   *முன்பு மொழி விருப்பப்பாடம் என்று செய்திகள் கசியவிடப்பட்டு உடன் மறுக்கப்பட்டதைப் போல தற்போதும் கல்வியமைச்சரால் மறுக்கப்பட்டுள்ளது.*

       *நேற்றைய செய்தித்தாள்களிலும் ஆலோசனை நடப்பதாக செய்தி வெளியானது. ஆழம் பார்க்கும் நடவடிக்கை அல்லது திசைதிருப்பல் போன்ற எதுவாயிருப்பினும் இது சரியல்ல.*


      *நெருப்பில்லாமல் புகையாது என்பார்களே, அதுபோல எதுவோ நடப்பது புரிகிறது.  நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எவரையும் கலந்தாலோசிக்காமல் இம்மாதிரியான அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்புடையது அல்ல.*


       *இன்னும் பாடநூல்கள் பள்ளிகளுக்கு அச்சிட்டு வழங்கப்படவில்லை, சென்ற கல்வியாண்டு மூன்றாம் பருவத்திலிருந்து மாணவர்களுக்குக் குறிப்பேடுகள் வழங்கப்படவில்லை என்பதுபோன்ற குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்க, திசை திருப்பும் உத்தியாக இதைச் செய்தாலும் மிகக் கொடிய ஒன்றுதான்.*

       *நீட்டை மையப்படுத்தியே கல்வி மற்றும் தேர்வுமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவருவதும் பாடநூல்களின் சுமையை அதிகரிப்பது கண்டனத்துக்கு உரியவை.*

  *ஆறாம் வகுப்பிலிருந்து இன்னும் சொல்லப்போனால் குழந்தையிலிருந்தே 'நீட் கோச்சிங்' என்ற கல்வி வியாபாரிகள், கோச்சிங் வியாபாரிகளுக்குத் தளமமைப்பதும் கல்வியை முற்றிலும் வணிகமயத்துள் தள்ளுவதும் மிகவும் அபாயகரமான போக்குகள்.*

    *இவை குறித்து உரிய ஆய்வுகள்  செய்யப்படுதல் அவசியமாகின்றது. கல்வி மற்றும் குழந்தைகளின் மீது விளையாடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்.  பெற்றோர்கள், குழந்தைகள், கல்வியாளர்கள்  ஆகியோரது  கருத்துகளும் செவிமெடுக்கப்பட வேண்டும்.*